ஆண்டவரே, உம்முடைய வார்த்தையின்படியே... 2 ஆண்டவரே, உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் AT THY WORD, LORD, I'LL LET DOWN THE NET 54-1207 செவ்வாய்க்கிழமை மாலை, டிசம்பர் 7, 1954 எண்டிகாட் ஜான்சன் ரிக்ரியேஷன் சென்டர், ஜான்சன் சிட்டி, நியூயார்க், அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் ஆண்டவரே, உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் (54-1207) மாலை வணக்கம், நண்பர்களே. இன்றிரவு பிங்காம்டனில் உள்ள இந்த அழகான அரங்கத்தில், நமது நிறைவு ஆராதனையை நடத்துவதற்காக இங்கு இருப்பது ஒரு பாக்கியம். கடந்த சில இரவுகளாக உங்களைப்போன்ற நல்ல மக்களுக்கு நடுவில் இருப்பது எனக்கு உண்மையாகவே பெருமகிழ்ச்சியாக இருந்தது என்று சொல்ல விரும்புகிறேன். என்றாவது ஒரு நாள் அவருடைய கிருபையால் நான் திரும்பி வந்து இன்னும் கொஞ்சம் காலம் உங்களுடன் இருக்க முடியும் என்று நான் தேவனை நம்புகிறேன். இப்போது, உங்கள் ஒவ்வொருவருடைய அன்புக்காகவும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் மிகவும் அன்பாக நடத்தப்பட்டேன். எல்லாவற்றையும், பரிசு களையும் நான் பாராட்டுகிறேன். சகோதரர் எனக்கு சில உடைகளை வாங்கிக் கொடுத்தார், பில்லி பாலுக்கு ஒரு பரிசைக் கொடுத்து, இரண்டு பெட்டி மிட்டாய்களை எங்களுக்கு அனுப்பி, எங்களுக்கு ஒரு அன்புக் காணிக்கையும் கொடுத்தார், இதற்கெல்லாம் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அதற்காக தேவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக. 2 நாங்கள் அதற்காக—அந்த நோக்கத்திற்காக வரவில்லை. நாங்கள் ஆசீர்வாதமாக இருக்கவும், ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளவுமே வந் தோம். உங்களைப்போன்ற நல்ல மக்களுடன் இருந்ததின் மூலம் நாங்கள் நிச்சயமாக ஒரு ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டோம். இப்போது, எனக்குத் தெரிந்தவரை, நான் நடத்தும் அடுத்த ஆராதனை சிகாகோ, இல்லினாய்ஸில் இருக்கும். அது ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் எங்காவது ஆரம்பித்து, அநேகமாக ஜனவரி மாதம் முழுவதிலும் மற்றும் பிப்ரவரி மாதத்தின் பெரும்பகுதியிலும் நீடிக்கும். திரும்பி வந்ததிலிருந்து, நோயாளிகளுக்காக ஜெபிப்பதிலேயே நான் முழு நேரமும் இருக்க வேண்டியதில்லாதபடி என் கூட்டங்களை அமைக்க முயற்சிக்கிறேன், ஏனெனில் அந்த அபிஷேகம் என்மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் நான் கொஞ்சம் பிரசங்கிக்கிறேன். நான்—தேவனுக்குச் சித்தமானால் நான் சிகாகோவில் தொடங்கவிருக்கிறேன். நான்...? ...வீட்டிற்குச் செல்ல வேண்டும், அங்கிருந்து சகோதரர் போஸ்வொர்த்தை அழைத்து வர நான் புளோரிடாவுக்குச் செல்ல வேண்டும். அங்கே நாங்கள் ஓரிரு இரவுகள் இருக்கக்கூடும். எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. பிறகு நான் திரும்பி வந்து இதை பயன்படுத்துவேன்...?... பின்னர் இந்த அடுத்த கூட்டம் வருகிறது. நாங்கள் நிச்சயமாக உங்களை எங்கள் இருதயங்களில் வைத்திருப்போம். தேவனுக்குச் சித்தமானால், இந்த அடுத்த கோடைகாலத்தில், கோடைகாலத்தின் பிற்பகுதியில் நான் மீண்டும் வருவேனா என்று போதகர்கள் மற்றும் மற்றவர்கள் என்னைக் கேட்டிருக்கிறார்கள். அநேகமாக இந்தக் கோடைகாலத்தில் நான் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கும், வெளி நாடுகளில் உள்ள இன்னும் சில இடங்களுக்கும் செல்வேன், திரும்பி வரும்போது நான் இங்கே உங்களுடன் இருக்க முடியும் என்று நம்புகிறேன். இப்போது, அநேகர் நம்புகிறார்கள், நோயாளிகளுக்குக் கைக்குட்டைகளை அனுப் புவதை நானும் மிகவும் நம்புகிறேன். அதை எத்தனை பேர் நம்புகிறீர்கள், உங்கள் கைகளைப் பார்ப்போம். [ஒலி நாடாவில் காலியிடம்]...?... ஆனால் அது பரவாயில்லை. தேவன் ஆசீர்வதிக்கும் எந்தவொரு காரியத்திற்கும், நான் நிச்சயமாக ஆதரவளிக்கிறேன். 3 இப்போது, வேதவசனங்களில் அவர்கள் கைக்குட்டைகளைச் சரியாக அபிஷேகம் செய்யவில்லை. நீங்கள் அப்போஸ்தலர் 19-ஐ வாசிப்பீர்கள், பவுலின் சரீரத்திலிருந்து கைக் குட்டைகளையும் கச்சைகளையும் அவர்கள் கொண்டுபோனார்கள் என்று நான் நினைக் கிறேன். அது வியாதியஸ்தர்களிடம் சென்றது. பொல்லாத ஆவிகள் வெளியேறின, அவர்கள் குணமாக்கப்பட்டார்கள். இப்போது, நான் நினைக்கிறேன்... நிச்சயமாக என்னால் சொல்ல முடியாது, ஆனால் பவுல் அதை எங்கிருந்து பெற்றிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்... குழந்தை இறந்தபோது அந்த சூனேமியாள் ஸ்திரீயை நினைத்துக்கொள்ளுங்கள், அவள் ஏன் எலிசாவிடம் சென்றாள், தேவன் அவனுக்கு என்ன நடந்தது என்று இன்னும் சொல்லா திருந்தாலும் அவன் தேவனுடைய தீர்க்க தரிசியாக இருந்தான். அந்த ஸ்திரீ அவனுக்கு முன்பாகக் கீழே விழுந்தாள், அவனுடைய வேலைக்காரனாகிய கேயாசி அவளைத் தூக்கினான். தன் எஜமானனிடம் வந்து அவள் ஏன் அப்படி நடந்துகொண்டாள் என்று ஆச்சரியப்பட்டான். அவன், "அவளை விட்டுவிடு" என்றான். "ஏனென்றால் அவள் இருதயத்தில் துக்கம் இருக்கிறது, தேவன் அதை எனக்கு மறைத்துவிட்டார்" என்று சொன்னான். ஆனால் என்ன நடந்தது என்பதை அவள் வெளிப் படுத்தியபோது, சரி, அவன் தன் கோலை அனுப்பினான். அவன், "கேயாசி, இந்தக் கோலை எடுத்துக்கொள், அல்லது அவனுடைய வேலைக்காரன், அவனுக்கு முன்பாகச் சென்று அதை அந்தக் குழந்தையின் மேல் வை" என்று சொன்னான். 4 இப்போது, எலியா எதைத் தொட்டாரோ (பாருங்கள்?), அதை நான் நினைக்கிறேன்... தான் பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகம் பண்ணப்பட்டபோது, தான் தொட்டதெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டது என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் அந்த ஸ்திரீ அதை நம்புவாளா இல்லையா என்பது... ஆனால் அவன் முன்னே சென்று குழந்தையை—கோலைக் குழந்தையின் மேல் வைத்தான். ஆனால் அந்த ஸ்திரீயின் விசுவாசம் கோலின் மேல் இல்லை. அது தீர்க்கதரிசியின் மேல் இருந்தது. ஆகவே அதை உயிர்ப்பிக்கத் தீர்க்கதரிசி வந்து தன் சரீரத்தைக் குழந்தையின் சரீரத்தின் மேல் வைக்க வேண்டியதாயிற்று. இப்போது, எப்படியிருந்தாலும், ஒருவேளை பவுல் அதை அங்கிருந்துதான் பெற்றிருக்கலாம். வேதவசனத்தில் எனக்குத் தெரிந்த ஒரே இடம் அதுதான், அவர் அதை அங்கிருந்து எடுத்திருக்க முடியும். ஆனால் அவர் எதைத் தொட்டாரோ... தேவன் அவருடன் இருப்பதைக் கண்டார்கள், அவர் தொட்டது ஆசீர்வதிக்கப்பட்டது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே தேவன் அதைக் கனப்படுத்தினார். அது விசுவாசத்தின் ஒரு சிறிய தொடர்பாக் மட்டுமே இருந்தது. 5 இப்போது, அநேகர் தங்களுக்கு எழுதும் படி மக்களிடம் சொல்கிறார்கள். அது ஒரு வானொலி ஒலிபரப்பிற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ இருக்கலாம். ஆனால் என்னிடம் எந்த ஒலிபரப்போ அல்லது வேறு ஏதுமோ இல்லை. ஆனால் நான் இங்கு வந்ததிலிருந்து அநேக கைக்குட்டைகளின் மீது நான் ஜெபிக்கவில்லை. இது இங்குள்ள சபையின் ஒரு—ஒரு உபதேசமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. உலகம் முழுவதும் ஒரு வாரத்திற்கு நான் பல ஆயிரக்கணக் கானவற்றை எங்கோ அனுப்புகிறேன். மக்களுடனான தனிப்பட்ட தொடர்பைக் காட்டிலும் அதில்—அதில் எனக்கு ஒரு பெரிய ஊழியம் இருக்கிறது, ஏனென்றால் நான் அதிகமான மக்களைச் சென்றடைகிறேன். இப்போது, அந்தச் சிறியவற்றில் ஒன்றை நீங்கள் விரும்பினால்... அது ஒரு கைக்குட்டை அல்ல. ஆனால் அவற்றில் ஆயிரக்கணக்கானவற்றை அனுப்புவதற்கும், செயல்பட மிகக் குறைவான மூலதனமே இருப்பதற்கும்... ஆனால் நான்—நான் ஒரு சிறிய ரிப்பனையும், வழி முறைகளையும் எடுத்துக்கொள்கிறேன், நீங்கள் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முழு மனதுடன் வரவேற்கப்படுகிறீர்கள், முற்றிலும் இலவசம். ஜெபர்சன்வில்லிக்கு எழுதுங்கள். ஒரு சிறிய படிவம் திருப்பி அனுப்பப்படுவதை நீங்கள் காண்பீர்கள். உலகெங்கிலும் எனக்கு ஒரு ஜெபக் குழு உள்ளது. அவர்கள் ஜெபிக்கும்போது... ஜெபிப்பதற்காக உலகம் முழுவதும் நள்ளிர விலும் அதிகாலை இரண்டு மணிக்கும் கூட எழுகிறார்கள். 6 அவர்கள் தங்கள் கைக்குட்டையை அல்லது சிறிய துணியைத் தங்கள் உள்ளா டைகளுக்குக் கீழே தங்கள் இருதயத்தின் மேல் வைத்து, தங்கள் பாவங்கள் அனைத்தையும் அறிக்கை செய்கிறார்கள். எல்லோரும் ஒருவருக் கொருவர் ஜெபிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஒரே நேரத்தில் ஆயிரமாயிரம் ஜெபங்கள் செல்வதை கற்பனை செய்து பாருங்கள். தேவன் உங்களைப் புறக்கணிக்கவே முடியாது. அவர் அதைக் கேட்டுத்தான் ஆகவேண்டும். சமீபத்தில் ஜெர்மனியிலிருந்து எனக்கு வந்த ஒரு—ஒரு சிறிய செய்தியைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன், அதனுடன் ஒரு... ஏறக்கு றைய ஒவ்வொரு தேசத்திலும் இருப்பதைப் போல எங்களுக்கு ஒரு சிறிய அலுவலகம் இருந்தது, அங்கே அவர்கள் கடிதங்களை மொழிபெயர்த்து எங்களுக்கு அனுப்புகிறார்கள். ஒரு சிறிய ஜெர்மானியப் பெண் அபிஷேகம் செய்யப்பட்ட துணிக்காக அனுப்பியிருந்தாள், பின்னர் அவள்—அவளுக்கு அது கிடைத்தது என்று சொன்னாள். அவளுக்குக் கீல்வாதம் (arthritis) இருந்தது, அவள் பல வருடங்களாக ஒரு—ஒரு சக்கர நாற்காலியில் இருந்தாள். எனவே அவளுக்கு அந்தச் சிறிய துணி கிடைத்தது, அவள் அக்கம்பக்கத்தினரை அழைத்தாள். உங்களுக்கு ஒரு போதகர் இல்லையென்றால் சில அக்கம்பக்கத்தினரை அழைத்துக்கொள்ளும்படி அதில் கூறப்பட் டுள்ளது. அவள் தன் அறிக்கைகள் அனைத் தையும் செய்துவிட்டுத் துணியைத் தன்மேல் வைத்துக்கொண்டாள். அதை அவள் வைத்ததும், "இப்போது, பிசாசே, நீ இங்கிருந்து வெளியேறு" என்று சொன்னாள். பார்த்தீர்களா? அவள் சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து நடந்து சென்றாள். தேவன் மேல் விசுவாசம் வைப்பது அவ்வளவு எளிமையானது. அவ்வளவுதான்—அதில் இருப் பது அவ்வளவுதான். அவளுடைய விசுவாசம் அவள் தன் சுகப்படுதலை ஏற்றுக்கொண்டு செல்லக்கூடிய ஒரு நிலைக்கு உருவாக்கப் பட்டிருந்தது. தெய்வீக சுகமளித்தலின் எளிமை அப்படிப்பட்ட ஒரு சாதாரண காரியமாகும். 7 சிறிது காலத்திற்கு முன்பு இந்தியர்கள் வசிக்கும் பகுதியில் (Indian reservation), சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு நான் முதன்முதலாக என் ஆராதனைகளைத் தொடங்கியபோது, நான் பீனிக்ஸ் நகரில் இருந்தேன், முதன்முறையாக நான் இந்திய மக்களுக்காக ஜெபித்தேன். கூட்டத்தில் இருந்த மூன்று இந்தியர்களை அவர் குணமாக்கினால், நான்... அன்று இரவு ஜெப வரிசையில் இருந்த அவர்களை குணமாக்கினால், நான் அவர்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்வேன் என்று தேவனுக்கு வாக்குறுதி அளித்தேன். அப்படி அவர்கள்... கர்த்தர் அவர்களைக் குணமாக்கினார். என் வார்த்தைகளின் மூலம் மிஷனரிகள் எனக்கு உதவினார்கள். ஆனால் நான் திரும்பி வரும் வழியில் வந்தேன்; அரிசோனாவின் குளோப் நகரத்திற்கு மேலே, உங்களில் அநேகர் அங்கு சென்றிருப்பதைப் போல அப்பாச்சி (Apache) இந்தியர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு இரவு தங்கினேன். நாங்கள் திரும்பிச் சென்றோம், அங்கே ஆயிரக்கணக்கானவர்கள் வெளியே அமர்ந்திருந் தார்கள். அங்கே ஒரு சிறிய சபை இருக்கிறது. அது ஒரு அசெம்பிளி ஆஃப் காட் (Assembly of God) விசுவாசம் என்று நான் நம்பு கிறேன்...?…மேலும் ஸ்பீக்கர்கள் வெளியே தொங்கும்படி அவர்கள் இதுபோலவே மைக் ரோபோனை பொருத்தியிருந்தார்கள். அன்று மதியம் சூரியன் அஸ்தமித்தபோது, அந்த இந்தியர்கள் அனைவரும், தங்கள் சிறிய குடும்பங்களுடன் போர்வைகளில் அமர்ந்திருப் பதைக் காண ஒரு மகிமையான காட்சியாக இருந்தது. 8 அவர்கள் மிகவும் வித்தியாசமான மக்கள். ஆனால் அவர்கள் விசுவாசித்தால், அவர்கள் விசுவாசிக்கிறார்கள். ஆனால் முதலில் அவர்களுக்குச் சமாதானம் உண்டாக வேண்டும். எனவே நான் அவர்களுக்காகப் பரிதாபப் படுவதாகவும் நான்—அவர்கள் நடத்தப்பட்ட விதம் மற்றும் பலவற்றைப் பற்றியும் அவர்களிடம் சொல்ல ஆரம்பித்தேன். நான் அப்படிச் செய்கிறேன். நான் சொன்னேன், "நிச்சயமாக, உங்கள் அனைவரையும் போலவே நானும் அமெரிக்கர்களில் ஒருவன்." நான் சொன்னேன், "உங்களுக்குச் சரியான நியாயம் கிடைத்திருக்காமல் இருக்கலாம். வெளிநாட்டினருக்கு உணவளிக்க நாம் மில்லியன் கணக்கான டாலர்களை அங்கே அனுப்புகிறோம், நமது இந்தியர்கள் பட்டி னியால் சாகிறார்கள். சொல்லப்போனால், அவர்கள் உண்மையான அமெரிக்கர்கள் அல்லவா?" அது சரிதான். அங்கே அந்த ஏழை மக்கள் பட்டினியால் சாகிறார்கள், அவர்கள் தங்கள் ராணுவத்தை உருவாக்கி நம்மை நோக்கித் திரும்பச் சுடுவதற்காக நாம் மில்லியன் கணக்கான டாலர்களை அங்கு அனுப்புகிறோம் என்று நினைப்பது, எனக்குள்ளேயே நமது கொடியின் மீதான ஒரு கறையாக நான் நினைக்கிறேன். மேலும்—எனவே, நான் சொன்னேன், "நிச்சயமாக என்னால் அதற்கு உதவ முடியாது. ஆனால் நான்... நான் ஒன்றை உங்களுக்குச் சொல்ல முடியும், உங்களுக்கு ஒரு நியாயமான தீர்ப்பை வழங்கி நேர்மையாக இருக்கப்போகிற ஒருவரை நான் இன்றிரவு பிரதிநிதித்துவப்படுத்த இங்கே வந்திருக்கிறேன்; அவர்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து." 9 நான் ஒரு ஜெப வரிசையைக் கேட்டபோது. சரி, யாரும் முன்வரவில்லை. அதனால் நான் ஆச்சரியப்பட்டேன், "அட, இது விசித்திரமாக இருக்கிறதே." எனவே சிறிது நேரத்திற்குப் பிறகு மிஷனரி மீண்டும் சிறிய மிஷனுக்குள் சென்று, அங்கு அவள் வைத்திருந்த சிலரை வெளியே அழைத்து வந்தாள். முதலில் வந்தவள் ஒரு பெண், அவளைப் பார்க்கும்போது, அவளுக்கு ஒரு பாலியல் நோய் (venereal disease) இருந்தது, அவள் ஒழுக்கங்கெட்டவள் என்பதால் அல்ல. ஆனால் அவர்கள் வாழ வேண்டியிருந்த விதம்...?…அசுத்தம், மற்றும் பலவற்றின் காரணமாக. அவள் வெளியே வந்தாள். அவள் என்னை மிகவும் விசித்திரமாகப் பார்த்தாள்; மொழி பெயர்ப்பாளர் மூலமாக, அது உண்மைதான் என்று அவள் ஒப்புக்கொண்டாள். பின்னர் அடுத்து வந்தவள் ஒரு—ஒரு சிறிய—ஒரு சிறுமி. அவளைச் செவிடாக்கிய ஒரு காய்ச்சல் அவளுக்கு வந்திருந்தது. சரி, நான் அவளை என் கைகளில் ஏந்தி அவளுக்காக ஜெபித்தேன். அவள்... மேலும் அவள் பேசுவதையும் நிறுத்தியிருந்தாள். அவளால் பேச முடிய வில்லை. செவியைக் கட்டுப்படுத்தும் அதே நரம்புதான் ஊமையாக்கிக் கட்டுப்படுத்துகிறது. 10 எனவே... நான் அவளைக் கீழே உட்கார வைத்து முயற்சித்தேன்... நான் என் கையை அப்படித் தட்டினேன், அவள் திரும்பிப் பார்த்தாள், மேலும்—மேலும் நான் அவளிடம் ஏதோ சொன்னேன். அவள் ஏதோ முணு முணுத்தாள். நான், "சரி, அவள் இன்னும் நன்றாகப் பேசுவாள்" என்று சொன்னேன். மொழிபெயர்ப்பாளர் சொன்னார், "அவள்... அவளது பேச்சு இப்போது மிகவும் நன்றாக இருக்கிறது." அவர் சொன்னார், "அவள் என்ன சொல்கிறாள் என்று எனக்குத் தெரிய வேண்டாம்." எனவே, அடுத்ததாக வந்தவன் ஒரு மாறுகண் உள்ள சிறுவன். நான் அவனை என் கைகளில் தூக்கிக்கொண்டு, இங்கே அவனைப் பிடித்துக்கொண்டு அவனுக்காக ஜெபித்தேன். என் ஊழியங்கள் அனைத்திலும் ஒருமுறை கூட, மாறுகண் உள்ள ஒரு குழந்தையை தேவன் நிராகரித்ததை நான் பார்த்ததே இல்லை, என் வாழ்நாளில் ஒருபோதும் இல்லை. எனக்கு ஒரு... பல வருடங்களுக்கு முன்பு ஒரு குழந்தையை இழந்தேன், பில்லியின் தங்கை அவளுக்கு எட்டு மாதமாக இருந்தபோது. அவள் மிகவும் கஷ்டப்பட்டாள். அவளைப் பார்க்க நான் மருத்துவமனைக்குச் சென்றேன், அவளுடைய கண்கள் மாறியிருந்தன. அது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது, ஒரு மாறுகண் குழந்தையைப் பார்க்கும்போது எனக்கு அப்படிப்பட்ட ஒரு பரிதாபகரமான உணர்வு ஏற்பட்டது. 11 எப்படியிருந்தாலும், அடுத்ததாக வந்து கொண்டிருந்தது ஒரு... அப்போது எனக்கு உண்மையான ஒரு ஜெப வரிசை கிடைத்தது, அதில் ஆயிரக்கணக்கானவர்கள் இருந்தார்கள். தூசு எங்கும் பறக்கத் தொடங்கியது, அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்குவது போல இருந்தது. நான் ஆச்சரியப்பட்டேன். எனவே அவர்கள் எல்லோரையும் அமைதியாக்கினார்கள். அதன் பின் அவர்கள் ஒரு பெரிய ஜெப வரிசையை ஆரம்பித்தார்கள். ஓ, அவர்களில் நான்கு, ஐந்து, அறுநூறு பேர் வரிசையில் நின்றார்கள். அதன்பின் அடுத்ததாக ஒரு வயது முதிர்ந்த பெண்மணி, ஊன்றுகோலுடன், ஒரு துடைப்பக் குச்சியுடன் வரவிருந்தாள். அவள் மிகவும் மோசமாக முடங்கியிருந்தாள். எப்படியோ கீல்வாதம் மற்றும் பலவற்றால் வளைந்து போயிருந்தாள். நான் அந்தப் பரிதாபத்திற்குரிய முதியவளைப் பார்த்தேன். அங்கே ஒரு இளைஞன் எந்நேரமும் அவளைச் சுற்றிவர முயற்சித்துக் கொண்டிருந்தான். அதனால் எங்களால் அவனிடம் பேச முடியவில்லை. ஆகவே திரு. மூர், ரெவரெண்ட் திரு. மூரை உங்களில் பலருக்குத் தெரியும், அவர் அந்தச் சிறிய இந்தியனைத் தூக்கி அந்த மூதாட்டியின் பின்னால் நிறுத்தி வைத்தார். அந்தப் பரிதாபத்திற்குரிய சிறியவள், அவள் ஏற்கனவே பார்த்திருந்தாள்; தேவன் ஜீவிக்கிறார் என்று அவளுக்குத் தெரியும். 12 ஆகவே அவள் அவளை வைத்து, அவளுடைய ஊன்றுகோல்களை எடுத்துக் கொண்டு அப்படி வந்தாள். அவள் என்னிடம் வந்தபோது, நான் அப்படியே நின்று அவளைக் கடந்து செல்ல விட்டேன். அந்தப் பரிதாபத்திற்குரிய முதியவள் வருகிறாள், அவளுடைய பெரிய ஆழமான சுருக்கங்கள், அவளுடைய முகத்தில் உள்ள சுருக்கங்கள், மற்றும் தோல் சுற்றப்பட்ட அவளுடைய முடி, அவள் நிமிர்ந்து பார்த்தபோது, அவளுடைய முகத்தின் சுருக்கங்கள் வழியே கண்ணீர் வழிந்ததைக் கண்டு நான் நினைத்தேன், "அவள் யாருடையவோ தாய். நம்மில் சிலருக்கு இருக்கும் சிலாக்கியங்கள் ஒருவேளை அவளுக்குக் கிடைத்திருக்காது. ஆனால் நாம் நம் தாயை நேசிப்பதைப் போலவே அவளுடைய பிள்ளைகளும் அவளை நேசித்தார்கள். அவள் தன் பிள்ளைகளை எப்படி நேசித்தாளோ—அப்படி, அவளுடைய பிள்ளை களும் அவளை அதே வழியில் நேசித்தார்கள் மற்றும் அப்படியே மாறாகவும். 13 நான் எழுந்தபோது... நான் இருந்த இடத்திற்கு அவள் வந்தாள், அவள் என்னை அப்படியே நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய சிறிய உதடுகள் துடித்தன. அவள் அந்த இரண்டு ஊன்றுகோல்களையும் எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டு, நேராக நிமிர்ந்து, பிளாட் பாரத்தை விட்டு இறங்கி நடந்து சென்றாள். எந்த ஜெபமும் இல்லை, அவள் விசுவாசித்தாள் (பார்க்கிறீர்களா?); அவ்வளவுதான். அன்று அதிகாலை விடியும் வரை, நான் ஜெபித்துக்கொண்டே இருந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. மேலும் அவர்கள்... அவர்கள் இடுப்பு வரை நனைந்தபடி வர ஆரம்பித் தார்கள். நான் மொழிபெயர்ப்பாளரிடம், "அவர்கள் ஏன் ஈரமாக இருக்கிறார்கள்?" என்று கேட்டேன். அவர் சொன்னார், "சரி, முதலில் அவர்கள் அதை நம்பவில்லை. அது பொய் என்று அவர்கள் நினைத்தார்கள்." மேலும் சொன்னார், "இப்போது, ஆற்றின் கீழே இருபது மைல் தொலைவில் ஒரு ஆழமற்ற கடக்கும் இடம் இருக்கிறது." ஆனால், "அவர்கள் கடந்து சென்று, தங்களுக்குப் பிரியமானவர்களைக் கொண்டு வரச் செல்கிறார்கள். அவர்கள் தங்களுக்குப் பிரியமானவர்களுடன் ஆற்றில் இறங்கி நடந்து வருகிறார்கள்" என்றார். 14 அங்கே ஒரு மனிதன் ஒரு பலகையுடன் நின்றிருந்தான், அதனுடைய முன்புறத்திலும் பின்புறத்திலும் ஒரு குச்சி குறுக்கே இருந்தது. அவனுடைய—ஒரு முதிய இந்தியர் அதில் படுத்திருந்தார், அவருடைய கால்கள் இந்தக் குச்சியின் மீது தொங்கிக்கொண்டிருந்தன, அவருடைய பிரதான உடல் பலகையின் மீது படுத்திருந்தது...?…அவருடைய கைகள் அந்தப் பக்கமாகப் பின்னால் வைக்கப்பட்டிருந்தன. அங்கே மிகவும் பலசாளியான ஒரு வீரன் நின்றுகொண்டிருந்தான், உண்மையான குளிரில் அவனுடைய உதடுகள் துடித்தன. நான், "நீ ஆங்கிலம் பேசுவாயா?" என்று கேட்டேன். அவன், "கொஞ்சம்" என்றான். நான் கேட்டேன், "இப்படி இருந்தால் உனக்கு நிமோனியா காய்ச்சல் வந்துவிடும் என்று பயமாக இல்லையா?" அவன், "இயேசு கிறிஸ்து என்னைப் பார்த்துக்கொள்வார். நான் என் அப்பாவைக் கொண்டு வந்தேன்" என்றான். அங்கே படுத்திருந்த முதியவருக்கு வாத நோய் (palsy) இருந்தது...?... நான், "நான் இயேசுவிடம் கேட்டால், அவர் உன்னை—உன் அப்பாவைக் குணமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா?" என்றேன். "ஆம்." ஆகவே நான், "அவரைக் கடந்து செல்ல விடுங்கள்" என்றேன். அவர் கடந்து சென்றார், நான் அந்த முதியவர் மேல் என் கையை அப்படியே வைத்தேன். நான், "தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே. கர்த்தராகிய இயேசு உங்களைக் குணமாக்கி, உங்களைச் சொஸ்தமாக்குவாராக" என்றேன். அவர்கள் கடந்து சென்றார்கள். 15 இங்கே வேறொருவர் வருகிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு யாரோ கத்துவதை நான் கேட்டேன். அந்த முதியவர் தன் தோளிலேயே அந்த ஸ்ட்ரெச்சரை வைத்துக்கொண்டு, எல்லோ ரையும் பார்த்து அப்படி கையசைத்துக்கொண்டு, நேராக வெளியே சென்றுகொண்டிருந்தார், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, தம்முடைய மக்கள் மேல் இன்னும் இரக்கமாயிருக்கிறார் என்று நம்புவதற்கு அது ஒரு சாதாரண குழந்தைத்தனமான எளிமை யாகும். நண்பர்களே, நோயாளிகள் அல்லது பாவிகள் மீதான கிறிஸ்துவின் மனப்பான்மை மாறுவதில்லை. இது எப்போதும் இருந்ததைப் போலவே இன்றிரவும் அதேபோல்தான் இருக்கிறது. நான் இதை பத்து வருடங்களாகச் செய்திருக்கிறேன். நமது அன்பான கர்த்தர் தமது மகா வல்லமையுடன் செயல்படுவதைக் கண்டு, உலகம் முழுவதும் பயணம் செய்யும் பத்தாவது வருடம் இது. இன்றிரவு நான் அவரை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு இரவில், வெளியே குளிராக இருக்கும்போது, எங்களுடன் சேர்ந்து அவரை ஆராதிப்பதற்கு இன்றிரவு இந்தச் சிறிய அரங்கத்திற்கு வந்திருப்பதன் மூலம் நீங்களும் அப்படியே செய்கிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் வருகையை நாங்கள் பாராட்டுகிறோம். 16  இப்பொழுது, நான் வேதாகமத்தைத் திறந்து ஒரு சில வேத வசனங்களை வாசிப்பதற்கு முன்பாக, இந்த வார்த்தையின் ஆசிரியராகிய அவரிடம் நாம் ஜெபத்தில் பேசுவோமாக. எங்கள் அன்பான பரலோகப் பிதாவே, எங்களுக்கு நீர் காட்டிய உமது தயவுக்காகவும் இரக்கத்துக்காகவும் இன்றிரவு எங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு நன்றி செலுத்து கிறோம். இந்த ஆசீர்வாதங்களில் எதற்கும் நாங்கள் தகுதியற்றவர்கள். ஆனால் நீர் உமது இறையாண்மை கொண்ட கிருபையினால்... [ஒலி நாடாவில் காலியிடம்] பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, பாவமாக்கப்பட்டு, சிலுவையில் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, எங்களை நீதிமான்களாக்குவதற்காக மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்தீர், எங்களுடைய வியாதி, பாவம், சோர்வுகள் மற்றும் கவலைகள் ஆகிய அனைத்திலிருந்தும் எங்களை மீட்பதற்காகத் தமது சரீரத்திலே அவைகளைச் சுமந்தார். "நம்மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப் பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" என்று தீர்க்கதரிசி சொன்னார். 17  நாங்கள் இந்த பூமியில் இருக்கும்போதே அனுபவிக்கக்கூடிய, அவருடைய மரணத்தின் இந்த அற்புதமான பண்புகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் அவருக்கு ஒப்பாக மாற்றப்படும் அந்த நாளுக்காகக் காத்திருக் கிறோம் என்பதையும், அவர் இருக்கிறபடியே அவரை தரிசிப்போம் என்பதையும், முடிவற்ற யுகங்களாய் அவரோடு வாழ்வோம் என்பதையும் அறிந்திருக்கிறோம். பிதாவே, இன்றிரவு உமது பரிசுத்த ஆவியானவர் இந்தக் கட்டடத்திற்கு வந்து, இங்குள்ள ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்க அருள்புரியும். உமது மகிமைக்காக இந்த ஆசீர் வாதத்தை இப்போது நாங்கள் வேண்டுகிறோம். நான் இந்த வேதாகமத்தைத் திறக்கும்போது, உமது வார்த்தையிலிருந்து சில ஆறுதலின் வார்த்தைகளை எங்களுக்குத் தர உதவி செய்யும், ஏனெனில் நாங்கள் உமது குமாரனின் [ஒலி நாடாவில் காலியிடம்] கேட்கிறோம். ஆமென். 18  ஏனென்றால், ஒரு மனுஷனாக நான் சொல்கிற என் வார்த்தை, என் வார்த்தைகள் வெறும் ஒரு மனுஷனுடைய வார்த்தைதான், ஆனால் அவருடைய வார்த்தை எப்போதும் சத்தியமானது. இப்பொழுது, நாம் பரிசுத்த லூக்கா எழுதின சுவிசேஷம் 5-ஆம் அதிகாரம், 1-ம் வசனத்திலிருந்து ஆரம்பித்து வாசிப்போம். பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். அப்பொழுது கடற்கரையிலே நின்ற (இரண்டு) படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள். மேலும் அவர் திரும்பி... (நான்—நான் உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். எனக்கு இங்கே போதிய வெளிச்சம் இல்லை.)... அப்பொழுது அந்தப்படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப்படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார். அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக் கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி (உங்கள் வலைகளைப்) போடுங்கள் என்றார். அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப் படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தை யின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். 19  கர்த்தர் இதற்குத் தமது ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. மேலும் ஒரு சிறிய தலைப்பாக, "உம்முடைய வார்த்தை யின்படியே, ஆண்டவரே, நான் வலையைப் போடுகிறேன்" என்பதை நாம் எடுத்துக் கொள்வோம். இப்பொழுது, நம்மில் அநேகர் தெய்வீக சுகமளித்தல் மற்றும் இது போன்ற காரியங்களைப் பார்க்கும்போது அல்லது அணுகும்போது... தேவசித்தமானால், இன்றிரவு நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப் போகிறபடியால், நான் ஒரு தெய்வீக சுகமளிப்பவன் என்று உரிமை கோரவில்லை என்பதை அனைவரும் உறுதியாக அறியும் படிக்கு, நான் இந்த அறிக்கையைச் செய்ய விரும்புகிறேன். பூமியில் அப்படி ஒருவர் இருக்கிறார் என்று நான் நம்பவில்லை. மேலும் பூமியில் எப்போதாவது அப்படி ஒருவர் இருந்திருக்கிறார் என்றும் நான் நம்பவில்லை. தேவனுடைய குமாரன் தாமேகூட, ஒரு தெய்வீக சுகமளிப்பவராக உரிமை கோரவில்லை. அவர், "கிரியைகளைச் செய்கிறது நான் அல்ல; எனக்குள் வாசமாயிருக்கிற என் பிதாவே; அவரே இந்தக் கிரியைகளைச் செய்கிறார்" என்றார். மேலும் இப்பொழுது, கிறிஸ்தவர்களே, ஒருவேளை—ஒருவேளை கிறிஸ்தவர் அல்லாத உங்களுக்குச் சொல்லுகிறேன், வியாதியஸ் தர்களைக் குணமாக்குவதற்கு மனிதனிடத்தில் எந்த வல்லமையும் இல்லை, எப்போதுமே இருந்ததில்லை, இனியும் ஒருபோதும் இருக்கப் போவதுமில்லை. எல்லாம் தேவனிடமிருந்தே வருகிறது. எதுவாக இருந்தாலும்... எனக்குள்—எனக்குள் ஒன்றும் இல்லை; இரட்சிக்கவோ அல்லது மன்னிக்கவோ வேறு எந்த மனிதனுக்குள்ளும் எதுவும் இல்லை. 20  இப்பொழுது, பாவம்தான்—அதுதான் வியாதிக்குக் காரணம். வியா—வியாதி அனைத்தும் பாவத்திலிருந்தே வருகிறது. அது பாவத்தின் ஒரு பண்பாகும். நமக்கு எந்த வியாதியும் ஏற்படுவதற்கு முன்பாக, நமக்கு பாவம் இருக்கவில்லை. வியாதியைத் தொடர்ந்து பாவம் வந்தது. எனவே, நீங்கள் பாவத்தைக் கையாளுவீர்கள் என்றால், அதன் பண்புகளையும் நீங்கள் கையாள வேண்டியது கட்டாயமாகும். நீங்கள் அதைச் செய்தே ஆக வேண்டும். மேலும் பாவத்திலிருந்து இரட்சிப்பு என்ற சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிற எவரும், தெய்வீக சுகமளித்தலையும் பிரசங்கித்தாக வேண்டும், இல்லையென்றால் உங்களால் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முடியாது. புரிகிறதா? நீங்கள் ஒரு—ஒரு நாயைக் கொல்லும்போது, அதன் தலையில் அடித்து அதைக் கொல்லும்போது, அதன் காலையும் கொல் லாமல் இருக்க முடியாது. புரிகிறதா? அதன் உடலின் மீதமுள்ள பகுதியையும் நீங்கள் கொன்றுதான் ஆக வேண்டும். எனவே, அதன் தலைப் பகுதிதான் பாவம், மேலும் இந்த சோர்வு, வியாதி மற்றும் அனைத்து பண்புகளும், மரணமும்கூட, அனைத்தும் பாவத்தால் உண்டாக்கப்பட்டு அதோடு பின்னிப்பிணைந்துள்ளது. மனிதன் மரிக்க வேண்டியதில்லை, வியாதிப்பட வேண்டிய தில்லை. அவன் சோர்வடைய வேண்டிய தில்லை, தனக்காகத் தானே உழைத்துப் பிழைக்க வேண்டியதில்லை. எல்லாமே வீழ்ச்சிக்குப் பின்னர்தான் வந்தது. 21  இப்பொழுது, இதில்... ஆனால் தேவன் சபையிலே வரங்களை வைத்துள்ளார், முதலாவது வேதாகமம். இப்பொழுது, நான் கண்டிப்பான முறையில் ஒரு அடிப்படைவாதி. ஏதேனும் இந்த வேதாகமத்திலிருந்து வரவில்லை என்றால், அது சத்தியம் அல்ல. இது தேவனுடைய சத்தியம் என்று நான் நம்புகிறேன். மேலும் எல்லாமே, ஒவ்வொரு உபதேசமும் இந்தப் புதிய ஏற்பாட்டின் அடிப்படையில், புதிய ஏற்பாட்டுச் சபையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். மேலும் இப்பொழுது, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்தபோது, அவர் பாவம் மற்றும் வியாதியை ஒழிக்கவும், அதை முறித்துப்போடவும், தமது ஜனங்களிடமிருந்து அதை என்றென்றைக்குமாக அகற்றிப்போடவுமே வந்தார் என்பதை நாம் வேதாகமத்தில் காண்கிறோம். மேலும் அவர் மீண்டும் வருவார் என்று உரிமை கோரினார், ஆனால் அவர் இல்லாதிருக்கையில், தமக்கு இருந்த அதே அதிகாரத்தைத் தமது சபைக்கு அளித்தார். அவருக்கு என்ன அதிகாரம் இருந்தது என்பதை நாம் கவனித்தோமானால், அது வரவில்லை... இயேசு தாம் விரும்பியதால் ஜனங்களைச் சுகமாக்கிக்கொண்டு சுற்றித் திரியவில்லை; தேவன் அவரை எவர்களைச் சுகமாக்க அனுமதித்தாரோ, அவர்களை மட்டுமே அவர் சுகமாக்கினார். 22  நான் முந்தின நாள் இரவு மேற்கோள் காட்டியது போல, அவருடைய ஊழியத்தை நாம் கவனிக்கிறோம். இயேசு கிறிஸ்து தாமே எத்தகைய ஊழியத்தைக் கொண்டிருந்தார் என்பதை நாம் கண்டுகொள்ள முடியுமானால், அவர் நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராக இருக்கிறாரா என்பதை நாம் கண்டுகொள்ள முடியும். என்னுடைய வாதம் இதுவே: இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் மரிக்கவில்லை. அவர் என்றென்றைக்கும் இருந்ததைப் போலவே உயிரோடிருக்கிறார், மேலும் இனி என்றென்றைக்கும் உயிரோடிருப்பார். அவர் மரிக்கவில்லை. அவர் பூமியில் சிறிது காலம் மட்டுமே—மட்டுமே இல்லாமல் இருந்தார், அவர் நமக்கு பதிலாகப் பாவமாக்கப்பட்டபடியால், நமது பாவங்களை நரகத்திற்குச் சுமந்து செல்ல வேண்டியதாயிருந்தது, அவர் தாமே பாவம் அறியாதவராயிருந்தும், குற்றவாளிகளாகிய நமக்காக ஒரு குற்றமற்ற மாற்றுப் பலியாக, அவர் நமக்கு பதிலாகச் சென்றபோது நமது பாவங்களையும் வியாதியையும் நரகத்திற்குக் கொண்டு சென்றார். ஆனால் நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காகத் தேவன் அவரை மூன்றாம் நாளில் எழுப்பினார். நாம் வெற்று கல்லறையைப் பார்க்கும்போது, தேவனுடைய பார்வையில் நாம் இலவசமாகவே நீதிமான் களாக்கப் பட்டிருக்கிறோம் என்பதையும், கல்வாரியில் தமது குமாரனின் மரணத்தினால் செலுத்தப்பட்ட கிரயத்தில் தேவன் மிகவும் பிரியமாயிருந்தார் என்பதையும் நாம் உணருகிறோம். அவர், “இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்” என்றார். இயேசு சிலுவையில், “முடிந்தது” என்று சொன்னார். கல்வாரியில் அதற்கான பிராயச்சித்தம் செலுத்தப்பட்டு, நிறைவேற்றப் பட்டது. இயேசு எத்தகைய ஊழியத்தைக் கொண்டிருந்தார்? அவர் நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவராக இருந்தால், அவர் நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவராக இருந்தால், அவர் நேற்று செய்ததையே இன்றும் செய்யக் கூடும்... செய்வார் என்று இன்றிரவு பார்வையா ளர்களாகிய நீங்கள் நினைக்கவில்லையா? 23  எபிரெயர் 13:8, அவர் நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராக இருக்கிறார் என்று சொல்லுகிறது. நீங்கள் புதியவர்களாக இருக்கலாம், ஒரு சில நிமிடங்களுக்கு ஒரு சிறிய முன்னோட்டமாக, அவருடைய ஊழியத் தைக் கவனியுங்கள். அவர் எத்தகைய ஊழியத் தைக் கொண்டிருந்தார் என்று பார்ப்போம். இப்பொழுது, அவர், “சரி, முடவனே, நீ எழுந்து நட. குருடனே, நான் இந்த மரித்த மனிதனை எழுப்புவேன்” என்று சொல்லிக் கொண்டு சுற்றித்திரியவில்லை. வேதாகமத் தின்படி, அவர் பூமியில் இருந்தபோது, தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தில், மூன்று மரித்தவர்களை மட்டுமே ஒரு உறுதிப் படுத்தலுக்காக எழுப்பினார். "இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் சகல காரியங்களும் நிலைவரப்படும்." அவருடைய ஊழியக் காலத்தில் அநேகர் மரித்தார்கள். ஆனால் வேதாகமம் பதிவு செய்துள்ளபடி, அவர் மூவரை மட்டுமே எழுப்பினார். ஆனால் அப்போது அவர் எத்தகைய ஊழியத்தைக் கொண்டிருந்தார்? அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் அவரைக் கவனியுங்கள், அதைச் சிறிது நேரத்தில் இந்த வேதப்பகுதியின் அடிப்படையில் நாம் பார்ப்போம். 24  அவர் தமது ஊழியத்தை முதன்முதலில் தொடங்கிப் பிரபலமடைந்தபோது, ஏன், பிலிப்பு என்ற பெயருள்ள ஒரு—ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டான், அவன் போய் தன் நண்பன் நாத்தானியேலைக் கண்டுபிடித்து, நாத்தானியேலை அவரிடம் கூட்டிக்கொண்டு வந்தான். மேலும் இயேசு நின்று, பிரசங்கித்து, வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்துக் கொண்டி ருந்தபோது, அல்லது அது எங்கிருந்தாலும் சரி... நாத்தானியேல் ஒரு ஜெப வரிசையில் நின்றிருக்கலாம். அவர் எங்கு இருந்தாலும் சரி, அவர் கூட்டத்தில் நின்றிருக்கலாம். இயேசு அவனைப் பார்த்தபோது, “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று சொன்னார். அப்போது அவன், “ரபீ, என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான். அல்லது வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இதே காரியத்தை நான் உங்களிடம் சொல்வதானால், “அதோ ஒரு கிறிஸ்தவன், ஒரு விசுவாசி, ஒரு நேர்மையான உண்மையுள்ள நபர்” என்று நான் சொல்வேன். சரி, அவன், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான். அதற்கு அவர், “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்” என்றார். அது உண்மையா? அதுதான் வேதாகமம். 25  மேலும் இப்பொழுது, இன்றிரவு இங்கு நியூயார்க்கில் அப்படிப்பட்ட ஒரு காரியம் நடந்தால், இன்றிரவு ஆழமற்ற எல்லைக்கோடு விசுவாசிகளாக இருக்கும் அநேக ஜனங்களுக்கு மத்தியில் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு ஏற்படும் முதல் எண்ணம், ஒன்று அந்த மனிதன்... நீங்கள் இயேசுவை ஒரு மனதை வாசிப்பவர் என்றோ, அல்லது அது மனக் குறிப்பறிதல் என்றோ, அல்லது அதுபோல ஏதோ ஒன்று என்றோ சொல்வீர்கள். மேலும் அதனால்தான் தேவனால் செயல்பட முடிவதில்லை. ஜனங்கள் அவரை ஒருபோதும் வரவேற்பதில்லை. அவர்கள்—அப்பொழுது அவர்கள் அவரை ஒரு பிசாசு என்று அழைத் தார்கள். அவர் குறிகாரர்கள் அனைவருக்கும் தலைவன் என்று அவர்கள் சொன்னார்கள். அது உங்களுக்குத் தெரியுமா? “இவன் பெயல்செபூல், பிசாசுகளின் தலைவன்.” அப்படித்தானே மதகுருமார்கள் அவரை அழைத்தார்கள்? பெயல் செபூல், பிசாசுகளுக்கெல்லாம் தலைவன்... புரிகிறதா? 26  அது மேசியாவின் அடையாளம் என்பதைக் காண அவர்கள் சற்று நின்று வேதவாக்கியங்களை வாசிக்கவில்லை. ஆனால் அவர்கள்—அவர்கள் வெறுமனே, “சரி, அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று இவனுக்குத் தெரியும் என எனக்குத் தெரியும். அவர்கள் எப்படிச் சுகமாகிறார்கள் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் இவன் ஒரு பிசாசு” என்றார்கள். புரிகிறதா? ஆனால் பிலிப்பு—நாத்தானியேல் என்ன சொன்னான்? அவன், “நீர் கிறிஸ்து, ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்” என்றான். அப்படிதான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர், “நீ பாக்கியவான். நான் உன்னிடம், நீ சபைக்கு வருவதற்கு முன்பே நீ எங்கிருந்தாய் என்று எனக்குத் தெரியும் என்று சொன்னதால், நீ இந்தக் காரியங்களை விசுவாசித்தாயானால் (வேறுவிதமாகக் கூறினால்), சரி, இதிலும் பெரியவைகளைக் காண்பாய்” என்றார். ஒரு நாள் தமது ஊழியத்தில் அவர் ஒரு—ஒரு பெண்ணைக் கடந்து சென்றார். அல்லது கடந்து போனார்... அது சமாரியா வரைக்கும் சென்றது, அங்கு ஒரு—ஒரு இருக்கையிலோ அல்லது ஒரு சுவரிலோ உட்கார்ந்து, உணவு வாங்கத் தமது சீஷர்களை நகரத்திற்குள் அனுப்பினார். அமெரிக்க ஜனங்களாகிய நாம், இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கிழக்குத்திய கண்ணோட் டத்தைப் பெற்றிருந்தாலும்... அமெரிக்க ஜனங்களாகிய நாம், அந்தப் பெண் ஒரு கெட்ட பெயரெடுத்த பெண், ஒருவேளை ஒரு வேசியாக இருக்கலாம் என்று நம்புகிறோம். 27  அவள் தண்ணீர் எடுக்க வந்திருந்தாள். இயேசு அவளிடம், “எனக்குக் குடிக்கத் தா” என்றார். அவள், “யூதராகிய நீங்கள், சமாரியரிடம் இப்படி கேட்பது வழக்கமில்லையே. எங்களுக்குள் எவ்வித சங்காத்தமும் இல்லையே” என்றாள். புரிகிறதா? என் கருத்தின்படி, அவர் அவளுடைய ஆவியோடு தொடர்பு கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தார். பிதா அவரை அங்கே போகும்படி சொல்லியிருந்தார். ஆனால் ஒருவேளை, அவர் அங்கே சென்றபின்பு அது நடந்திருக்கலாம். எனவே அவர் அங்கே அமர்ந்திருந்தார்... அவள், “ஏன், யூதராகிய நீங்கள் சமாரியர்களிடம் இப்படி கேட்பது வழக்கமில்லையே” என்றாள். 28  அவர், “ஆனால் நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று உனக்குத் தெரிந்திருந்தால், நீயே என்னிடம் குடிக்கக் கேட்டிருப்பாய்” என்றார். அவர் உரையாடலைத் தொடர்ந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவளுக்கு என்ன பிரச்சினை, அவளுடைய பிரச்சனை எங்கே இருக்கிறது என்பதை அவர் பிடித்துக்கொண்டார். அவர், “போய், உன் புருஷனை அழைத்துக்கொண்டுவா” என்றார். அவள், “எனக்கு புருஷன் இல்லை” என்றாள். அவர், “அது சரிதான். உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்” என்றார். ஏன், கவனியுங்கள். இப்பொழுது, அவள் தரப்பிலிருந்து அவள் சொல்வதைக் கேளுங்கள். அவள், “நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன்” என்றாள், ஒரு பிசாசு அல்ல, ஒரு தீர்க்கதரிசி. அவள், “மேசியா வருகிறார் என்று எனக்குத் தெரியும், அவர் வரும்போது இந்தக் காரியங்களை எங்களுக்கு அறிவிப்பார்” என்றாள். மேசியாவின் அதே அடையாளம் அங்கே இருந்தது. மதகுருமார்கள் அதை அறிந்துகொள்வதற்கு முன்பே அந்த வேசி அதை அறிந்துகொண்டாள். இன்றும் ஏறக்குறைய அப்படியேதான் இருக்கிறது. அது சரிதான். 29  தங்கள் கோட்டுகளில் எத்தகைய பொத்தான்கள் இருக்க வேண்டும் என்று அவர்கள் அங்கே விவாதித்துக் கொண்டி ருந்தபோது, மூன்று சாஸ்திரிகள், குறிகாரர்கள், அல்லது நீங்கள் அவர்களை எப்படி அழைக்க விரும்புகிறீர்களோ, நட்சத்திரம் பார்க்கிறவர்கள் கிழக்கிலிருந்து ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி வந்து அவரைக் கண்டுபிடித்தார்கள். அது சரியா? அது உண்மை. ஆனால் மத குருமார்களோ தங்கள் பெயர்களுக்குப் பின்னால் D.D. போன்ற பட்டங்களை வைத்துக்கொண்டு, தங்கள் உடைகளில் எத்தகைய பொத்தான்களை அணிய வேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள். அறிந்துகொள்ளுங்கள்... சரித்திரமானது வெறு மனே தன்னைத்தானே திரும்பச் செய்கிறது. அங்கே தேவனுடைய ஈவு அங்கே வைக்கப்பட்டிருந்தது. அவர் பிரசங்கிக்கவும், ஜனங்களுக்கு முன்னறிவிக்கவும் சென்றபோது, மற்றும்...?... அல்லது அவருடைய ஊழியத்தில், ஏன், அவர்கள் அவரைப் பார்த்து சொன்னார்கள்; “இவன் பெயல்செபூல்” என்றார்கள். அதுதான் மதகுருமார்கள். ஆனால் பிசாசு என்ன சொன்னது? “நீர் யார் என்று எங்களுக்குத் தெரியும், தேவனுடைய குமாரன், பரிசுத்தர்.” அது சரியா? அங்கேதான்... பாருங்கள், ஜனங்கள் இழந்துகொள்ளும் அளவுக்கு மிக அதிக சடங்காச்சாரமாகிவிட முடியும்... பிசாசுக ளுக்குக்கூட அவர்களைவிட ஆவியைக் குறித்து அதிகம் தெரியும், ஏனென்றால் அவை ஆவிக்குரிய காரியங்களைக் கையாளுகின்றன. அவர்கள் தேவனை கண்டுகொள்ள முடியாத அளவுக்கு, அவர்கள் அவ்வளவு திருச்சபைக் கோட்பாடுள்ளவர்களாக ஆகிவிடுகிறார்கள். அந்த வழியில் அதைக் கண்டடைய எந்த வழியும் இல்லை. “தேவன் ஞானிகளுக்கும் அறிவுள்ளவர்களுக்கும் தம்மை மறைத்தி ருக்கிறார்,” என்று அவர் சொன்னார். ஆகவே, கவனியுங்கள், அவர் அந்தப் பெண்ணிடம் பேசியபோது. அவள், “மேசியா வரும்போது, அவர் இந்தக் காரியங்களைச் சொல்வார், இந்தச் செயல்களைச் செய்வார் என்று எனக்குத் தெரியும்” என்றாள். அவர், “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். அவள் நகரத்திற்குள் ஓடிப்போய், “நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன ஒரு மனுஷனை வந்து பாருங்கள். இவர்தானோ மேசியா?” என்றாள். ஏன், அவள் செய்த எல்லாவற்றையும் அவர் அவளுக்குச் சொல்ல வில்லை. அவர் அவளுக்கு அந்த ஒரு காரியத்தை மட்டுமே சொன்னார். ஆனால் தேவன் அந்த ஒரு காரியத்தை அவருக்கு வெளிப்படுத்த முடியுமானால், எல்லாவற்றையும் அவருக்கு வெளிப்படுத்த முடியும். 30  எனவே அப்படியானால், நீங்கள் கவனித்தால், சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் பெதஸ்தா குளத்தைக் கடந்து சென்றார், அங்கே முடவர்கள், சப்பாணிகள், அங்கவீனர்கள், குருடர்கள், கை கால் ஊனமுற்றவர்கள் என அநேகத் திரளான ஜனங்கள்... இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள். அவர் இந்த ஜனங்களைக் கடந்து சென்றபோது, அன்பு மற்றும் மனதுருக்கத்தால் நிறைந்திருந்தபோதிலும், அவர் அவர்களில் ஒருவரையாவது தொடவில்லை. தெற்கத்திய பகுதியில் நாங்கள் ஒரு சிறிய படுக்கை என்று அழைப்பது போல, ஒரு சிறிய படுக்கையின்மேல் படுத்திருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடிக்கும்வரை அவர் அவர்களைக் கடந்து சென்றார். மேலும் அதனால் அவரைச் சுகமாக்கினார். அவன்—அவன் முடவனாக இருக்கவில்லை. அவன், “நான் குளத்தில் இறங்க வரும்போது, வேறொருவன் எனக்கு முன்னே இறங்கி விடுகிறான்” என்றான். அவன்... ஒருவேளை அவனுக்கு வயதாகிக் கொண்டிருந்திருக்கலாம். அவனுக்கு முப்பத்தெட்டு வருடங்களாக அந்த வியாதி இருந்தது. அது அவனைக் கொல்லப்போவதில்லை. அவன் வெறுமனே வளர்ச்சி தடைபட்டிருந்தான். எனவே அவனுக்கு காசநோய் (TB) அல்லது புரோஸ்டேட் பிரச்சனை அல்லது வேறு ஏதேனும் இருந்திருக்கலாம். அவர், “உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப் போ” என்றார். இப்பொழுது, நீங்கள் கவனித்தால், அதற்கு முன்பாக வேதம் சொல்கிறது, அவன் அங்கிருக்கிறான் என்பதை இயேசு அறிந்தி ருந்தார். இப்பொழுது, யூதர்கள் அவனைக் கண்டு பிடித்து இயேசுவைக் கேள்வி கேட்ட போது, அவர் ஏன் அந்தத் திரளான ஜனங்கள் அனைவரையும் சுகமாக்கவில்லை? அவர் ஏன் அவர்கள் அனைவரையும் குணமாக்கவில்லை? 31  இன்று இரவு நியூயார்க்கில் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா, நாம் ஒரு பெரிய கூட்டத்தை நடத்தி, அங்கே ஒரு பெரிய... முடவர்கள், குருடர்கள், மற்றும் நடக்க முடியாதவர்கள் என ஒரு பெரிய கூட்டத்தையே தள்ளிக்கொண்டு வந்து, கர்த்தர் இறங்கி வந்து ஒருவேளை ஒரு நபரை மட்டும் குணமாக்கிவிட்டு, விலகிச் சென்றால் என்ன நடக்கும்? அவர்கள் என்ன சொல்வார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? "உஹும், அவர் அந்த நபரை குணமாக்குவதை நான் பார்க்கட்டும், பிறகு நான் அதை நம்புகிறேன்." பார்த்தீர்களா? தேவன் உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் குணமாக்கு வதில்லை. அவர் உங்கள் விசுவாசத்தின் அடிப்படையில் குணமாக்குகிறார். அதுதான் சரி. ஆகையால் அவர்கள் இதைக் குறித்து இயேசுவிடம் கேள்வி எழுப்பியபோது. அவர் என்ன சொன்னார் என்று கேளுங்கள், இப்போது, பரிசுத்த யோவான் 5:19. கவனமாகக் கேளுங்கள். "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்: பிதா செய்கிறதை குமார னுக்குக் காண்பிக்கிறார். நீங்கள் ஆச்சரியப் படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் உங்களுக்குக் காண்பிப்பார். என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன்." பார்த்தீர்களா? 32  வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசு தம்முடைய சொந்த வார்த்தைகளால் சொன்னார், "நான் என்னாலே ஒரு காரியத்தையும் செய்வதில்லை, ஆனால் நான் கவனிக்கிறேன். பிதா எனக்கு எதைக் காண்பிக்கிறாரோ, அதை நான் போய் செய்கி றேன்." அது சரியா? "மெய்யாகவே மெய்யா கவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிற தெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்." இப்போது, ஒருமுறை ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டுவிட்டு கூட்டத்திற்குள் ஓடினாள். அவளுடைய விசுவாசம் அவ்வளவு பெரிதாக இருந்ததால், அவர் திரும்பிப் பார்த்து கூட்டத்திலிருந்து அவளைத் தேர்ந்தெடுத்து, "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. உன் இரத்தப்போக்கு நின்றுவிட்டது, எல்லாம் முடிந்துவிட்டது" என்றார். பார்த்தீர்களா? மேலும் அநேகர்... அவர் கிரியை செய்த விதத்தை நாம் கவனிக்கிறோம்: பிதா அவருக்குக் காண்பித்த படியே, தனக்கென்று எந்தப் பெருமையையும் தேடிக்கொள்ளாமல், பிதா செய்ததையே அவர் செய்தார். பிதாவின் சித்தத்தைச் செய்யவே அவர் வந்தார். அதுதான் அவர் கொண்டிருந்த ஊழியத்தின் வகை. இப்போது, கேளுங்கள். 33  அவர் சொன்னார், "இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள் (அது விசுவாசி). உலகம் (அவிசுவாசி) இனி என்னைக் காணாது," ஏனென்றால் அவர் சென்றுவிடுவார். அது அதைத் தீர்த்துவிடுகிறது. "உலகம் இனி என்னைக் காணாது; நீங்களோ என்னைக் காண்பீர்கள். உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களுடனேகூட, உங்களுக் குள்ளும் இருப்பேன்" என்றார். அது-அது அவருடைய சொந்த வார்த்தைகள். அது சரியா? இப்போது, நண்பர்களே, அது சரி அல்லது தவறு. எபிரெயர் 13:8 சொல்லுகிறது, "இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." அது சரி என்றால், அவர் தமது வார்த்தைக்குக் கடமைப் பட்டிருக்கிறார். அது சரியில்லை என்றால், வேதாகமம், பைபிள் நம்பத்தகுந்த ஒரு புத்தகம் அல்ல. என்னைப் பொறுத்தவரை, இது கருப்பு அல்லது வெள்ளை. இது சரி அல்லது தவறு. இது முற்றிலும் சரி என்று நான் கண்டு கொண்டதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 34  ஏனெனில் அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறார். அவர் வாழ்கிறார்... இப்போது, கவனியுங்கள். நீங்கள் சொல்கி றீர்கள், "சரி, நிச்சயமாக அவர் மரித்தோரி லிருந்து எழுந்தார் என்று நாங்கள் நம்புகிறோம்." அவர் என்ன சொன்னார்? "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்." அது ச-சரியா, போதகர்களே? "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். இவைகளைப் பார்க்கிலும் பெரிதானவை களையும்..." பெரிதான என்ற வார்த்தைக்கு, அறிஞர்களாகிய உங்களுக்குத் தெரியும், சரியான விளக்கம் அதிகமான என்பதாகும். அவரால் இதைவிடப் பெரிதாக எதையும் செய்ய முடியாது. அவர் இயற்கையை நிறுத்தினார், மரித்தோரை எழுப்பினார், மற்றும் எல்லாவற்றையும் செய்தார். தரத்தில் அல்ல, எண்ணிக்கையில் தான் அதிகமானவை. "இவைகளைப் பார்க்கிலும் அதிகமானவைகளை நீங்கள் செய்வீர்கள், ஏனெனில் நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறேன்." அது சரியா? "நான் செய்கிற இதே காரியங்களை, நீங்களும் செய்வீர்கள்." 35  இப்போது, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருந்தால், அவர் அந்த வார்த்தைக்குக் கடமைப் பட்டிருக்கிறார், அல்லவா? இங்கே அவருடைய ஊழியத்தின் தொடக்கத்தில், அவர்... இந்த ஏரிக்கரையில் அவர் நின்றுகொண்டிருந்த அந்த காலையை என்னால் நினைக்க முடிகிறது. அவருடைய-அவருடைய ஊழியம் அப்போதுதான் தொடங்கியிருந்தது. அவர் பிரபலமாகிவிட்டார். சிறிய கூட்டமாக மக்கள் அவரைச் சுற்றி கூடிவந்தார்கள். சில அற்புதங்கள் நடந்திருந்தன. அவர் ஒரு பட்டணத்திற்குச் சென்று ஒரு மனிதனைக் குணமாக்கிவிட்டு, பிதா அவருக்குக் காண்பித்த அந்தப் பட்டணத்தை விட்டு நேராக வெளியேறி வேறு எங்காவது செல்வார். பிதா அவருக்கு எதைக் காண்பித்தாரோ அதையெல்லாம்... இந்த நாளில் அவர்...? ...ஒரு மீனவர் குழு. பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். நாசரேத்தூர் இயேசுவாகிய இந்த அற்புதமான நபரைக் குறித்து ஒருவேளை மற்றவர்களால் அவர்களுக்கு முன்பே சொல்லப்பட்டிருக்கலாம். அவர்கள் அந்த ஏரி முழுவதும் இரவு முழுவதும் வலைவீசிப் பிடித்தார்கள். அவர்கள் மீனவர்கள். ஒருவேளை கற்பனைக்காக, மீன்பிடிக்க ஏற்ற காலமான ஏப்ரல் மாதமாக அது இருக்கலாம் என்று வைத்துக்கொள்வோம். 36  அவர்கள் அங்கே இந்த வலையை வீசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மீனவர்கள். எப்படிப்பட்ட வானிலை இருக்க வேண்டும் என்றும், நட்சத்திரங்கள் மற்றும் சந்திரன் முதலியவற்றுக்கும் ஏற்றபடி அவர்களுக்குத் தெரியும். முழு நாட்காட்டியும் உள்ளுணர் வாலேயே அவர்களுக்குக் கொடுக்கப் பட்டிருந்தது. மீன்கள் எப்போது வலையில் சிக்கும், எப்போது சிக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் இந்த ஏரி முழுவதும் இரவு முழுவதும் வலைவீசியும் ஒன்றும் அகப்படவில்லை. ஆச்சரியமே, இரவு முழுவதும் மீன்பிடித்தும் ஒன்றும் கிடைக்காதது மிகவும் சோர்வான ஒரு காரியம். மறுநாள் காலை அவர்கள் சோர்வ டைந்து, உட்கார்ந்து தங்கள் வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தக் கரையின் வழியாக சபைகளால் நிந்திக்கப்பட்டும் வெறுக்கப்பட்டும் வந்த அந்த அன்பான, தனிமையான கலிலேயர், ஆனாலும் சமாதானப் பிரபு நடந்து வருகிறார். 37  அவர் கரையோரமாக நடந்து வரும் போது, அவரைப் பின்பற்றிய அவருடைய சில அப்போஸ்தலர்கள், அதாவது சீஷர்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்தார்கள்... முந்தின நாள் இரவு கூட்டத்தில் இருந்த பெண்கள் அனைவரும், அங்கே கரையோரத்தில் இருந்த தங்கள் சிறிய குடிசைகளில் துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்து கொண்டி ருப்பதை இப்போது என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவர்கள், "வியாதியஸ்தர்களைக் குண மாக்கும் அந்த மனிதர், அந்தத் தீர்க்கதரிசி இதோ போகிறார். நாம் கீழே போய் அவர் சொல்வதைக் கேட்போம். ஒருவேளை நாம் கூடினால் அங்கே கரையில் ஒரு கூட்டம் நடக்கும்" என்று சொன்னார்கள். அவர்கள் தங்கள் பாத்திரங்களை அல்லது துவைக்கும் துணிகளை ஒருபுறம் வைத்துவிடுவதை என்னால் பார்க்க முடிகிறது. வயலில் உழுவதிலிருந்து எருதுகளை ஆண்கள் நிறுத்துகிறார்கள். அவர்கள் இயேசுவிடம் பேசுவதற்காகக் கீழே வருகிறார்கள். அவர் கரையில் நின்று மக்களிடம் பேசத் தொடங்கியபோது, அவர்கள், "தேவவசனத்தைக் கேட்பதற்காக ஜனங்கள் அவரிடத்தில் திரண்டுவந்தார்கள்" என்றார்கள். 38  தேவனுடைய ஊழியக்காரர் பிரசங்கிப் பதை என்னைப் போல் உலகத்தில் யாரும் ரசித்துக் கேட்பதில்லை. அது வானொலியில் இருந்தால் ஒழிய, நான் அதிகம் கேட்பதில்லை. பல்வேறு பிரிவு சபைகள் அனைத்திலும். நான் அவர்களைக் கேட்பதை மிகவும் விரும்புகிறேன். அவர்களைச் சந்திப்பதற்கோ அல்லது கூட்டங்களில் அதிகம் கேட்பதற்கோ எனக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை, ஏனென்றால் நோயாளிகளுக்காக ஜெபிப்பது மற்றும் பல காரியங்களிலேயே நேரம் முழுவதுமாகி விடுகிறது. சில நேரங்களில் ஆயிரமாயிரமான கூட்டங்கள், மற்றும் பரிசுத்த ஆவியானவர் இடத்திற்கு இடம் அசைவாடுகிறார்... நல்ல போதகர்கள் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன். ஆனால் அவர் தமது கரங்களை நீட்டி, "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று சொன்ன அந்த நேரத்தில் அங்கே இருக்க நான் மிகவும் விரும்பியிருப்பேன். 39  வானொலி தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் அவருடைய சத்தத்தின் அலைகளைப் பிடிக்கும்படியான ஒரு படிகத்தை உருவாக்கக்கூடிய ஒரு நாளைக் காண நான் உயிரோடிருப்பேனா என்று நான் அடிக்கடி ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அது ஒருபோதும் மரிப்பதில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். அது அப்படியே பாய்ந்து செல்கிறது. "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." அந்த நாளைப் பார்ப்பதற்கு நான் உயிரோடிருப்பேனோ இல்லையோ எனக்குத் தெரியாது. தேவன் அதை அனுமதிப்பாரோ இல்லையோ தெரியாது. ஆனால் என்னிடம் ஒன்று இருக்கிறது; என்றாவது ஒரு நாள் அவர், "நன்றாய்ச் செய்தாய், உத்தமமும் உண்மை யுமுள்ள ஊழியக்காரனே" என்று சொல்வதை நான் கேட்பேன் என்று இதை நம்புகிறேன். அந்த நாளைக் காணவும், "நன்றாய்ச் செய்தாய். உன்னால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்தாய்" என்ற அந்த சத்தத்தைக் கேட்கவுமே நான் வாழ்கிறேன். அதற்காகவே நான் உழைத்தி ருக்கிறேன். அதற்காகவே நான் என் கர்த்தராகிய இயேசுவின் மீதுள்ள அன்பினால் பணிசெய்து உழைத்திருக்கிறேன். 40  இந்த மீனவர்கள், அப்போஸ்தலர்கள் கரையோரத்தில் ஒரு மரக்கட்டையின் மீது அமர்ந்து கொண்டு, "சரி, அதோ அந்த மனிதர், அந்த-அந்தப் புதிய நபர், அங்கே கீழே சுகமளிப்பதைப் பற்றி பிரசங்கிக்க வந்திருக் கிறார். நாம் இங்கே உட்கார்ந்து அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்" என்று சொல்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. முதல் நாள் இரவு சபைக்கு வரும் ஒருவன், எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னால் போய் அமர்வது உங்களுக்குத் தெரியும். பிறகு இயேசு பேசத் தொடங்கும் போது அவரை நான் கவனிக்க முடிகிறது, அவருடைய வார்த்தையில் சாதாரண மனிதர்களிடமிருந்து சற்றே வித்தியாசமான ஒன்று இருந்தது. அப்போஸ்தலனாகிய பேதுரு தனது மரக் கட்டையை எடுத்துக்கொண்டு, இன்னும் சற்று நெருக்கமாக இழுத்துப்போட்டு உட்காருவதை என்னால் பார்க்க முடிகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் நேராக முன்னால் வந்து, அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் பேசினார்... அவருடைய வாயிலிருந்து விலையேறப்பெற்ற வார்த்தைகள் வெளிவந்தன... 41  அதன் பின்பு அவர், அப்போஸ்தலனின் படகை இரவலாகக் கேட்டு வெளியேறினார். ஆகையால் மக்கள் கூட்டம் அவரை நெருக்கியதால், அவர் படகில் ஏறினார். அவர் பேசி முடித்த பின்பு, பேதுருவை நோக்கி, "ஆழத்திலே தள்ளி, மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். இப்போது, அங்கே ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்கும்படி வலைகளைப் போடுவதல்ல, போட்டு ஒரு முயற்சி செய்து பார்ப்பதுமல்ல. ஆனால் ஒரு பெரிய திரளான மீன்களைப் பிடிக்கும்படியாக வலைகளைப் போடுங்கள். சரி, அதற்கு அப்போஸ்தலன், "ஆண்டவரே, நாங்கள்-நாங்கள் இரவு முழுவதும் மீன் பிடித்தோம். நாங்கள் மீனவர்கள். எங்களுக்கு எங்கள் தொழில் தெரியும். மேலும் அங்கே மீன்களே இல்லை" என்றார். அவர் தம் இருதயத்தில், "இப்போது, நாங்கள் அந்தத் தண்ணீர் முழுவதும் மீன்பிடித்தோம், அங்கே மீன்கள் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும்" என்று சொல்லியிருப்பார் என நான் கற்பனை செய்கிறேன். ஆனால் இயேசு அவற்றைப் பிடிக்கும்படி வலைகளைப் போடச் சொன்னால், அவரால் அங்கே சிலவற்றை வைக்க முடியும். நீங்கள் அவருடைய வார்த்தையின்படி அவரை ஏற்றுக்கொண்டால். 42  இப்போது, ஒருவேளை நீங்கள் நகரத்தில் உள்ள ஒவ்வொரு மருத்துவரிடமும் சென்றி ருக்கலாம். ஒருவேளை நீங்கள் ஒவ்வொரு கிளினிக்கும், ஒவ்வொரு மருத்துவரின் அலுவலகமும் தேடி அலைந்திருக்கலாம். ஒருவேளை நேர்மையான அந்த மனிதர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, "உங்களுக்கு என்ன பிரச்சினை என்று எனக்குத் தெரியவில்லை" என்று சொல்லியிருக்கலாம். ஒருவேளை உங்களுக்கு என்ன பிரச்சினை என்று அவர் கண்டுபிடித்து, "உங்களைக் குணப் படுத்துவது மருத்துவத்துறையில் இல்லை. உலகில் நாங்கள் உங்களுக்குச் செய்யக்கூடியது எதுவுமில்லை" என்று சொல்லலாம். ஒருவேளை நீங்கள் அந்த வலைப்பின்னல் அனைத்தையும் கடந்து, ஜெப வரிசைகள் வழியாகச் சென்றிருக்கலாம். உங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் நீங்கள் செய்திருக் கலாம், ஆனாலும் நீங்கள் இன்னும் வியாதியுடனும் மோசமான நிலையிலும்தான் இருக்கிறீர்கள். அப்போஸ்தலன் சொன்னது போல் நீங்கள் ஏன் செய்யக்கூடாது? "ஆண்டவரே, இது எப்படி நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே, ஆண்டவரே, இன்றிரவு நான் வலையைப் போடப் போகிறேன். இன்றிரவு நீர் என்னைக் குணமாக்கப் போகிறீர் என்று என் முழு இருதயத்தோடும் நம்பி வலையைப் போடப்போகிறேன்." நீங்கள் இங்கிருந்து ஒரு நலமான நபராகச் செல்வீர்கள். "உம்முடைய வார்த்தையின்படியே, ஆண்டவரே, நான் வலையைப் போடப்போகிறேன்." 43  அது என்னவாக இருந்தாலும் சரி. அப்போஸ்தலன் எங்கே இரவு முழுவதும் வலைவீசினாரோ, அதே தண்ணீருக்குத் திரும்பிச் சென்று மீண்டும் வலையைப் போடும்படி இயேசு அவரிடம் கேட்டார். ஆகையால் அவர் வலையைப் போட்டபோது, திரளான மீன்களை வளைத்துப் பிடித்தார். அவர் அப்போஸ் தலனுக்கு முன்பாக விழுந்து, என்றார்... இயேசுவுக்கு முன்பாக விழுந்து, "ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும்" என்றார். எப்படி அவர் இல்லை... அன்றிலிருந்து அவர் கர்த்தருக்கு ஊழியம் செய்தார். இயேசு அவருக்கு அளித்த அந்தப் பெரிய ஆசீர்வாதங்கள்... அவர் சொன்னார், "இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்." 44  இன்றிரவு, நான் எப்படி... பல விமர்சனங்கள்... நான் ஆரம்பத்தில் தொடங்கிய எல்லாவற்றிலும், அது பயங்கரமாக இருந்தது. ஆனால் இப்போது கர்த்தர் விமர்சகர்களை வீழ்த்திவிட்டார், எவ்வாறெனில் விமர்சகர்களின் வாயை அடைக்கும் அளவிற்கு ராஜாக்கள் மற்றும் அதிகாரம் கொண்ட பெரிய மனிதர்கள் மற்றும் மருத்துவர்கள் எழுதிக்கொடுத்த பல்லாயிரக்கணக்கான சாட்சிகள் மற்றும் தெய்வீக சுகமளித்தல் மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தது உட்பட மற்ற எல்லாவற்றின் மூலமாகவும் வீழ்த்திவிட்டார். தேவன் ஒரு பெரிய வெளிச்சத்தின் ரூபத்தில் கூட்டத்தில் தோன்றி, அதை எடுத்துக்கொண்டார். எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமின்றி தம்முடைய வார்த்தை சத்தியம் என்பதை தேவன் முழுமையாக நிரூபிக்கும் வரை, அனைத்து வகையான பரிசோதனைகள் மற்றும் காரியங்கள் அனைத்தின் வழியாகவும் இது கடந்து சென்றது. இது விமர்சகர்களைத் தடுத்து நிறுத்தியது. 45  நான் அவரை நேசிக்கிறேன். இன்றிரவு ஒவ்வொரு கிறிஸ்தவனும் இதை-இதை அப்படியே தனக்குள் பற்றிக்கொண்டிருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தினால், ஒவ்வொரு மனிதனும் வர வேண்டும்... நீங்கள் இன்றிரவு முதல் முறையாக இங்கு வந்திருந்தால், நீங்கள் இதை விவேகத்துடனும், வேதத்தின்படியும் பார்த்து, அதே வழியில் அணுக வேண்டும். விமர்சன நோக்கத்தோடு வராதீர்கள்... "சரி, நான் நம்பவில்லை. எனக்குக் கவலையில்லை" என்று சொல்லிக்கொண்டு வராதீர்கள். சரி, நீங்கள் ஒரு... கொஞ்ச காலத்திற்கு முன்பு ஒருவன் என்னிடம் சொன்னான், "சகோதரர் பிரன்ஹாம், என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை; நான் இதை நம்பவில்லை" என்றான். நான் சொன்னேன், "இது உங்களுக்கானது அல்ல. இது அவிசுவாசிகளுக்கானது அல்ல. இது விசுவாசிக்கிறவர்களுக்கானது, விசுவாசி களுக்கு மட்டுமே." அப்போது அவர் சொன்னார், "விசுவாசிக்கிறவன்..." அதுதான். "விசுவாசிக்கிற வர்களால் நடக்கும் அடையாளங்களாவன," அவிசுவாசிகளால் அல்ல, விசுவாசிக்கிற வர்களால். அவர்கள் தான்...? ... 46 மேலும் நான், இன்றிரவு இந்தக் காரியங்களை நினைத்துப் பார்த்து, கர்த்தர் எப்படிச் செய்தார் என்பதைக் காண்கையில்… சில மக்கள் வெட்கப்படுகிறார்கள். கர்த்தராகிய இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட பிறகு, அவர்கள் வெளியே சென்று அவரை அறிக்கை செய்ய வெட்கப்படுகிறார்கள். பல நேரங்களில் அவர்கள் அவரைத் தங்கள் குணமாக்குபவராக ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் வெளியே சென்று அவரை அறிக்கை செய்ய வெட்கப்படுகிறார்கள். நீங்கள் ஒருபோதும் அவரைக்குறித்து வெட்கப்படக்கூடாது. நீங்கள் சரியாக முன்னணியில் இருக்க வேண்டும்… என்ன நடந்தாலும், உங்கள் சாட்சியில் நிலைத்து நிற்க நீங்கள் சரியாக முன்னணியில் இருக்க வேண்டும். 47 ஏனென்றால் நீங்கள் சாட்சி பகரும்போது மட்டுமே தேவனால் உங்களை இரட்சிக்க முடியும். நீங்கள் சாட்சி பகரும்போது மட்டுமே அவரால் உங்களைக் குணமாக்க முடியும். உங்கள் அறிக்கையின் அடிப்படையில் பரிந்துபேசுவதற்காக அவர் இன்றிரவு பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். நீங்கள் எவ்வளவு சத்தமாக அழுகிறீர்கள், எவ்வளவு பலமாக பீடத்தில் தட்டுகிறீர்கள், எத்தனை நற்செயல்களைச் செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல; உங்கள் விசுவாசமே உங்களை இரட்சிக்கிறது. நீங்கள் உங்கள் உதடுகளால் அதை அறிக்கை செய்து, அது உங்கள் இருதயத்தி லிருந்து வருமானால், அவர் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் பிரதான ஆசாரியராக, உங்கள் அறிக்கையின் அடிப்படையில் பரிந்து பேசும்படி செயல்படத் தொடங்குகிறார். எபிரெயர் 3:1, முதலாவது நீங்கள் அதை விசுவாசித்து, ஏற்றுக்கொண்டு, அது அப்படியே ஆகும் என்று அறிக்கை செய்யும் வரை அவரால் உங்களுக்காக ஒரு காரியமும் செய்ய முடியாது. இன்றைக்கு மக்கள், அவர்கள் வெளியே சென்று, "சரி, நேற்றிரவு எனக்கு நன்றாயிருந்தது, ஆனால் இன்று நான் மிகவும் மோசமாக இருக்கிறேன், என்னால் நிற்கவே முடிய வில்லை" என்று சொல்வார்கள். நீங்கள் உங்கள் அறிக்கையை இழந்து, கீழே விழும் நேரம் அதுதான். நீங்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பரிசுத்தமாக, எவ்வளவு தேவபக்தியாக இருந்தாலும், நீங்கள் ஒரு ஊழியராக, போதகராக, அல்லது நீங்கள் ஒரு டீக்கனாக, அல்லது நீங்கள் யாராக இருந்தாலும் சரி, அல்லது ஐம்பது ஆண்டுகளாக நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும், நாளை நீங்கள் இங்கிருந்து வெளியே சென்று நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்ற விசுவாசத்தை இழந்து, நீங்கள் இனி ஒரு கிறிஸ்தவர் இல்லை என்று மக்களிடம் சொல்லத் தொடங்கினால், நீங்கள் பின்வாங்கிப்போனவர் ஆவீர்கள். நீங்கள் போய்விட்டீர்கள். 48 உங்கள் அறிக்கையினால் மட்டுமே நீங்கள் இரட்சிக்கப்பட முடியும். தேவன் மனிதனின் கையில் கொடுத்த மிகச் சக்திவாய்ந்த ஆயுதம், ஒரு ஒப்புக்கொடுத்தலும் மற்றும் ஒரு அறிக்கையும்தான். நீங்கள் அதை விசுவாசித்து, அந்த அடிப்படையில் அதை ஏற்றுக்கொண்டு, அதை விசுவாசித்து அதிலேயே நிலைத் திருந்தால், அது ஒவ்வொரு முறையும் அதைச் செய்யும். அதை அறிக்கை செய்துகொண்டே இருங்கள். நீங்கள் அதை அறிக்கை செய்யும்போது... உங்களுக்குத் தெரியுமா நிறைய மக்கள் அறிகுறிகளைப் பார்க்கிறார்கள். அவர்கள் எப்போதும் சுற்றித்திரிந்து, "சரி இப்போது, எனக்கு எந்த முன்னேற்றமும் தெரியவில்லை" என்று சொல்வார்கள். அதற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நீங்கள் விசுவாசிப் பதுதான் முக்கியமே தவிர, நீங்கள் உணர்வது அல்ல. நல்ல அறிகுறிகளைக் கொண்ட ஒரு மனிதன் இருந்தான் என்றால், அது யோனாதான். அவர் பின்வாங்கிப்போயிருந்தார், கொந்தளிப்பான கடலில் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், ஒரு திமிங்கிலத்தால் விழுங்கப்பட்டு, திமிங்கிலத்தின் வயிற்றில், கடலின் அடியில் இருந்தார். ஒரு மீன் உணவருந்தும்போது, அது தன் வழியைக் கண்டுபிடிக்கும் வரை தண்ணீரின் வழியாகச் சென்று, பின்னர் நேராகக் கீழே சென்று அடியில் ஓய்வெடுக்கும் என்பது எந்தவொரு மனிதனுக்கும் தெரியும். 49 உங்கள் தங்க மீன்களுக்கு உணவளித்துவிட்டு, அவை என்ன செய்கின்றன என்று பாருங்கள், நேராகக் கீழே சென்று, அவற்றின் சிறிய துடுப்புகளை வெளியே விட்டு ஓய்வெடுக்கும். இப்போது, இந்த ஊழியக் காரரான, தீர்க்கதரிசியான யோனா ஒரு திமிங்கிலத்தால் விழுங்கப்பட்டிருந்தார். மேலும் கைகள் அவருக்குப் பின்னால் இருந்தன. அவர் பின்வாங்கிப்போயிருந்தார், ஏனென்றால் தேவன் அவரை நினிவேக்குச் செல்லச் சொன்னார், ஆனால் அவர் தர்ஷீசுக்குச் சென்றார், தர்ஷீசுக்குச் செல்லும் வழியில் இருந்தார். அவர் பின்வாங்கிப்போயிருந்தார். அங்கே சுற்றியுள்ள கடல் ஒரு மைல் அல்லது இரண்டு மைல் ஆழம் கொண்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்தத் திமிங்கிலம் இப்போது தன் வயிற்றில் இந்தப் போதகரோடு கடலில் வெகு ஆழத்திற்குச் சென்றுவிட்டது. அவர் இந்தப் பக்கம் பார்த்தால், அது திமிங்கிலத்தின் வயிறு, அந்தப் பக்கம் பார்த்தால், அது திமிங்கிலத்தின் வயிறு. அவர் எங்கு பார்த்தாலும் அது திமிங்கிலத்தின் வயிறுதான். ஒரு நிலைமையில் இருப்பதைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். அவருக்குச் சில அறிகுறிகளைப் பார்ப்பதற்கு உண்மையிலேயே ஒரு வாய்ப்பு இருந்தது. அவர் பார்த்ததெல்லாம் திமிங்கிலத்தின் வயிறுதான். ஆனால் அவர் என்ன சொன்னார்? "பொய்யான மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள். நான் அவற்றைப் பார்க்க மறுக்கிறேன்," என்று அவர் சொன்னார். வாந்திக்கு மத்தியிலும்—திமிங் கிலத்தின் வயிற்றில், கடல்பாசிகள் அவரது கழுத்தைச் சுற்றியிருக்க... அந்த நிலைமையில் அவர் மீண்டும் ஒருமுறை சொன்னார்… 50 இன்றிரவு இங்கே யாரும் அந்த நிலைமையில் இல்லை. யாரும் அந்த நிலைமையில் இருந்ததில்லை. அவர் எவ்வளவு சாத்தியமற்ற நிலையில் நின்றிருந்தார் என்பதைப் பாருங்கள். ஆனாலும் அவரைச் சுற்றியிருந்த அறிகுறிகளைப் பார்க்க அவர் மறுத்தார். "கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்கி மறுபடியும் பார்ப்பேன்," என்று அவர் சொன்னார். அது சரிதான். ஏன்? சாலொமோன் ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தபோது, அவர் ஜெபம் செய்தார்; "ஆண்டவரே, உம்முடைய ஜனங்கள் எங்கு கஷ்டத்தில் இருந்தாலும், இந்த ஆலயத்தை நோக்கிப் பார்த்து ஜெபித்தால், நீர் பரலோகத்திலிருந்து கேட்பீராக," என்று அவர் சொன்னார். சாலொமோனின் ஜெபத்தை தேவன் கேட்டார் என்று யோனா விசுவாசித்தார். அவர் ஆலயத்திற்கு நேராகப் பார்த்தார், தேவனுடைய வார்த்தையின்படி, அந்தத் திமிங்கிலத்தின் வயிற்றில் தேவன் அவரை மூன்று பகலும் மூன்று இரவும் உயிரோடு பாதுகாத்தார். அந்தச் சூழ்நிலைகளின் கீழ், யோனாவால் தேவனை அப்படி விசுவாசிக்க முடியும் என்றால், இன்றிரவு நீங்களும் நானும் எவ்வளவு அதிகமாக விசுவாசிக்க வேண்டும்? 51 ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக் கானோர் எல்லாவிதமான வியாதிகளிலிருந்தும், உபத்திரவங்களிலிருந்தும் குணமாக்கப்படுகிற இந்த இடத்தில் அமர்ந்திருக்கிறோம். மாம்ச மனிதனால் கட்டப்பட்டு, மாம்ச மனிதனால் ஜெபம் ஏறெடுக்கப்பட்ட இயற்கையான ஆலயத்தை நாம் நோக்கிக் கொண்டிருக் கவில்லை. நமது அறிக்கைக்காகத் தமது சொந்த இரத்தத்தினால் பரிந்துபேசிக் கொண்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு வீற்றிருக்கும் பரலோகத்தை நாம் நோக்குகிறோம். "நான் அதைப் பார்க்க மறுக்கிறேன். இயேசு கிறிஸ்து எனக்கு நித்திய ஜீவனை வாக்குத்தத்தம் செய்தார். அது என்னிடம் இருக்கிறது. இயேசு கிறிஸ்து என் வியாதியைக் குணமாக்குவதாக வாக்குத்தத்தம் செய்தார். நான் அதைப் பெற்றுக்கொண்டேன். நான் அதை அறிக்கை செய்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன். நான் அதிலேயே நிலைத்திருப்பேன்" என்று நாம் எவ்வளவு அதிகமாகச் சொல்ல வேண்டும். அப்போது நீங்கள் செய்யப்போகிறீர்கள்… மக்கள் சுற்றித்திரிந்து, "நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?" என்று கேட்டாலும், "அற்புதமாக இருக்கிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்," என்று சொல்லுங்கள். அப்போது நீங்கள் பிசாசை உங்களை விட்டு விரட்டியடிப்பீர்கள். 52 ஒருமுறை நான் வியாதியாயிருந்தபோது. மேயோ சகோதரர்கள் (Mayo Brothers) என்னைக் கைவிட்டுவிட்டார்கள், எல்லாம் முடிந்தது, நான் பிழைக்க மாட்டேன் என்று சொன்னார்கள். நான் சாப்பிடுவதெல்லாம், அப்படியே வாந்தியாக வெளியே வந்தது. நான் நேராக உட்கார்ந்து, தேவனுடைய வார்த்தையை அப்படியே நம்பி, நான் அவருக்கு ஊழியம் செய்வேன் என்று அவரிடம் சொன்னேன். நான் கொஞ்சம் வெங்காயம், பீன்ஸ், சோள ரொட்டி மற்றும் போலோக்னா (bologna) ஆகியவற்றைச் சாப்பிட்டேன். நான் ஒரு பெரிய வாய் நிறைய சாப்பிட்டேன், பிசாசு, "ஊஹும்," என்றது. எரியத் தொடங்கியது, மருத்துவர், "அந்தப் பையன் அதை அவன் வயிற்றில் போட்டால் இறந்துவிடுவான்" என்று சொன்னார். அது மீண்டும் மேலே வரத் தொடங்கியது, நான் என் வாயின் மேல் என் கையை வைத்துக்கொண்டேன். நான் சொன்னேன், "ஓ, இல்லை, ஊஹும், தேவன் அப்படிச் சொன்னார்." மேலும் நான் தேவனைத் துதித்தபடியே வீதி வழியே சென்றேன். பிசாசு என்னிடம், "உனக்கு எந்த முன்னேற்றமும் இல்லை" என்று சொன்னது. நாட்கள் கடந்தன. "உனக்கு எந்த முன்னேற்றமும் இல்லை" என்று அது சொன்னது. நான் சொன்னேன், "இங்கே பார் பிசாசே, நான் சாட்சி சொல்லி, இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதை நீ கேட்க விரும்ப வில்லை என்றால், என்னை விட்டு விலகிப் போ, ஏனென்றால் நான் சாகும் வரை அதைச் சொல்லுவேன்." அது சரிதான். ஆமென். 53 இன்றிரவு, எனக்கு ஒரு ஸ்டீக் (steak) கறியைக் கொடுத்து என்னால் அதைச் சாப்பிட முடிகிறதா இல்லையா என்று சோதித்துப் பாருங்கள். பார்த்தீர்களா? நான் ஆரோக்கியமாக, பலமாக இருக்கிறேன். அந்த நேரத்தில் என் எடை வெறும் நூற்று பதினெட்டு, பத்தொன்பது பவுண்டுகளாகத்தான் இருந்தது. இப்போது என் எடை நூற்று அறுபத்தைந்து. ஆமாம் ஐயா. ஏனென்றால் ஏன்? நான் தேவனை விசுவாசிக்கிறேன். எனக்கு அவர்மேல் விசுவாசம் இருந்தது. இது அவருடைய வார்த்தை. இது என் வார்த்தை அல்ல. இது அவருடைய வார்த்தை. தேவன் அதைச் செய்வதாகச் சொன்னார். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என் றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார் என்றும், இந்த உருவத்தில் திரும்பி வந்து, அவர் இங்கிருந்தபோது செய்த அதே காரியங்களைச் செய்வார் என்றும் இயேசு சொன்னபோது, அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நான் சத்தியம் என்று விசுவாசிக்கிறேன். என் நம்பிக்கை இயேசுவின் இரத்தத்தின்மேலும் நீதியின்மேலும் அன்றி வேறு எதன்மேலும் கட்டப்படவில்லை. அது சரிதான். இதோ அவருடைய வார்த்தை இருக்கிறது. அதைப் பார்த்துக்கொள்ள அவருடைய இரத்தம் இருக்கிறது. அவர் பிராயச்சித்தத்தில் வைத்த ஒவ்வொன்றும் நம்முடையது. விசுவாசத்தினால் நாம் அதைக் கொண்டிருக்கிறோம். அதை ஏற்றுக்கொண்டு, முன்னேறிச் சென்று, அதை அறிக்கை செய்து, என்ன நடக்கிறது என்று பாருங்கள். அது அதைச் செய்துமுடிக்கும். பலிபீடத்தில் நீங்கள் இரட்சிக்கப் படும்போது, நீங்கள் இரட்சிப்பில் விசுவாசம் வைக்கிறீர்கள். நீங்கள் வெளியே செல்கிறீர்கள், நீங்கள் சந்தித்த பழைய கூட்டத்தார், "ஹ்ம், அவன் இன்னும் அதே டை, அதே கோட் போட்டிருக்கிறான். அவன் கண்கள் இன்னும் நீல நிறமாகவோ அல்லது பழுப்பு நிறமாகவோ அல்லது எதுவாகவோ இருக்கிறது. ஏனப்பா, அவனிடம் எந்த மாற்றமும் இல்லை" என்று சொல்கிறார்கள். நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று காட்ட எந்தவொரு பௌதிக காரியமும் உங்களிடம் இல்லை. ஆனால் உங்கள் இருதயத்தில், நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டீர்கள் என்று விசுவாசிக்கிறீர்கள். எனவே நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்களோ அதைச் சாட்சியாகச் சொல்கிறீர்கள். 54 நீங்கள் இயேசுவை உங்கள் குணமாக் குபவராக ஏற்றுக்கொள்ள முடிந்தால், வெளிப் புறம் எப்படித் தோன்றினாலும், அறிகுறிகள் எப்படித் தோன்றினாலும், நீங்கள் விசுவாசிப்பதை அறிக்கை செய்யுங்கள். அவ்வளவுதான். அதிலேயே நிலைத்திருங்கள். அதை நிறைவேற்றுவதற்கு தேவன் கடமைப் பட்டிருக்கிறார். ஓ, என் தேவனே. நான் முதன்முதலில் ஆரம்பித்தபோது எனக்கு நினைவிருக்கிறது. அவர்மீதான அன்பு, மக்கள் எப்படி எல்லா இடங்களிலிருந்தும் திரண்டு வந்தார்கள். ஆர்கன்சாஸில் உள்ள ஜோன்ஸ்போரோவுக்கு (Jonesboro, Arkansas) சென்றதை நினைத்துப் பாருங்கள். நான் சுமார் ஆறு மாதங்கள் வெளியே இருந்தேன். என் மனைவியை அழைத்தனுப்பினேன். அவளையும் குழந்தையையும் பார்க்காமல் நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன். அவர்கள் ரயிலில் வந்தார்கள். எனக்கு நினைவிருக்கிறது, அவர்கள் எங்களைச் சந்தித்தார்கள். ஆர்கன்சாஸ் சன் (The Arkansas Sun) செய்தித்தாள், "கூட்டத்தில் இருபத்தெட்டாயிரம் பேர் இருந்தார்கள்" என்று கூறியது. அவர்கள் அங்கே இருந்தார்கள் என்று பத்திரிகை சொன்னால், அவர்கள் ஒவ்வொரு வரும் அங்கே இருந்தார்கள். 55 வெளியே அவர்களுக்குச் சிறிய இடங்கள், சிறிய நிலையங்கள் மற்றும் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தப் பரிதாபமான அன்பான மக்கள் கட்டில்களின் கீழும், லாரிகளின் கீழும், மாட்டு வண்டிகளின் கீழும் படுத்திருந்தனர், பிடித்துக்கொண்டு… தினமும் மழை பெய்துகொண்டிருந்தது, அவர்கள் தங்கள் சிறிய வியாதியுள்ள குழந்தைகளுக்கும் பொருட்களுக்கும் மேலாக காகிதங்களைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அது ஒரு பரிதாபகரமான காட்சியாக இருந்தது. ஆனால் கர்த்தர் குணமாக்கிக் கொண்டிருந்தார். புத்தகங்களில் ஒன்றில் அங்கிருந்த ஒரு கட்டுரையை நாங்கள் கவனித்தோம். கழுத்தில் தொங்கும் ஒரு பெரிய, சிவப்பான புற்றுநோயோடு ஒரு மனிதர் பீடத்திற்கு, அந்த இடத்திற்கு வந்தார். அது வெள்ளையாக மாறி, கீழே விழுந்து, என் கால்களுக்குக் கீழே உருண்டது. அங்கே நின்றுகொண்டிருந்த செய்தித்தாள் நிருபர்கள் அதன் படங்களை எடுத்தார்கள், எல்லாவற்றையும் மறுநாள் முதல் பக்கத்திலேயே வெளியிட்டார்கள். 56 இதோ அரிசோனாவின் ஃபீனிக்ஸை (Phoenix, Arizona) சேர்ந்த திருமதி ஹட்டி வால்ட்ராப் (Hattie Waldrop), ஜெப வரிசையில் இறந்துவிட்டார். அவர்கள் அவளைக் கொண்டு வரும்போது, அவள் உள்ளுறை மருத்துவர் மற்றும் மற்றவர்களிடம், "எப்படியாவது என்னை அங்கே கொண்டு செல்லுங்கள்" என்று சொன்னாள். அவள் அங்கே எழுந்தபோது, மரித்துப்போயிருந்தாள்… அவளுடைய முகவரி, பெயர், எண், எல்லாம் அங்கே இருக்கிறது. அவள் இன்றைக்கும் வாழ்கிறாள்: இதயம், பெருங்குடல் மற்றும் கல்லீரலில் அவளுக்குப் புற்றுநோய் இருந்தது. மருத்துவர் அவளைக் கைவிட்டுவிட்டார், "ஒரு வாய்ப்பும் இல்லை" என்று சொன்னார். ஆனாலும் அவர்கள் அவளைக் கொண்டுவந்தார்கள். அந்த இடத்திலிருந்து ஒரு நகரத் தொகுதி (city block) தூரத்திலேயே அவள் இறந்துவிட்டாள். அவர்கள் தொடர்ந்து ஜெப வரிசையைக் கொண்டுவந்துகொண்டே இருந்தார்கள். ஜெப வரிசையை விட்டு விலகாமல் நான் அங்கே எட்டு பகல் மற்றும் எட்டு இரவுகள் தங்கினேன். எனவே அவர்கள்—அவர்கள் அவர்களைத் தொடர்ந்து கொண்டு வந்து கொண்டே இருந்தார்கள். அவர்கள் எனக்கு மதிய உணவையோ அல்லது சிறிது ஆரஞ்சு சாற்றையோ கொண்டு வருவார்கள், நான் குடிப்பேன், ஒருவேளை, பிரசங்க மேடையின் அருகிலேயே சில நிமிடங்கள் தூங்குவேன், விழித்தெழுந்து மீண்டும் ஜெப வரிசையைத் தொடங்குவேன். 57 அந்தப் பெண் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டு, நேராக வெளியே வந்து… இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். கேளுங்கள்… அவளுடைய முகவரி அங்கே இருக்கிறது… எதுவும் கற்பனையானது அல்ல. கேட்டுப் பாருங்கள். அதை ஆராய்ந்து பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு. உலகம் முழுவதிலுமிருந்து மனிதர்கள் அதற்காக அழைத்திருக்கிறார்கள். அதுபோல ஆயிரக்கணக் கான காரியங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏன்? "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார்." அவர் சொல்வது சத்தியம். அது சரிதான். நண்பர்களே, நீங்கள் அவர்மேல் உள்ள விசுவாசத்தை இழந்துவிட்டீர்கள். தேவனிடம் திரும்பி வாருங்கள். ஜீவனுள்ள விசுவாசத்திற்குத் திரும்பி வாருங்கள். இந்தச் சிறிய செல்ல இறையியல்கள் மற்றும் காரியங்களை விட்டு விலகி, மறுபடியும் பிறந்த அனுபவத்தின் மூலம் மெய்யான ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்யுங்கள். அது சரிதான். தேவனோடு சரியாக வாழ்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். ஒரு மனிதன் மறுபடியும் பிறந்தாலன்றி, தேவனுடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட ஜீவன் ஒரு மனிதனுக்குள் வந்து, அவனை காரியங்களை விசுவாசிக்கச் செய்யாது, ஏனென்றால் அவன் தேவனுடைய ஒரு பகுதியாக இருக்கிறான். 58 இப்போது, அது… அந்த இரவு நான் அரங்கத்திற்குச் செல்ல முயற்சித்ததை நினைவு கூருகிறேன். என் மனைவி அங்கே நின்று கொண்டு சொன்னாள்… நாங்கள் சுமார் மூன்று தொகுதிகள் (blocks) தள்ளி இருந்தோம், வீதிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. என் மனைவி, "பில்லி, இந்த மக்கள் அனைவரும் உங்களைக் கேட்பதற்காக வந்திருக்கிறார்களா?" என்று கேட்டாள். அதற்கு நான், "இல்லை அன்பே, அவர்கள் இயேசுவைப் பார்க்க வந்திருக்கிறார்கள்," என்று சொன்னேன். ஆகையால் அந்த ஏழைச் சிறியவள் அங்கே நின்றுகொண்டு, "அவர்கள் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருகிறார்கள்" என்று பாடினாள். சில வரவேற்பாளர்கள், அவர்களில் ஒரு குழுவினர் வந்து, என்னை அழைத்துக்கொண்டு கூட்டத்தின் வழியாகக் கூட்டிச் சென்றார்கள். நான் உள்ளே சென்றேன். அந்தக் கூட்டத்தில் அதுவே எனது கடைசி இரவு. நாங்கள் ஜோன்ஸ்போரோவிலிருந்து லிட்டில் ராக்கிற்கு (Little Rock) செல்லவிருந்தோம். நான் தற்செயலாக இங்கே கீழே பார்த்தேன், ஆம்புலன்ஸ்களும் ஸ்ட்ரெச்சர்களும் எங்கும் கிடந்தன. அங்கே ஒரு சிறுமி படுத்திருந்தாள், ஒரு தரிசனம் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. இந்தப் பக்கம் யாரோ ஒருவர் இப்படி சைகை செய்துகொண்டேயிருந்ததை நான் கவனித்தேன். அவர் கருமையான சூட் அணிந்திருந்தார், கையில் ஒரு நீல நிறத் தொப்பி வைத்திருந்தார். அவர் ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரைப் போலிருப்பதாக நான் நினைத்தேன். 59 முந்தைய இரவு மிசோரியின் கென்னட்டில் (Kennett, Missouri) ஒரு மனிதர் இருந்தார், இருபது வருடங்களாக குருடராக இருந்த ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. அன்று காலையில் அவர் பார்வையைப் பெற்றார். அவர் வீட்டிற்குச் சென்றார்; நகரமெங்கும் ஓடினார். அவர் தனது தொப்பியைக் கைத்தடியில் வைத்துக்கொண்டு ஒரு மெத்தடிஸ்ட் சபைக்குள் ஓடினார். சபைக்குள் ஒரு வெள்ளை உருவம் ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் அவரை அங்கிருந்து வெளியே எறிந்தார்கள். அவர் வெளியே கத்தோலிக்க சபைக்குச் சென்றார், அவர்கள் அவரை அங்கிருந்து வெளியே எறிந்தார்கள். அவர்கள் வெறுமனே… அவர் அந்த நகரத்தையே கலக்கிக்கொண்டிருந்தார். எனவே எல்லாரும் எல்லா இடங்க ளிலிருந்தும் வந்து கொண்டிருந்தார்கள். எனவே அவர்கள்… நான் அங்கே பார்த்தேன், இந்த மனிதர் தன் தொப்பியால் எனக்கு இப்படி சைகை செய்துகொண்டேயிருந்தார். நான், "ஐயா, நீங்கள் என்னைக் கூப்பிடுகிறீர்களா?" என்று கேட்டேன். அவர், "ஆமாம் ஐயா" என்றார். "நான் மிசோரியிலிருந்து வருகிறேன்" என்று சொன்னார். "இன்றிரவு நான் மற்றொரு பயணம் செல்ல வேண்டியிருக்கிறது" என்றார். "எனக்கு அங்கே ஒரு நோயாளி இருக்கிறார்" என்றார். "நோயாளி ஏற்கனவே இறந்துவிட்டார். எங்களிடம் ஒரு வீட்டு மருத்துவர் இருந்தார்" என்றார். "நான் அவரை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் அவளிடம் வர முடியுமா?" என்று கேட்டார். நான் சொன்னேன், "சரி ஐயா, அவள் இறந்துவிட்டாள் என்று அறிவிக்க என் வார்த்தையை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்." "அதற்கு அடக்கம் செய்பவர் (undertaker) தேவைப்படுவார்," என்று நான் சொன்னேன். அவர் சொன்னார், "நீங்கள் வெளியே வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவளுடைய கணவர் அங்கே மிகவும் பதற்றத்தில் இருக்கிறார். ஒருவேளை நீங்கள் அவரைச் சாந்தப்படுத்தலாம்." 60 நான் சொன்னேன், "சரி ஐயா, இங்கு இரண்டாயிரம் பேர் இருக்கிறார்கள்." அந்த வரிசையில், அரங்கத்தின் மறுபக்கத்தில் ஆம்புலன்ஸ்களுக்காகப் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட ஒரு பெரிய வரிசை இருந்தது. எனவே அவர், "உங்களை வெளியே அழைத்துச் செல்ல நான் உதவுகிறேன்," என்று சொன்னார். அங்கே பெரிய ஆண்களின் கூட்டம் இருந்தது; நாங்கள் நெருக்கிக்கொண்டு சென்றபோது நான் பார்வையாளர்கள் வழியே கடந்து சென்றேன், விடுங்கள்… திரு. ரீட் (Mr. Reed) மீண்டும் பாடல்களை வழிநடத்தத் தொடங்கினார். நான் அங்கே வெளியே சென்றேன். அங்கே ஒரு பெரிய கருப்பு நிற ஆம்புலன்ஸ் நின்றுகொண்டிருந்தது. அவர்கள் கதவைத் திறந்தார்கள். நான் உள்ளே ஏறினேன். ஒரு சாதாரண முதிய ஆர்கன்சாஸ் சகோதரர்… இப்போது, இங்கே ஆர்கன்சாஸைச் சேர்ந்த யாராவது இருந்தால், உங்கள் மனதைப் புண்படுத்துவதற்காக நான் சொல்லவில்லை. அவர்கள் ஏழைகள், ஏழைகள், ஆனால் அந்தப் பழைய நீல நிறச் சட்டைக்குக் கீழே தேவனோடு உண்மையாகத் துடிக்கிற ஏதோ வொன்று அவர்களிடம் நிச்சயமாக இருக்கிறது, சகோதரனே. அது சரிதான். 61 நான் எதை விரும்புகிறேன் என்றால்… இந்தப் பழைய காலத்து இரட்சிப்பு என்ன செய்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். இது ஒரு டக்ஸிடோ சூட்டையும் ஒரு ஜோடி ஓவர்ஆல்ஸ் ஆடையையும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு சகோதரன் என்று அழைக்கச் செய்யும். நிச்சயமாய் செய்யும். இது காலிகோ துணியையும் பட்டுத் துணியையும் ஒன்றாக அமரச் செய்து ஒருவரையொருவர் சகோதரி என்று அழைக்கச் செய்யும். நிச்சயமாகச் செய்யும். இது உங்களிலுள்ள கர்வத்தை எல்லாம் எடுத்துப்போடும். கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக, ஒரே நபராக இருக்கிறோம் என்பதை நீங்கள் உணருவீர்கள். அங்கே நான் உள்ளே பார்த்தேன். அங்கே பின்னால் ஒரு ஏழை முதியவர், அவருடைய காலணிகள், அதன் அடிப்பாகம் தேய்ந்து போயிருந்தது, மேலும் பழைய நிறம் மங்கிய ஓவர்ஆல்ஸ்… என் ஏழை முதிர்ந்த அப்பாவை எனக்கு நினைவூட்டினார். அவருடைய சட்டை முழுவதும் ஒட்டுப்போடப்பட்டிருந்தது. அவர் தன் கையில் ஒரு பழைய தொப்பியை வைத்திருந்தார். அது பக்கவாட்டில் சணல் கயிற்றால் தைக்கப்பட்டிருந்தது. அவர் முகத்தில் தாடி சற்று நீளமாக இருந்தது. அவர் ஒருவேளை ஒரு வாரம் அல்லது பத்து நாட்களாக சவரம் செய்யாமல் இருந்திருக்கலாம், அவர் முகத்தில் ஒரு சோர்வான தோற்றம் இருந்தது. அவர், “ஓ, அம்மா, ஏன் என்னை விட்டுச் சென்றாய்? நீ ஏன் என்னை விட்டுச் சென்றாய்?” என்று சொல்லிக்கொண்டிருந்தார். 62 பாவம் அந்த முதியவர், நான் அவரைப் பார்த்தேன். "ஓ, என் தேவனே, இப்போது, நான் அவரிடம் என்ன சொல்ல முடியும்?" என்று நினைத்தேன். ஆம்புலன்ஸின் பின்னால் இருந்து, அவர்கள் கதவைத் திறந்திருந்த முன்பகுதிக்கு நான் வந்தேன். எனவே, அவர் என்னைப் பார்த்தார்; அவர் சொன்னார்… நான், “எப்படி இருக்கிறீர்கள்?” என்றேன். அவர், “எப்படி இருக்கிறீர்கள்?” என்றார். அவர், “நீங்கள் டாக்டரா?” என்று கேட்டார். அதற்கு நான், “இல்லை.” நான், “நான் சகோதரன் பிரான்ஹாம்” என்றேன். 63 அவர் கூறினார், “ஓ, சகோதரன் பிரான்ஹாம்,” “பாவம் அம்மா,” “அவள் இறப்பதற்கு முன்பு உங்களை மிகவும் பார்க்க விரும்பினாள்” என்றார். “அவள் மிகவும் நல்ல பெண்மணி, சகோதரன் பிரான்ஹாம்” என்றார். “அங்கே அவள் அந்தப் பழைய மண் கட்டிகளை எல்லாம் உழுது என்னை இந்த நிலைக்கு ஆக்கினாள்” என்றார். “அவளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு புற்றுநோய் வந்தது” என்றார். “நாங்கள் அவளை செயின்ட் லூயிஸுக்குக் கொண்டு சென்றோம். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தார்கள். அவர்கள் எல்லாவற்றையும் செய்தார்கள்” என்றார். “அவளை—அவளை குணமாக்க முயற்சிப்பதற்காக, நான் என் கோவேறு கழுதைகள் மற்றும் எல்லாவற்றையும் கூட விற்றுவிட்டேன்,” என்று அவர் கூறினார். “மருத்துவர்கள் அவளைக் கைவிட்டு விட்டார்கள். இன்று காலை இந்த மனிதர் வந்து சாட்சி சொன்னார் என்று நாங்கள் கேள்விப் பட்டோம்” என்றார். “அவள் தைத்த சில போர்வைகளையும், கடந்த ஆண்டு அவள் டப்பாவில் அடைத்து வைத்திருந்த சில பிளாக்பெர்ரிகளையும் கொண்டுபோய் விற்று, ஆம்புலன்ஸைப் பிடித்து அவளைக் கீழே கொண்டு வந்தோம்” என்றார். “இப்போது, அவள் இறந்துவிட்டாள், சகோதரன் பிரான்ஹாம்” என்றார். “ஓ, அவள் இல்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. வீட்டிற்குத் திரும்பிப் போவது, மிகவும் தனிமையாக இருக்கிறது” என்றார். 64 அதற்கு நான், “சரி, அப்பா, எனக்குச் செய்யத் தெரிந்த ஒரே காரியம், நீங்களும் நானும் சேர்ந்து ஒரு ஜெபம் செய்வோம்” என்றேன். நான் அவள் தலையைத் தொட்டுப் பார்த்தேன். அந்தப் பெண்மணி இறந்துவிட்டாள் என்று நான் முழுமையாக நினைக்கவில்லை, ஏனென்றால்… இப்போது, அவள் இறந்தி ருக்கலாம். என்னால் சொல்ல முடியாது. ஆனால் அவள்… அவர்கள் அவளுடைய செயற்கைப் பற்களை வெளியே எடுத்தி ருந்தார்கள், அவளுடைய உதடுகள் மிகவும் உள்ளே அமிழ்ந்து போயிருந்தன. அவளுடைய கண்களிலிருந்து சேற்று நீர் வருவது போலிருந்தது, அவை நிலைகுத்தி இருந்தன. அவளுடைய வியர்வை மிகவும் பிசுபிசுப்பாக இருந்தது. நாடித் துடிப்பே இல்லை. எந்த நாடித் துடிப்பும் இல்லை. நான் அவளுடைய கையைத் தொட்டுப் பார்த்தேன். நான் மண்டியிட்டு, அவள் கையைப் பிடித்துக்கொண்டேன். நாங்கள் ஜெபிக்க ஆரம்பித்தோம். அவர் அழுதுகொண்டே ஜெபித்துக் கொண்டிருந்தார். “ஓ தேவனே, நான் அவளைப் பார்க்க முடிந்தால், அவளிடம் இன்னொரு முறை பேச முடிந்தால்,” என்று அவர் ஜெபித்தார். நானும் ஜெபித்துக் கொண்டிருந்தேன். நான், “பிதாவே, இந்த அன்புச் சகோதரனுக்கு இரக்கம் காட்டும்படி உம்மிடம் வேண்டுகிறேன். அவருக்கு உதவிசெய்து அவரை ஆசீர்வதியும். இவ்வளவு தூரம் கடந்து வந்த இந்த அன்புப் சகோதரிக்கும் இரங்கும்” என்றேன். அவள் என் கையை அழுத்துவதை நான் உணர்ந்தேன். 65 பிசாசு என்னிடம், “நீ பார், அது தசைநார்கள்தான். அவள் இறந்துவிட்டாள். அது அவளுடைய தசை துடிப்பது மட்டும்தான்” என்று சொன்னான். நானும் அவனுடன் ஒத்துக்கொண்டேன். எனவே, நான் இன்னும் சில நிமிடங்கள் ஜெபித்துக்கொண்டிருந்தேன். அது மீண்டும் துடித்தது. நான், “சரி, இது விசித்திரமாக இருக்கிறது” என்று நினைத்தேன். நான் கீழே பார்த்தேன்; அவளுடைய நெற்றியில் இருந்த தோல் சுருங்குவதை நான் கண்டேன். ஹா, அங்கே பிசாசு தவறாகிவிட்டான். எனவே அவள் என்னைப் பார்த்தாள். அவள் எழுந்து உட்கார்ந்தாள். நான் ஒரு வார்த்தையும் சொல்ல வில்லை, அப்படியே—ஜெபிப்பதை நிறுத்தி னேன். அவர் அழுதுகொண்டே தன் கைகளையும் தன் தொப்பியையும் பிசைந்து கொண்டு, அப்படி, காற்றில் மேலே பார்த்துக்கொண்டிருந்தார். மேலும்—மேலும் அவள் எழுந்தாள். அவள், “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டாள். நான், “நான் சகோதரன் பிரான்ஹாம்” என்றேன். 66 அவர்கள் பார்த்தபோது அவர் கூறினார்... “அம்மா.” பாவம் அந்த முதியவர் அவளை அப்படியே தன் கைகளில் கட்டிப் பிடித்துக்கொண்டு சத்தமிட்டு அழ ஆரம்பித்தார். அவள் பல மாதங்களாகக் கூட்டங்களைப் பின்தொடர்ந்தாள்; அவளிடமிருந்து நான் செய்திகளைக் கேள்விப்பட்டேன். சரி, இது எட்டு ஒன்பது வருடங்களுக்கு முன்பு நடந்தது. நான் வெளிநாடு செல்வதற்கு முன்பாக, சுமார் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு அவளிடமிருந்து செய்தியைக் கேள்விப்பட்டேன், அவள் மிகவும் நன்றாகவும் சிறப்பாகவும் இருக்கிறாள். அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, அவள் முற்றிலும் சாதாரணமாகவும், எவ்வளவு நலமாக இருக்க முடியுமோ அவ்வளவு நலமாகவும் இருக்கிறாள். ஆக—ஆக டிரைவர் கூறினார், “சகோதரன் பிரான்ஹாம்,” “உங்களை அழைத்து வந்த அந்த மனிதர்கள், பார்க்கிங் பகுதிக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்,” “அல்லது பின்னால் சென்றுவிட்டார்கள்” என்றார். “இப்போது, நீங்கள் அந்த வழியே போக முடியாது, ஏனென்றால் நீங்கள் காரில் இருக்கிறீர்கள் என்று தெரிந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே கூடியிருக்கிறார்கள்” என்றார். “நீங்கள் இந்தச் சாலையின் வழியாகத் திரும்பிச் செல்லுங்கள், அவர்கள் அங்கே கட்டடத்தின் பின்பக்கம் சந்திக்கப் போகிறார்கள்” என்றார். “அங்கே பின்னால் யாருக்கும் உங்களைத் தெரியாது. அந்த வழியாகப் பின்னால் செல்லுங்கள்” என்றார். நான், “சரி, ஐயா” என்றேன். 67 அவர் தன் கோட்டைக் கழற்றுவதைப் போல இப்படிப் பாவனை செய்தார். அதைச் செய்வது ஒரு மாயக்காரனைப் போலத் தோன்றியது, ஆனால் என்னால் செய்ய முடிந்தது அது மட்டும்தான். நான் காரை விட்டு இறங்கி, பக்கவாட்டில் சென்றேன். அந்த நேரம் சரியாக மழை பெய்துகொண்டிருந்தது. அங்கே பின்னால் இருந்த மக்கள் கூட்டத்தின் வழியே, வலப் பக்கத்திலிருந்து இடப்பக்கமாக, உங்களுக்குத் தெரியும், வழியமைத்துக்கொண்டு செல்ல நான் தள்ளிக்கொண்டு செல்ல ஆரம்பித்தேன். “அந்த ஆட்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்று நான் ஆச்சரியப்பட்டேன். அங்கே பின்னால் பெரிய விளக்குகள் இருந்தன. மக்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தார்கள், அவர்களில் சிலர் நாட்கணக்காக அங்கே இருந்தார்கள். நான் இப்படியே தள்ளிக்கொண்டு சென்றேன். எல்லோரும் என்னிடம், “தள்ளுவதை விடுங்கள். தள்ளுவதை நிறுத்துங்கள்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். நான், “என்னை மன்னியுங்கள்” என்றேன். 68 நான் தொடர்ந்து தள்ளிக்கொண்டு சென்றேன். நேராக ஒரு பெரிய ஆள் அங்கே நின்று ஒரு மரத்துண்டைக் செதுக்கிக் கொண்டிருந்தார். அவர், “நான் தள்ளுவதை நிறுத்து என்று சொன்னேன்” என்றார். அடுத்து அவர் என்னைத் தள்ளிவிடுவாரோ என்று நான் பயந்தேன். எனவே நான், “சரி, ஐயா. என்னை மன்னியுங்கள், ஐயா.” “நான் அப்படிச் செய்ய நினைக்கவில்லை” என்றேன். அவர், “சரி, அமைதியாக நில்” என்றார். நான், “நன்றி, ஐயா” என்றேன். நான் அவரை, உங்களுக்குத் தெரியும், கொஞ்ச நேரம் கவனித்தேன். அவர் தொடர்ந்து செதுக்கிக்கொண்டிருந்தார், அங்கே பேசிக் கொண்டிருந்தார், உங்களுக்குத் தெரியும், அவர் ஒரு மாதிரியான முரட்டுத்தனமான ஆளைப் போல இருந்தார். நான் அவரைப் பார்த்தேன். அப்போது நான் ஒரு அழுகுரலைக் கேட்டேன். நான் உயிரோடு இருக்கும் வரை அதை ஒருபோதும் மறக்க மாட்டேன். 69 அவர்கள்—அவர்கள் அங்கே இந்த ஜிம் க்ரோ சட்டத்தை, அதாவது இனப்பிரிவினை சட்டத்தை அப்போது வைத்திருந்தார்கள். இங்கே சுமார் பதினாறு, பதினேழு வயதுடைய ஒரு இளம் கருப்பினப் பெண் வந்தாள், அவளுடைய கண்கள் கண்புரையால் வெண்மையாக இருந்தன. அவள் அந்தக் கூட்டத்தின் வழியே தள்ளிக்கொண்டு, “அப்பா, அப்பா. ஓ, அப்பா,” என்று சத்தமிட்டுக்கொண்டு வர முயற்சித்தாள், யாரும் அவளைக் கண்டுகொள்ளவில்லை. பார்த்தீர்களா? வெறும்… நான் நினைத்தேன், “பாவம். யாராவது அந்தப் பெண்ணுக்கு உதவுவார்கள் என்று தோன்றுகிறது.” அவள் என் வழியில் வந்து கொண்டிருந்தாள். எனவே நான் இந்த மனிதனிடமிருந்து மிகவும் எளிதாக நழுவி, விலகி, இங்கே பக்கவாட்டில் வந்தேன். அவள் எந்த வழியில் வந்துகொண்டிருந்தாளோ, அவள் என் மீது மோதிக்கொள்ளும்படி நான் சரியாக அவளுடைய நேர்கோட்டிலேயே வந்து கொண்டிருந்தேன். அவள் என் மீது மோதினாள். அவள் சொன்னாள்… என் மீது தன் கைகளை வைத்தாள். அவள், “மன்னியுங்கள்” என்றாள். அவள், “அப்பா” என்றாள். 70 அதற்கு நான், “சரி, என்ன விஷயம்?” என்றேன். அவள், “ஐயா,” “நான் என் அப்பாவைத் தொலைத்துவிட்டேன். அவரைக் கண்டுபிடிக்க நீங்கள் எனக்கு உதவ முடியுமா?” என்று கேட்டாள். நான், “சரி, இங்கே சுற்றி வேறு எந்தக் கருப்பின மக்களையும் நான் பார்க்கவில்லையே, அம்மா” என்றேன். “நீ எங்கே இருந்து வருகிறாய்?” என்றேன். அவள், “நான் மெம்பிஸிலிருந்து வருகிறேன்” என்றாள். நான், “ஊஹூம்” என்றேன். நான் திரும்பிப் பார்த்து, அந்த வாடகைக்கு அமர்த்தப்பட்ட பேருந்து வரிசையைப் பார்த்தேன். மெம்பிஸிலிருந்து வந்த ஒரு வாடகை பேருந்தை நான் பார்த்தேன். நான், “சரி, அம்மா” என்றேன். “நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்றேன். நான் நினைத்தேன் நான்… பாவம். அவளை அப்படிச் சாதகமாகப் பயன்படுத்துவது மிகவும் மோசமானதல்லவா, குருடான அவளால் என்னைப் பார்க்க முடியவில்லை? நான் கூறினேன்… நான் அவளுடைய விசுவாசத்தை சோதித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். நான், “நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்றேன். அதற்கு அவள், “நான் குணமாக்குபவரைப் பார்க்க வந்தேன்” என்றாள். அது தெற்குப் பகுதி பேச்சு வழக்கு. “நான் குணமாக்குபவரைப் பார்க்க வந்தேன்.” நான், “யாரை?” என்றேன். அவள், “குணமாக்குபவரை” என்றாள். நான், “நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை” என்றேன். 71 அவள் சொன்னாள், “சரி, ஐயா, நான் எல்லா நல்ல ரேடியோ நிகழ்ச்சிகளையும் கேட்பேன்.” மேலும் அவள் சொன்னாள், “இன்று காலை, கார்னிங் பகுதியைச் சேர்ந்த, ஒரு வார்த்தை கூடப் பேச முடியாத ஒரு மனிதர் ரேடியோவில் பேசுவதை நான் கேட்டேன்.” “அங்கே கண்பார்வை பெற்ற அந்த குருட்டு மனிதர்...” என்றாள். “உங்களுக்குத் தெரிந்தபடி, நானும் குருடிதான்” என்றாள். “நான் சிறுமியாக இருந்தபோது என் கண்ணில் கண்புரை வந்தது, அது பழுக்கும்போது மருத்துவர் என்னிடம் சொன்னார்...” பழுப்பது என்றால் என்னவென்று எனக்குத் தெரிய வில்லை, ஆனால், “அவை பழுக்கும்போது, அவர் அவற்றை எடுத்துவிடுவதாகச் சொன்னார்” என்றாள். “இப்போது, அவை பழுத்துவிட்டன” என்றாள். “அவை அவற்றின் வேர்களைச் சுற்றி, என் கண்ணின் பார்வை நரம்பைச் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், கண்ணையும் எடுக் காமல்—கண்புரையை மட்டும் எடுக்க முடியாது என்றும் அவர் சொன்னார்” என்றாள். 72 மேலும் அவள், “எனக்குப் பார்ப்பதற்கான வாய்ப்பே இல்லை” என்றாள். “நான் குணமாக்குபவரைப் பார்க்க வந்தேன்” என்றாள். மேலும் அவள், “இதுதான் அவருடைய கடைசி இரவு என்று அவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். கட்டடத்திற்குள் நுழைய எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை” என்றாள். “மேலும் என்... என் அப்பாவை நான் தொலைத்துவிட்டேன். பேருந்துக்குத் திரும்பிச் செல்லும் வழியும் எனக்குத் தெரியவில்லை” என்றாள். அவள், “அன்பான ஐயா, நான் பேருந்துக்குத் திரும்பிச் செல்ல நீங்கள் எனக்கு உதவுவீர்களா?” என்றாள். எவ்வளவு புத்திசாலித் தனமாகப் பேச முடியுமோ அவ்வளவு புத்திசாலித்தனமாக... 73 அதற்கு நான், “சரி, அம்மா” என்றேன். ஆனால் நான், “இந்தக் குணமாக்குபவரைப் பற்றி நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றேன். “நமக்கு இவ்வளவு சிறந்த மருத்துவர்களும் அறுவை சிகிச்சை நிபுணர்களும் இருக்கும் இந்தக் காலத்தில், தேவன் அப்படியான ஒரு தூதனை அனுப்பி எதையாவது செய்வார் என்று நீ நம்புகிறாயா?” என்று கேட்டேன். அவள், “ஆம், ஐயா. நான் அதை நம்புகிறேன்” என்றாள். அது என்னைக்குறித்தே நான் வெட்கப் படும்படி செய்தது. அவள்—அவள், “ஆம், ஐயா. நான் அதை நம்புகிறேன்” என்றாள். நான், “சரி, நமக்கு இத்தனை மருத்துவர்கள் இருக்கும் இந்தச் சிறந்த காலத்தில்...” என்றேன். அவள், “ஐயா, அவர்களில் யாராலும் எனக்கு உதவ முடியாது” என்றாள். நான், “ஆம், அம்மா” என்றேன். அவள்... நான், “சரி, நீ உண்மையிலேயே அதை நம்புகிறாய் என்று சொல்ல வரவில்லையே?” என்றேன். அவள், “ஐயா, நான் ஒன்று சொல்கிறேன். நீங்கள் என் கையைப் பிடித்து அந்த மனிதர் இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றால். அதன்பிறகு நான் என் அப்பாவைக் கண்டுபிடித்துக் கொள்வேன்” என்றாள். [ஒலி நாடாவில் காலியிடம்] …?… அது என்னை அப்படியே வீழச் செய்தது. நான் சொன்னேன், “…?…” இருந்திருக்க வேண்டும்… ஒரு மாயக்காரனைப் போல நான் உணர்ந்தேன். [ஒலி நாடாவில் காலியிடம்]… என்னை அங்கே நிற்க வைத்தது. பாவம் அந்தப் பெண்ணை நான் பார்த்தேன், நான்—நான், “சரி, சகோதரி, நீ பார்க்க வேண்டிய நபர் ஒருவேளை நானாகத்தான் இருக்க வேண்டும்” என்றேன். நான் நூறு வருடங்கள் வாழ்ந்தாலும், அதை என்னால் மறக்க முடியாது. அவள் என்னை அப்படியே பற்றிக்கொண்டாள். அவள், “நீங்கள் தாம் குணமாக்குபவரா?” என்றாள். நான், “இல்லை, அம்மா” என்றேன். “நான் சகோதரன் பிரான்ஹாம்” என்றேன். அவள், “ஓ, சகோதரன் பிரான்ஹாம்” என்றாள். 74 நான், “இப்போது, பொறு, உன் கைகளை இங்கிருந்து எடு” என்றேன். நான் அவளுடைய கைகளை… அவைகளை என் மேலிருந்து என்னால் இழுத்து எடுக்க முடியவில்லை. அவள் என்னை விலகிச் செல்ல விடப்போவதில்லை. அவள் அப்படிப் பிடித்துக்கொண்டிருந்தாள். நான், “என்னை நீ விட்டுவிடுவாயா?” என்றேன். அவள், “மாட்டேன், ஐயா” என்றாள். “என் மீது இரக்கமாயிரும், சகோதரன் பிரான்ஹாம்” என்றாள். நான், “சரி, சகோதரி, முதலில் நான் இயேசுவிடம் ஜெபிக்கிறேன்” என்றேன். அவள், “இரக்கமாயிரும்” என்றாள். 75 அந்தப் பாடலை நான் நினைத்துக் கொண்டேன். அங்கே அந்த மனிதர் குணமாக்கப்பட்டதைப் பற்றி அவள் கேள்விப் பட்டிருந்தாள். பார்வையற்ற ஃபானி க்ராஸ்பி கூறினார், “என்னை கடந்து போகாதிரும், ஓ அன்பான இரட்சகரே. என் தாழ்மையான கூக்குரலைக் கேளுங்கள். நீர் மற்றவர்களை அழைக்கும்போது, என்னைக் கடந்து போகாதிரும்.” நான் அதை நினைத்துப் பார்த்து, நான், “…?…சகோதரி, உன் கையை நான் பிடித்துக் கொள்ள நீ அனுமதித்தால்,” “நான் ஜெபிக்கும் போது” என்றேன். அவளுடைய கையை, அவற்றில் ஒன்றை என்னிடமிருந்து நான் விலக்கி விட வேண்டியிருந்தது. நான் அதை அப்படியே பிடித்துக்கொண்டேன். நான், “இப்போது, நீ உன் தலையைத் தாழ்த்தி உன் கண்களை மூடிக்கொள்” என்றேன். அவள், “சரி, ஐயா” என்றாள். [ஒலி நாடாவில் காலியிடம்] ...ஜெபிக்க ஆரம்பித்து, நான் சொன்னேன், “இப்போது, பரலோகப் பிதாவே, இந்தத் தேவை உமக்குத் தெரியும். நான் ஏன் இந்த இடத்திற்குப் பின்னால் திரும்பி வர வேண்டும்?” எல்லாமே தேவனால் நியமிக்கப் பட்டவை என்று நீங்கள் நம்புகிறீர்களா? நிச்சயமாக அப்படித்தான். நான்—நான் சொன்னேன், “நான்—நான் ஏன் இங்கே பின்னால் வந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் பாவம் இந்தப் பார்வையற்ற இளம் கருப்பினப் பெண்,” “இங்கே அவள் நிற்கிறாள்” என்றேன். நான் சொன்னேன், “பிதாவே, சுமார் ஆயிரத்துத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, எருசலேமின் வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்ட ஒரு பழைய கரடுமுரடான சிலுவை, அதைச் சுமந்தவரின் இரத்தக் கறை படிந்த கால் தடங்களை இழுத்துச் சென்றது. சிலுவையில் அறையப்படுவதற்காக அவர் மலையின் மேல் சென்ற வழியில், அவருடைய பரிதாபமான சிறிய பலவீனமான உடல் கிழிக்கப்பட்டிருந்தது. அவரால் அந்தச் சிலுவையை இனியும் சுமக்க முடியாமல் அவர் கீழே விழுந்தார். அப்போது சிரேனே ஊரானாகிய சீமோன் என்னும் ஒரு கருப்பின மனிதன் வந்து, சிலுவையை எடுத்து, அதை அவர் தோள்களின் மேல் வைத்து, அதைச் சுமக்க அவருக்கு உதவி செய்தான்.” 76 நான் சொன்னேன், "பிதாவே, நீர் அதைப் புரிந்துகொள்வீர் என்று நான் நிச்சயமாய் நம்புகிறேன். இன்றிரவு காரிருளில் தள்ளாடிக் கொண்டிருக்கிற, அவருடைய பிள்ளைகளில் ஒருத்தி இங்கே காரிருளில் இருக்கிறாள். அந்தச் சிலுவையின்மேல், இந்தப் பெண்ணின் சுகத்துக்கான இரத்தம்...?… தயவுசெய்து அவள்மேல் அப்படி இரக்கமாயிரும்." உடனே அங்கே ஏதோ ஒன்று நடந்தது. அவள் சொன்னாள், "எனக்குள்ளே ஏதோ ஒன்று பாய்ந்துசென்றது. என் கண்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கின்றன." அந்தக் கண்புரைக ளிலிருந்து ஜீவன் போய்விட்டதை நான் கவனித்தேன், ஆனால் அது சுருங்குவதற்காக அவள் காத்திருக்க வேண்டியிருந்தது. நான் சொன்னேன், "சகோதரி, ஒரு நிமிடம் உங்கள் கண்ணிமைகளை மூடியே வையுங்கள்." நான் சொன்னேன், "எதுவும் சொல்ல வேண்டாம். நாம் இங்கே இருப்பதை மற்றவர்கள் அறிந்துகொள்வார்கள். புரிகிறதா? யாரும் நம்மைப் பார்க்க விடாதீர்கள்." அவர்களும் எதையும் கவனிக்காமல், அப்படியே நகர்ந்து கொண்டிருந்தார்கள். பிறகு நான் சொன்னேன், "இப்போது—இப்போது, நான் எங்கே இருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் தலையை உயர்த்தி, உங்கள் கண்களைத் திறங்கள், ஏனென்றால் இயேசு உங்களுக்குப் பார்வையளித்துவிட்டார்." அவள், "சரிங்க, ஐயா" என்றாள். "என் தலை சரியான நிலையில் இருக்கிறதா?" என்று அவள் கேட்டாள். அதற்கு நான், "ஆம், அம்மா. இப்போது, உங்கள் கண்களைத் திறங்கள்" என்றேன். அவள் தன் கண்களைத் திறந்தாள். "அவைகள் விளக்குகளா?" என்று அவள் கேட்டாள். "ஆம், அம்மா," என்று நான் சொன்னேன். 77 "அவைகள் புள்ளிகளா? அங்கே போவது மனிதர்களா?" என்று கேட்டாள். நான் சொன்னேன்... அவள் கூட்டத்திற்குள் குதித்து, தன் முழு பலத்தோடும், "ஓ தேவனே, முன்பு குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்" என்று சத்தமிட்டாள். அது—அது கூட்டத்தை அதிரச் செய்தது. அவர்கள் அனைவரும் எல்லா இடங்களி லிருந்தும் ஓடி வந்தார்கள். நான் பார்த்தேன், கூட்டத்தின் ஊடே நெருக்கிக்கொண்டு மூலையிலிருந்து என்னுடைய ஆள் வருவதை நான் கண்டேன். அங்கே ஒரு முதியவர் ஒரு தடியோடு நின்றுகொண்டிருந்தார், அவர் அதை ஊன்றித்தான் நடப்பார். அவருக்கு அப்படிப் பட்ட ஒரு வளைந்த கால் இருந்தது. அவர் சொன்னார், "சகோதரர் பிரன்ஹாம், எனக்கு உங்களைத் தெரியும்." அவர் சொன்னார், "நான் எட்டு நாட்களாக நின்றுகொண்டிருக்கிறேன். வீட்டில் எனக்கு ஐந்து சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் ஒரு முடவனாக இருக்கிறேன்." மேலும், "நீங்கள் ஒரு நல்ல பையன் என்று நான் நம்புகிறேன். என்னைச் சுகமாக்கும்படி நீங்கள் தேவனிடம் கேட்டால், அவரால் அதைச் செய்ய முடியும்" என்றார். நான் சொன்னேன், "சகோதரரே, நீங்கள் அதை நம்புகிறீர்களா?" அவர், "என் முழு இருதயத்தோடும்" என்றார். நான் சொன்னேன், "அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் தடியை என்னிடம் கொடுங்கள்." இந்தக் கூட்டத்திற்கு முன்பாக நியாயத்தீர்ப்பு ஆசனத்தின் முன்னே நான் நிற்கும்போது, இது உண்மையா இல்லையா என்பது அப்போது உங்களுக்குத் தெரியும். அவர் அந்தத் தடியை என்னிடம் கொடுத்தபோது, தேவன் அவருடைய விசுவாசத்தைக் கனப்படுத்தினார். அவருடைய பாதம் அப்படியே நேராக வந்தது. அவர் அந்தரத்தில் குதித்து, தன் முழு பலத்தோடும் சத்தமிட ஆரம்பித்தார். 78 அதன் பின்பு அவர்கள் என்னிடம் வந்துகொண்டிருந்தார்கள். அங்கே... மக்கள் கூட்டத்தின் ஊடே நெருக்கிக்கொண்டு வந்தார்கள், அவர்கள் இந்த அற்புதத்தைக் கண்டார்கள், சபையார் மத்தியில் தேவன் அசைவாடுவதையும் மற்றவைகளையும் கண்டார்கள். எனவே அவர்கள் அப்படியே விசுவாசித்தார்கள். அவ்வளவுதான். 79 நண்பர்களே, அந்த நேரம் வரைக்கும், நான் சுமார் ஆறு மாதங்களாகப் பயணத்தில் இருந்தேன். பணம் வாங்குவது சம்பந்தமாக நான் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்குத் தெரியும். எனக்கு அது பிடிக்காது. எனக்காக நான் ஒருபோதும் காணிக்கை எடுத்ததில்லை. நான் வீட்டை விட்டுப் புறப்பட்டபோது, உடுத்துவதற்கு எனக்கு ஆடைகள் இல்லை. அது உண்மை. இன்றிரவு எனக்கு ஆடைகள் இருப்பதால் நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். மேலும்... ஆனால் என்னைவிட இளையவனான என் சகோதரன், அவன் ஒருவரைச் சந்திக்க வெளியே சென்றிருந்தான். அவர்களுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அவன்—அவன் தன்னுடைய சூட்டைக் கிழித்துக்கொண்டான். அவன் அதின் கால் பகுதியைக் கிழித்துக்கொண்டான், அதன் பாக்கெட் எல்லாம் கிழிந்து தொங்கியது. என்னுடைய முதலாவது சுகமளிக்கும் கூட்டத்தை நான் ஆரம்பித்தபோது, அவன் அதை எனக்குக் கொடுத்தான். என் மனைவியும் நானும் ஒரு பத்து சென்ட் கடைக்குப் போய், சூடான இஸ்திரிப் பெட்டியால் வைத்துத் தேய்க்கக்கூடிய சில பேட்ச்களை (உங்களுக்குத் தெரியும் தானே?) வாங்கி, அங்கே ஒட்டினோம். இந்தப் பாக்கெட்டும் கிழிந்திருந்தது. எனக்குத் தையல் வேலை அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும் நான் அதை எடுத்து என் கையாலேயே—என் கையாலேயே அப்படியே தையல் போட்டேன், அதைத் தைத்தபோது அங்கே ஒரு பெரிய தழும்பு போல ஆகிவிட்டது. 80 நான் போதகர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவர்கள் மிகவும் நேர்த்தியாக ஆடையணிந்திருப்பார்கள். நான் அவர்களைப் பார்ப்பேன். என் பழைய கந்தலான கோட்டைக் குறித்து நான்—நான் வெட்கப்பட்டேன். எனவே என் வலது கையை அதன்மேல் வைத்துக்கொண்டு, இடது கையால் கைகுலுக்கி, "மன்னியுங்கள், என் இடது கை என் இருதயத்திற்கு அருகில் இருக்கிறது" என்று சொல்வேன். அந்தப் பழைய கந்தலான கோட்டை அவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக நான் அப்படிச் சொல்வேன். ஆனால், சகோதரனே, அன்றிரவு அந்தப் பழைய கந்தலான கோட்டைத் தொடுவதற்காக மக்கள் கூட்டத்திற்குள் முண்டியடித்துக்கொண்டு வந்தார்கள், அவர்கள் சுகமும் அடைந்து கொண்டிருந்தார்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன், சகோதரனே. அன்றிரவு அங்கே இருந்த அதே தேவன், இன்றிரவு இங்கேயும் இருக்கிறார். அதற்கு ஒரு கந்தலான கோட் தேவையில்லை. நீங்கள் சுவிசேஷத்தின் சத்தியத்தை நம்பினால், தேவன்பேரில் உங்களுக்கு இருக்கும் விசுவாசமே போதுமானது. அன்றிரவு அங்கே இருந்த அதே கர்த்தராகிய இயேசு, அவர் அங்கே செய்த அதே காரியங்களைச் செய்ய இன்றிரவு இந்த மண்டபத்திலேயே இருக்கிறார். அது சரிதான். 81 தேவன் இரக்கமாயிருப்பாராக. அப்படி நடந்த அந்தச் சம்பவங்களை நான் நினைத்துப் பார்க்கிறேன், என்றாவது ஒரு நாள் அலைகளைத் தாண்டி நாம் மறுகரைக்குச் செல்லும்போது, தேவன் சுகமாக்கின அந்த அருமையான மக்களைப் பார்க்கும்போது அது எப்படி இருக்கும் என்று நான் ஆச்சரியப்படுகிறேன். எத்தனையோ காரியங்கள் செய்யப்பட்டுள்ளன. நம்முடைய நேரம் முடிந்துகொண்டிருக்கிறது. நாம் ஜெபிப்போம். பரம பிதாவே, உம்முடைய கிருபைக்காக இன்றிரவு நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் எங்களுக்காகச் செய்த எல்லாவற்றிற்காகவும், ஆண்டவரே, நாங்கள் எங்கள் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறோம். இன்றிரவு நீர் எங்களோடு இருக்க வேண்டும் என்று நான் உம்மிடம் கேட்கிறேன். கர்த்தராகிய இயேசுவே, வாரும். அந்தப் பழைய நாட்களை நான் நினைத்துப் பார்க்கும்போது... அன்றிரவு அந்த ஏழை மக்கள், என்னை அவர்கள்மேல் இழுத்துக்கொண்டதையும், சிறு தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை... உம்முடைய கையையோ அல்லது கோட்டையோ ஆடைகளையோ தொடச் செய்ய முயற்சித்ததையும் நினைக்கிறேன். அவர்கள் கட்டில்களிலிருந்து குதித்து, சத்தமிட்டு, கட்டிடம் முழுவதும் ஓடி, அருகில் வரத் துடித்தார்கள். ஆண்டவரே, உம்முடைய ஊழியக்காரனிமித்தம் அல்ல, ஆனால் நீர் அங்கே இருக்கிறீர் என்பதை அவர்கள் அறிந்திருந்தபடியால்தான் அப்படிச் செய்தார்கள். நீர் அவர்களைச் சுகமாக்கவும் இரட்சிக்கவுமே அவர்களுக்காக மரித்தீர் என்கிற உண்மை யைத்தான் நான் அவர்களுக்குச் சொல்ல முயற்சி செய்துகொண்டிருந்தேன். 82 ஓ, அன்பான பிதாவே, அழகிய, அற்புதமான நியூயார்க் மாகாணத்தில் உள்ள இந்த நல்ல மக்களுக்காக... இன்றிரவு அவர்களில் அநேகர் இந்தச் சிறிய மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பிதாவே, நாங்கள் புறப்பட்டுச் செல்லும்போது நம் மத்தியில் ஒரு பலவீனமான நபர்கூட இருக்கக்கூடாது என்று இன்றிரவு நான் ஜெபிக்கிறேன். எம்மாவு விலிருந்து வந்தவர்கள், "நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?" என்று கூட்டத்தில் சொன்னதுபோல நாமும் உணருவோமாக. ஆண்டவரே, சாதாரண ஊழியத்தின் போக்கிலிருந்து சற்றே மாறுபட்டு, நீர் அவர்களுக்குச் செய்ததுபோல இன்றிரவு ஏதாவது ஒன்றைச் செய்யும். நீர் மரித்தோரிலிருந்து எழுந்து, இன்றிரவு உயிரோடு இங்கே இருக்கிறீர் என்பதை நாங்கள் அறிந்துகொள்ளும்விதமாக ஒன்றைச் செய்யும், நீர் அவர்களைச் சுகமாக்குகிறீர் என்பதையும், அவர்கள் அதை விசுவாசித்து உம்மைத் தங்கள் இரட்சகராகவும் பரிகாரியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீர் விரும்புகிறீர் என்கிற உண்மையை நாங்கள் அவர்களுக்குச் சொல்கிறோம் என்பதை மக்களுக்கு நிரூபித்துக்காட்டும். உம்முடைய ஊழியக்காரனின் இந்தத் தாழ்மையான ஜெபத்தின் மூலம் அதைத் தந்தருளும், பிதாவே. உமது நேச குமாரன் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். 83 பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக, உங்கள் அனைவரையும் ஆசீர்வாதமாக் குவாராக... நான் ஒரு குழந்தையைப் போல இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. எனக்கு நாற்பத்தைந்து வயதாகிறது. நான் ஒரு முதியவன். ஆனால் அந்தச் சம்பவங்களை, அந்த அருமையான மக்களின் அனுபவங்களை மற்றும் காரியங்களை நான் நினைத்துப் பார்க்கும்போது, என் இருதயத்திற்குள் அழு வதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை, எனக்குள் ஏதோ ஒன்று நடக்கிறது. நான் ஒரு குழந்தை இல்லை. இல்லை, ஐயா. நான் இல்லை. ஆனால் நான்—நான் அதை நினைத்துப் பார்க்கும்போது உணர்ச்சிவசப் படுகிறேன் என்று நினைக்கிறேன். நாம் அங்கே அந்த எல்லையைக் கடந்து செல்லும்போது, அங்கேயும் சில அழுகைச் சத்தங்களை நீங்கள் கேட்பீர்கள் என்றும், நாம் அனைவரும் மறுகரையில் ஒன்றுகூடும்போது சந்தோஷப்படுவோம் என்றும் நான் நினைக்கிறேன். 84 இப்போது, தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு வருவாரானால், நான் ஒரு மனிதன், உங்கள் சகோதரன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் அவர் வரும்போது, நீங்கள் அதைப் பார்ப்பீர்கள். நீங்கள் கவனித்தீர்கள் என்றால், அங்கே ஒரு வெளிச்சம் இருக்கும். நான் இருக்கும் இடத்தின் அருகே அது நிற்கும். மேலும் அவர்... நான்... இந்த கட்டிடத்தில் என் கண்களுக்குத் தெரிந்த ஒரு நபர்கூட இல்லை, அங்கே அமர்ந்திருக்கும் ஒரு மனிதன், ஒருவேளை இரண்டு பேர், மற்றும் இங்கே இருக்கும் திரு. ஸ்மித், நம்முடைய சகோதரர் ஸ்மித் ஆகியோரைத் தவிர இந்த கட்டிடத்தில் எனக்கு யாரையும் தெரியாது. நான் உங்களுக்கு முற்றிலும் அறிமுகமில்லாதவன். ஆனால் இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்து, நான் சொல்வது போல அவர் இங்கே இருக்கிறார் என்றால், அவர் என் சரீரத்தை எடுத்து, தமது ஆவியால் என்னை அபிஷேகம் செய்து, அவர் பூமியில் இருந்தபோது செய்த அதே கிரியையைச் செய்ய முடியும். அது அவருடைய வாக்குத்தத் தத்தின்படியே இருக்கிறது. அது சரிதானே? அவர் அப்படிச் செய்தால், அவரை இரட்சகராகவும் பரிகாரியாகவும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று இங்குள்ள ஒவ்வொருவரும் எனக்கு வாக்குக் கொடுப்பீர்களா? அவருக்கு வாக்குக் கொடுக்க உங்கள் கையை உயர்த்துவீர்கள் என்றால். எனக்கு வாக்குக் கொடுக்க வேண்டாம். நன்றி. எல்லா இடங்களிலும் நூற்றுக்கு நூறு சதவீதம் பேர் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. என் கிறிஸ்தவ நண்பர்களே, நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளும்படி தேவன் உங்களுக்கு அதைத் தந்தருளுவாராக. 85 இப்போது, உண்மை என்பது உண்மைதான். இப்போது, ஒரு மனிதன் இங்கே வந்து, "நல்லது, நான் இதையோ, அதையோ அல்லது வேறொன்றையோ உரிமை கோரவில்லை" என்று சொல்லலாம். அது ஒரு மனிதன் சொல்வது. ஒரு மனிதனைச் சந்தேகிக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் தேவன் வந்து அதை உறுதிப்படுத்தும்போது, அது அவருடைய வார்த்தையின்படி இருக்கும்போது, தேவனை விசுவாசியாமல் இருப்பது ஒரு பாவம். அது சரிதானே? எனவே இன்றிரவு உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசியுங்கள். இப்போது, ஒவ்வொரு சிறிய சந்தேகத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு—மற்றும் வெறுமனே பாருங்கள். ஆரம்பத்தில் நான் உங்களுக்குச் சொன்னதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் ஊழியம், அது துல்லியமாக அவருடைய ஊழியம். அது யாருக்கும் தெரியும். அது அவருடைய ஊழியம். அவர் மக்களை, சபையில் உள்ள மக்களை உற்றுப்பார்த்தார். அவர் அவர்களுடைய சிந்தனைகளை அறிந்துகொண்டார். அது சரிதானே? இது வேதவசனம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? உங்கள் கையை உயர்த்துங்களேன். நல்லது, ஒருவேளை...?… 86 அவர் சபையாரை உற்றுப்பார்ப்பார், பிதா அவருக்கு எங்காவது எதையாவது காண்பிக்கும்போது, அவர் அதை வெளியே கூப்பிட்டு அவர்களிடம் சொல்ல முடியும். அது சரிதானே? அவர் நின்று மக்களிடம் பேசியபோது, அவர்களுடைய பிரச்சனைகள் என்ன என்பதை அவர் அறிந்திருந்தார். அவர்கள் சுகமடையப் போகிறார்களா அல்லது அவர்கள் மரிக்கப் போகிறார்களா, அல்லது என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் பிதா அவருக்கு முதலில் காண்பித்தாலொழிய அவர் வேறு எதையும் செய்யவில்லை. அது சரிதானே? அதை அனைவரும் விசுவாசிக்கிறீர்களா? அது அவருடைய—அது அவருடைய வார்த்தை. புரிகிறதா? அதைத்தான் அவர் சொன்னார். பாருங்கள், நீங்கள் போதிக்கப்பட்ட விதத்திலிருந்து இது சற்றே வித்தியாசமான கோணத்தில் இருக்கலாம். ஆனால் வேதத்தின் வெளிச்சத்தில் அதைப் பாருங்கள். அவர் முதல்முறை வந்தபோது, மக்கள் அவரை விசுவாசிக்காத ஒரு கோணத்தில்தான் அவர் வந்தார். அவர்கள் அவரை வேறு வழியில் தேடிக்கொண்டிருந்தார்கள். ஒருவேளை, அவர் மீண்டும் வரும்போது, அது நமக்கு எதையுமே அறிந்துகொள்ள முடியாத ஒரு கோணத்தில் இருக்கலாம். அது சரிதான். 87 எனவே நீங்கள் பயபக்தியோடு இருங்கள். இப்போது, அபிஷேகம் என்மேல் இறங்கினால், நிச்சயமாக, அது என்னை வேறொரு பரிமாணத்திற்குள் கொண்டு செல்கிறது. விஞ்ஞானிகளுக்கு அது—அது வேறொரு பரிமாணம். கிறிஸ்தவர்களாகிய உங்களுக்கு, அது ஆவிக்குள்ளான நிலை. எனவே அங்கே நீங்களாகவே இருப்பதில்லை. இந்த மைக்ரோஃபோனைப் பாருங்கள். அந்த மைக்ரோஃபோனால் தானாகவே எதையும் சொல்ல முடியாது. அங்கே இருக்கும் அந்த விளக்கால் அந்த ஜன்னலைப் பார்த்து, "நான் எவ்வளவு பெரிய வெளிச்சம் என்று நீ பார்க்கிறாயா. நான் வெளிச்சத்தைக் கொடுக்கி றேன்" என்று சொல்ல முடியாது. அந்த ஜன்னல் சொல்லும், "நான் உன்னைவிடப் பெரியவன், ஏனென்றால் நான் பகலில் வெளிச்சத்தைக் கொடுக்கிறேன்" என்று. அவைகள் இரண்டில் ஒன்றுமே வெளிச்சத்தைக் கொடுப்பதில்லை. அதுதான் வெளிச்சம், மின்சாரம் எரிந்து அங்கே வெளிச்சத்தைக் கொடுக்கிறது. அது கண்ணாடி அல்ல. அது கண்ணாடிக்குப் பின்னால் இருக்கும் வெளிச்சம். சூரிய ஒளி ஜன்னலின் ஊடே வெளிச்சத்தைக் கொடுக்கிறது, எனவே அது அவைகள் இரண்டில் ஒன்றுமில்லை. அவற்றின் ஊடே ஏதோ ஒன்று பிரகாசிக்கிறது. அது சரிதானே? 88 இந்த மைக்ரோஃபோனால் தானாகவே பேச முடியாது. நல்லது, இப்போது இங்கே இருக்கும் இந்த மேசை ஒரு மைக்ரோஃபோன் அல்ல. அது அதின் இடத்தில் செயல்படுகிறது. இந்த—இந்த மைக்ரோஃபோன் பைபிளைத் தாங்கிப் பிடிப்பதில்லை. ஆனால் மேசை பைபிளைத் தாங்கிப் பிடிக்கிறது. கடிகாரம் நேரத்தைக் காட்டுகிறது, இப்படியாகச் செல்கிறது. அந்த விதத்தில்தான் ஒவ்வொரு காரியத்திற்கும் அதன் இடம் இருக்கிறது. மேலும் அது... தேவனுடைய பரிசுத்த ஆவியானவருக்கு உங்களை ஒப்புக்கொடுப்பதே இங்குள்ள முழுமையான காரியமாகும். அவர் இன்றிரவு வந்து, இங்கே இந்த மேடையில் தமது குமாரனின் ஜீவனை மீண்டும் வெளிப்படுத்துவார் என்றால். இப்போது, அது நானாக இருக்க மாட்டேன். அது அவராகவே இருப்பார், நினைவில் கொள்ளுங்கள். அது எப்போதுமே... அவருடைய வல்லமையைக் காண்பிப்பதற்காக அல்ல, எது நிறைவேறும் என்று அவர் சொன்னாரோ அது நிறை வேறும்படியாகவே அவர் இதைச் செய்கிறார். அது நிறைவேறுகிறது. அவர் நிறை... அவர் முதல்முறை வந்தபோது, தீர்க்கதரிசி சொன்னதை நிறைவேற்றுவதற்காக வந்தார். அவரும் அப் போஸ்தலர்களும் சொன்னதை நிறைவேற்று வதற்காக அவர் இப்போது வருகிறார். மேலும் அவர் தமது வார்த்தையின்படியே தமது சபையை ஏற்றுக்கொள்வதற்காக மீண்டும் மாம்சத்தில் வருவார். 89 நீங்கள் இதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். அப்படியே அமர்ந்திருங்கள். அமைதியாக இருங்கள். பயபக்தியாக இருங்கள். இப்போது, கர்த்தர் ஒரு அற்புதத்தைச் செய்தால், அவரைத் துதிப்பதற்காக நீங்கள் சுதந்திரமாகச் செயல்பட உங்களுக்கு உரிமை உண்டு. இப்போது, பையன் சில ஜெப அட்டைகளைக் கொடுத்ததாகச் சொன்னார் என்று நான் நம்புகிறேன். G யா? சரி. நாம்... நம்மால் எத்தனை பேரை அழைக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. நம்மால் முடிந்த அளவு அழைப்போம். ஆனால் அங்கிருந்து சிலரை நாம் அழைக்க வேண்டியிருக்கும், ஒருவேளை மீண்டும் அழைக்கலாம். இந்தச் சிறிய ஜெப அட்டை, இது இவ்வளவு சிறியதாக இருக்கும். இதன் ஒரு பக்கத்தில் என் படமும், மறுபக்கத்தில் ஒரு எண்ணும் ஒரு எழுத்தும் இருக்கும். அது G என்கிற எழுத்தாக இருக்கும். அங்கே எங்கேயோ நூறு அட்டைகள் இருக்கின்றன. 90 நம்மால்—அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அழைக்க முடியாது. ஆனால் முதலில் சிலரை நாம் எடுத்துக்கொள்வோம். பார்ப்போம். ஜெப அட்டை G எண் 1 யாரிடம் இருக்கிறது? சற்றுப் பார்க்கிறீர்களா? இங்கே இருக்கும் இந்தப் பெண்மணியிடமா? சரி. யார்... இங்கே வருவீர்களா, அம்மா? எண் 2, ஜெப அட்டை எண் 2 யாரிடம் இருக்கிறது? G எண் 2, உங்கள் கையை உயர்த்துவீர்களா? எங்கேனும், 2? சரி, ஐயா. எண் 3, G எண் 3 யாரிடம் இருக்கிறது? உங்கள்... உயர்த்துவீர்களா 3? சரி, 4? எண் 4 யாரிடம் இருக்கிறது? உங்கள் கையை உயர்த்துவீர்களா, 4? சரி. அப்படியே வெளியே வாருங்கள். 5? இப்போது, உங்களால் எழுந்திருக்க முடியாவிட்டால், உங்கள் கையை மட்டும் உயர்த்தி ஆட்டுங்கள். வழிநடத்துபவர்கள் உங்களைத் தூக்கி வருவார்கள். நீங்கள் பார்வையற்றவராக இருந்தால், அழைக்கப் பட்டவர்களில் எவரேனும் உங்களால்—எழுந்திருக்க முடியாமலோ அல்லது வேறு ஏதாவது இருக்கிறதா என்று கவனியுங்கள், ஏன்—அல்லது கேட்க முடியவில்லையா. ஏன், நீங்கள் கவனியுங்கள். கேட்க முடியாத ஒரு செவிடராக இருக்கலாம். அழைக்கப்படும்போது உங்கள் அருகில் உள்ளவரின் அட்டையைப் பாருங்கள், அப்போது உங்களுக்குத் தெரியும். 91  நான் எதில் இருந்தேன்? 4, அப்படித் தானே? ஜெப அட்டை 5 யாரிடம் உள்ளது? ஜெப அட்டை எண் 5, அது ஏற்கனவே உள்ளே வந்துவிட்டதா? 5? 6 யாரிடம் உள்ளது? ஜெப அட்டை எண் 6, உங்கள் கையை உயர்த்துவீர்களா? ஜெப அட்டை 6? உங்கள் அருகில் இருப்பவரைப் பாருங்கள். அது காது கேளாத யாராவதாக இருக்கலாம் அல்லது எழ முடியாத யாராவதாக இருக்கலாம். ஜெப அட்டை எண் 6, உங்கள் கையை உயர்த்துவீர்களா? 6 ஏற்கனவே அங்கே வந்துவிட்டது. 7? எண் 7, ஜெப அட்டை எண் 7 யாரிடம் உள்ளது? சரி, சகோதரி. எண் 8, உங்கள்... உயர்த்துங்க... 8? சரி, சகோதரி. எண் 9? ஜெப அட்டை எண் 9 யாரிடம் உள்ளது? சரி, அம்மா. எண் 10? ஜெப அட்டை எண் 10, உங்கள் கையை உயர்த்துவீர்களா? ஜெப அட்டை 10. உங்களிடம் 10 உள்ளதா, அம்மா? 11? ஜெப அட்டை 11 உங்கள் கையை உயர்த்துங்கள். ஜெப அட்டை 11 யாரிடம் உள்ளது? சக்கர நாற்காலியில் உள்ள ஒரு மனிதரை நான் இங்கே பார்க்கிறேன்; அவரிடம் என்ன ஜெப அட்டை இருக்கிறது என்று கேளுங்கள். யாராவது அவருடைய ஜெப அட்டையைப் பாருங்கள். 11? 92  சரி. 12, 12 யாரிடம் உள்ளது? 13? 14? 14? நான்... 14? சரி. 15? 15? யாரிடமாவது ஜெப அட்டை 15 உள்ளதா? உங்கள் கையை உயர்த்துங்கள். 15? சரி. யாராவது என்று நான் நம்புகிறேன்... அது ஒரு... யாராவது வாகனத்தை நிறுத்தவோ அல்லது அழைத்து வரவோ அல்லது வேறு எதற்கோ சென்றிருக்க வேண்டும். சரி. 15. இப்போது, 16? 17? நான் வெகுதூரம் சென்றுவிட்டேனா? நான்... 16? ஜெப அட்டை 16 இங்கே இல்லையா? ஜெப அட்டை 16, கட்டடத்திற்குள் இல்லையா. 17, அது கட்டடத்திற்குள் இருக்கிறதா? 18? 19? 20? நான் முடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். என்ன-என்ன-உங்களுடைய அட்டை என்ன, சகோதரி? 20? 21? அப்படியானால் இன்னும் சிலரை நாம் எடுத்துக்கொள்வோம். 21? 22? 23? சரி. 24? 25? யாரிடமாவது ஜெப அட்டை 25 உள்ளதா? உங்கள் அருகில் இருப்பவருடையதைப் பாருங்கள். அது காது கேளாத மக்களாகவோ அல்லது அதுபோலவோ, அல்லது ஊன்றுகோலுடன் இருந்து எழ முடியாத யாராவதாகவோ இருக்கலாம். 1 க்கு இடையில் யாராவது இருக்கிறார்களா என்று பாருங்கள்... அனைவரும் ஒருவருக்கொருவர் அட்டைகளைப் பாருங்கள். 1 க்கும் 25 க்கும் இடையில், அது இருந்தால், அவர்களின் எண் அழைக்கப்படும் போது வரவேற்பாளர்கள் அவர்களை அழைத்து வரட்டும். 93  இப்போது, இங்கே எத்தனை பேரிடம் ஜெப அட்டை இல்லாமல், கர்த்தராகிய இயேசு இன்றிரவு உங்களை குணமாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள், உங்கள் கையை உயர்த்துங்கள். கட்டடத்தில் எங்கும், கர்த்தராகிய இயேசு உங்களை குணமாக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள். இப்போது, நான் இதைச் சொல்லப் போகிறேன். பரிசுத்த ஆவியானவர் வந்தால், அவர் செயல்படத் தம்முடைய வல்லமையில் வந்தால், நீங்கள் இந்தப் பக்கம் மட்டும் பார்த்து, இது சுவிசேஷத்தின் சத்தியம் என்று விசுவாசித்தால், உங்களை குணமாக்க வேண்டிய கடமை தேவனுக்கு உண்டு. தேவன், இங்கே மேலே இருந்து, அங்கே உங்களுக்கு இருப்பதை ஒரு தரிசனத்தின் மூலம் எனக்குக் காட்டி, உங்களைக் குணமாக்க முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையா? நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? இதற்கு முன் கூட்டங்களில் இருந்து, எல்லாவிதமான காரியங்களும் செய்யப்பட்டிருப்பதை எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள். சரி, நான் இல்லை... நான் அந்நியர்கள் மத்தியில் இருப்பதாக நினைத்தேன், ஆனால் நான் அப்படி இல்லை. அது மிகவும் நல்லது. உங்களுக்கு மிகவும் அன்பான நன்றி. 94  இப்போது, கர்த்தராகிய இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது, பயபக்தியாக இருங்கள். இப்போது, தாய் மார்களே, உங்கள் குழந்தைகளை உங்களுக்கு அருகில் வைத்துக்கொள்ளுங்கள், குறிப்பாக வலிப்பு நோயின் காரியத்தில். அது ஒன்றுதான் அது-அது... நான் சற்று... பலமுறை அது என்னை விட்டு மீறிச் சென்றுவிட்டது. ஒரு கட்டடத்தில் ஒரே நேரத்தில் இருபது பேரை அது தாக்குவதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே நான்-நான் விமர்சகர்களுக்குப் பொறுப்பாளி அல்ல. அது மாநிலச் சட்டம். புரிகிறதா? நான் அதைச் சொல்ல வேண்டும். நீங்கள் இங்கே இருந்து ஒரு விமர்சகராக இருந்தால், இப்போது கட்டடத்திற்குள் தங்கியிருக்க வேண்டாம். நினைவில் கொள்ளுங்கள், உங்களுக்கு ஏதாவது தீங்கு நேரிட்டால், அதற்காக, நான் பொறுப்பாளி அல்ல. ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவராகவும், விசுவாசியாகவும் இருந்து, தாழ்மையுடன் தங்கி, அவர் செய்யச் சொல்வதற்குக் கீழ்ப்படிந்தால், நீங்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறீர்கள். 95  இப்போது, நாம் மீண்டும் ஜெபிப்போம். இப்போது, பரலோகப் பிதாவே, நீர் மரித் தோரிலிருந்து எழுந்திருக்கிறீர் என்றும், நீர் நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவராக இருக்கிறீர் என்றும், உம்முடைய வல்லமை அப்படியே இருக்கிறது என்றும் நான் இந்த மக்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நீர் மாம்சத்தில் இங்கே இருந்தபோது செய்த அதே காரியங்களை, எங்கள் மாம்சத்தின் மூலமாகச் செய்வதாக நீர் வாக்குத்தத்தம் செய்தீர், ஏனெனில் நீர் சொன்னீர், "நான் செய்கிற கிரியைகளை அவனும் செய்வான்." உம்மிடம் இருந்த ஊழியத்தை நாங்கள் பார்க்கிறோம், சுற்றிக்கொண்டு தன்னை ஒரு குணமாக்குபவர் என்று கூறிக்கொள்ளும் ஒரு பெரிய பெருமைக்காரராக அல்ல. ஆனால் நீர் பிதாவுக்கு முன்பாக நடந்தீர். அவர் உமக்குச் சொன்னபடியே நீர் செய்தீர். இப்போது, கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய இந்த ஏழை, தகுதியற்ற அடியேன்... ஆனால் உம்முடைய மகிமைக்காகவும் சுவிசேஷத்தின் நிமித்தமாகவும் என்னை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். இப்போது, பரிசுத்த ஆவியானவர், தேவனுடைய தூதன் உமது அடியேனிடம் வந்து என்னைப் பயன்படுத்தட்டும், பிதாவே, தேவனுடைய வார்த்தை நிறைவேறும்படி, உமது உயிர்த்தெழுந்த குமாரனின் ஊழியத்தைப் பேசட்டும்; நியாயத்தீர்ப்பு நாள் வரும்போது இங்கு நியூயார்க்கில் உள்ள இந்தக் கூட்ட மக்களுக்கு எந்தச் சாக்குப்போக்கும் இருக்கக் கூடாது; ஆனால் நீர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறீர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். நீர் வருகிறீர் என்று உமது சுவிசேஷம் கூறுகிறது, அதை நாங்கள் விசுவாசிக்கிறோம். நீர் செய்வதாகச் சொன்ன காரியங்களை, இப்போதே செய்யும், பிதாவே. நாங்கள் உம்மைத் துதிப்போம். ஏனெனில் உமது குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் தேவனுடைய மகிமைக்காக இதை நாங்கள் கேட்கிறோம். ஆமென். இப்போது, உங்களால் முடிந்தவரை அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நகர வேண்டாம். என் பையன், அவன் இங்கே எங்கோ இருக்கிறான், அங்கே பின்னால் சகோதரர் கார்டனர் மற்றும் அவர்களோடு நிற்கிறான், என்னை எப்போது அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவனுக்குத் தெரியும், நான்... கூட்டத்திலிருந்து. நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 96  இப்போது, இங்குள்ள இந்த அம்மா. வாருங்கள், அம்மா. இப்போது, நான் இதைச் சொல்கிறேன், ஒரு-ஒரு கடுமையான எச்சரிக்கையுடன்: அமர்ந்திருங்கள், அமைதியாக இருங்கள். ஏனென்றால், இங்கிருந்து, அவிசுவாசம் அல்லது கீழ்ப்படியாமைக்கு என்ன நடக்கிறது என்பதற்கு நான் பொறுப்பல்ல. அவர் உங்களை என்ன செய்யச் சொன்னாலும், அதை அப்போதே செய்யுங்கள். புரிகிறதா? இப்போது பயபக்தியாக இருங்கள். இப்போது, இங்கு இவர்தான் நோயாளி என்று நான் நம்புகிறேன். அவருடைய பிரசன்னம் என்னிடம் வருவதற்காக நான் காத்திருக்கிறேன். நிச்சயமாக நான் ஒரு-ஒரு மனிதன்தான். உங்களுக்குத் தெரியும், நான்-நான் அந்த வழியில் அதிகமாகப் பேசுகிறேன். வழக்கமாக மேலாளர்கள்தான் பேசுவார்கள், மற்றும் மேடையில் உள்ள நபரும் பேசுவார்கள். இந்த-இந்தச் சிறிய கூட்டத்தில், நானே போதித்தேன், உங்களுக்குத் தெரிந்த முதல் காரியம் நான்... பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்திற்காக, அவர் அசைவாடுவதற்காக நீங்கள் சில நேரங்களில் ஒரு கணம் காத்திருக்க வேண்டியிருக்கும். 97  இப்போது, அந்த... பொறியிய லாளர்களால் முடியும் என்று நான் நினைக்கிறேன்...?.. நான் எவ்வளவு சத்தமாகப் பேசுகிறேன் என்று எனக்குத் தெரியாது. எனவே நீங்கள் கேட்கும்படி அவர்கள் அதை சரிசெய்வார்கள். எப்போது... அது ஒன்றைத் தாக்கினால் அது ஏறக்குறைய முடிந்துவிட்டது என்றுதான் அர்த்தம். தேவனுடைய மகிமைக்காகவும், கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலின் மகிமைக்காகவும், அவர் இன்றிரவு உதவுவார் என்றும், எனக்கும் உதவிசெய்து, தம்முடைய ஆவியினால் என்னை அபிஷேகம் செய்வார் என்றும் நான் ஜெபிக்கிறேன், அது தேவனுடைய மகிமைக் காகவே. அதை அவர் அருளுவாராக. இப்போது, மெதுவாக நாம் அனைவரும் இதை இப்படி முணுமுணுப்போம், "கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன்" என்று அல்ல, "இப்போது நான் விசுவாசிக்கிறேன்" என்று. அதை அமைதியாகப் பாடுவோம். இப்போது நான் விசுவாசிக்கிறேன், இப்போது நான் விசுவாசிக்கிறேன், எல்லாம் கூடும், இப்போது நான் விசுவாசிக்கிறேன்; இப்போது நான் விசுவாசிக்கிறேன், இப்போது நான் விசுவாசிக்கிறேன். (பிதாவே, நான் ஜெபிக்கிறேன்...?...) ...கூடும், இப்போது நான் விசுவாசிக்கிறேன். இப்போது, பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். தேவனுடைய மகிமைக்காக, தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இங்குள்ள ஒவ்வொரு ஆவியையும் என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறேன். 98  இப்போது, அம்மா, இன்றிரவு இங்கு நீங்கள்தான் முதல் நோயாளி என்று நினைக்கிறேன், நான் உங்களிடம் ஒரு நிமிடம் பேச விரும்புகிறேன். நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்பதை இப்போது காண்கிறேன், ஏனெனில் உங்கள் ஆவி வரவேற்கப்பட்டதாக வருகிறது. இப்போது, நீங்கள் ஒரு நாத்திகராக இருந்திருக்கலாம், அல்லது ஒரு விமர்சகராக இருந்திருக்கலாம். நீங்கள் அப்படி இருந்திருந்தால், நான் அதை அறிந்திருப்பேன். ஆனால் நீங்கள் ஒரு விசுவாசி, உங்கள் ஆவி இப்போது என்னிடம் வருகிறது. ஆனால் இப்போது, நமது எஜமானர் கிணற்றருகே இருந்த பெண்ணிடம் அவளது பிரச்சனை எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் வரை பேசினார். பின்னர் அவர் பேசியபோது, அவளது பிரச்சனையைக் கண்டுபிடித்தார், அவளது பிரச்சனை என்ன என்பதை அவர் வெளிப்படுத்தினார், அப்போதே அவர் மேசியா என்று அவள் விசுவாசித்தாள். இப்போது, நீங்களும் நானும் அந்நியர்கள், அப்படித்தானே? நாம் இருவருக்கும் தெரியாது... அது சரிதானா? அது உண்மை என்றால், உங்கள் கையை உயர்த்துங்கள், அதனால் நாம் ஒருவருக்கொருவர் முற்றிலும் அந்நியர்கள் என்பதை பார்வையாளர்கள் பார்க்க முடியும். உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, என் வாழ்வில் உங்களைப் பார்த்ததில்லை அல்லது உங்களை அறிந்ததில்லை. நாம் சந்திப்பது இதுவே முதல் முறை, ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்பது எனக்குத் தெரியும். விரைவாக அது ஒரு காரியத்தைக் கண்டறிகிறது. 99  "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" என்று நாத்தான்வேல் வந்தபோது அவனிடம் சொன்ன நமது கர்த்தர் மேல் இருந்த அதே ஆவி. இப்போது, நமது கர்த்தராகிய இயேசு சித்தங்கொண்டால்... பார்வையாளர்களில் யாருக்காவது இந்த அம்மாவைத் தெரியுமா? இங்கு யாருக்காவது இவரைத் தெரியுமா? சரி. அப்படியானால் அவள் உண்மையான பெண்தானா என்பது உங்களுக்குத் தெரியும். ஆம் அவர் அப்படித்தான். அது சரி. சரி இப்போது, அந்த அம்மா எதற்காக இங்கே வந்திருக்கிறார் என்பதைப் பரிசுத்த ஆவியானவர் எனக்குத் தெரியப்படுத்தினால், அங்கே எத்தனை பேர் அந்த நிமிடத்தில் விசுவாசிப்பீர்கள், அப்போதே விசுவாசித்து, "நான் அதை ஏற்றுக்கொள்வேன்" என்று சொல்வீர்கள்? அவர் அதை அருளுவாராக, சகோதரி. அவர் அதைச் செய்வார் என்பதே அவரில் இருக்கும் என்-என் நம்பிக்கை. நீங்கள்-நீங்கள் இங்கு வாழ விரும்புகிறீர்களா? இது ஒரு உரையாடல்தான். ஆம், அது ஒரு... 100  இப்போது, உங்களுக்குத் தெரியும், இப்போது அங்கே-ஏதோ நடந்து கொண்டி ருக்கிறது. இப்போது, பார்வையாளர்கள் இந்த நேரத்தில் பார்க்க முடிந்தால், உங்களுக்கும் எனக்கும் இடையில் வரும் அவருடைய பிரசன்னத்தை, ஒரு ஒளியை. நீங்கள் ஒரு-ஒரு-ஒரு ஆஸ்துமா நிலையால் அவதிப்படுகிறீர்கள். உங்களுக்கு இருக்கிறது... நீங்கள்-நீங்கள் நிறைய இருமுகிறீர்கள், மற்றும்-மற்றும் அது ஒரு ஆஸ்துமா, ஒரு வறட்டு இருமல். சமீபத்தில்தான் உங்களுக்குச் சில தொந்தரவுகள் இருந்தன. அது ஒரு... அது சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு. உங்களுக்கு ஒரு இரத்தக் கசிவு ஏற்பட்டது, ஒரு மூளை இரத்தக் கசிவு. நீங்கள்-நீங்கள்-நீங்கள் பல வருடங்களாக ஒரு விசுவாசியாக இருந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒரு இளம் பெண்ணாகப் பின்னோக்கிச் செல்வதை நான் பார்க்கிறேன். உங்களுக்குச் சில சுகமளிப்புகள் கிடைத்திருந்தன. அது ஒரு மனிதர். அது ஒரு... இன்றைய உடைக்குச் சற்று வித்தியாசமாக உடை அணிந்த ஒரு மனிதர் அவர். அது உங்கள் கணவர்; அவருக்கு ஒரு வகையான... அது ஒரு வாத நோய் அல்லது அது போன்ற ஏதாவது ஒன்றாக இருந்திருக்க வேண்டும். அவர்... ஒரு ஊன்றுகோல் அல்லது அது போன்ற ஒன்று தெரிகிறது. நீங்கள்-நீங்கள் பல வருடங்களாக ஒரு விசுவாசியாக இருந்திருக்கிறீர்கள். நீங்கள்-நீங்கள் குணம டைந்து விட்டீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் உங்கள் வழியில் சந்தோஷமாகச் செல்லலாம்; இயேசுகிறிஸ்து உங்களைச் சொஸ்தமாக்குகிறார். வாருங்கள், ஐயா, வருவீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் என்று நினைக்கிறேன், ஐயா. ஓ, நீங்கள் ஏரியில் உள்ள பத்து சென்ட் கடையில் இருந்தீர்கள். சரி, நீங்கள் என்னிடம் பேசினீர்கள். சரி, உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அந்த அளவுக்கு நாம் அந்நியர்கள்தான். உங்கள் பிரச்சனை என்னவென்று தேவனால் என்னிடம் சொல்ல முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். சரி, அவர் அதைச் செய்தால், அவரை உங்கள் பரிகாரியாக நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? 101  உங்கள் பிரச்சனை ஒரு கட்டி. அந்தக் கட்டி உங்கள் காலில் இருக்கிறது. அது முழங்காலுக்குச் சற்று மேலே இடது காலில் இருக்கிறது மற்றும்... அது சரிதானா? அவரை உங்கள் பரிகாரியாக ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படியானால், தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், இந்தக் கட்டியைக் கண்டிக்கிறேன். அது உங்களை விட்டு நீங்கிப் போகட்டும். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே. மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, உங்கள் சுகத்திற்காக தேவனைத் துதித்துக்கொண்டு செல்லுங்கள். நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? விசுவாசம் மட்டுமே வையுங்கள். சந்தேகப்படாதீர்கள். இப்போது பார்வையா ளர்களில், அது என்னை விட்டுச் சென்று பார்வையாளர்கள் மேல் சென்றது. என்னைப் பார்த்தபடி கருப்பு உடையில் அங்கு அமர்ந்திருக்கும் அந்த அம்மாவின் மேல் தங்கியிருக்கிறது. நீங்கள் ஒரு-ஒரு-ஒரு நரம்புத் தளர்ச்சியால் அவதிப்படுகிறீர்கள், அப்படித் தானே? இதனால் உங்களுக்கு வயிற்றுப் பிரச்சனை ஏற்படுகிறது. உங்கள் வயிற்றில் உணவு புளித்துப்போகிறது மற்றும் அதுபோன்ற காரியங்கள். சொல்லப்போனால், உங்களுக்கும் நிறையப் பிரச்சனைகள், சில துக்கங்கள் இருந்தன. நீங்கள் ஒரு அன்பானவரை இப்போதுதான் இழந்தீர்கள். அது கொல்லப் பட்ட கணவரோ அல்லது அது போன்ற ஒருவரோ என்று நான் நம்புகிறேன். அதுதான் உங்களை நரம்புத் தளர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. அது உண்மைதான். ஆனால் உங்கள் வயிற்றுப் பிரச்சனை உங்களை விட்டு நீங்கிவிட்டது, சகோதரி. நீங்கள் இப்போது குணமடைந்து விட்டீர்கள். உங்கள் விசுவாசம் உங்களை இரட்சித்தது. இப்போது, உங்கள் வழியில் சந்தோஷமாகச் செல்லுங்கள். 102  இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டு அங்கே பின்னால் அமர்ந்திருக்கும் அம்மாவும் நரம்புத் தளர்ச்சியோடு இருந்தார், ஒரு நரம்புத் தொந்தரவு. பயப்பட வேண்டாம், சகோதரி. நீங்கள் சரியாகிவிடுவீர்கள். தொப்பியில் ஒரு இறகு தொங்குவது போல நின்று கொண்டிருக்கிற நீங்களும் நரம்புத் தளர்ச்சியால் அவதிப்படுகிறீர்கள். பயப்பட வேண்டாம். நீங்கள் சரியாகிவிடுவீர்கள். புரிகிறதா? தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். பய பக்தியாக இருங்கள்; உங்கள் முழு இருதயத் தோடும் விசுவாசியுங்கள்; நீங்கள் கேட்பதை நீங்கள் பெற முடியும். இப்போது, நாம்... இதுதான் நோயாளியா, பில்லி? அம்மா, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் அல்லவா? எனக்கு உங்களைத் தெரியாது. என் வாழ்வில் உங்களை நான் பார்த்ததே இல்லை. நிச்சயமாக உங்களுக்குத் தெரியும், இங்கே நின்று உங்களுடன் பேசும்போது, உங்கள் சகோதரனைத் தவிர வேறு ஏதோ ஒன்றின் பிரசன்னத்தில் நீங்கள் இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். பார்வையாளர்கள் நோயாளிகள் வரும்போது அவர்களைப் பார்த்தால், அது அவர்களைத் தாக்கும்போது கவனித்துப் பாருங்கள். 103  அந்த அம்மா உணருகிறார். இப்போது, நான் உங்களிடம் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறேனோ, அந்த அளவுக்கு அவர் எனக்கு வெளிப்படுத்துவார். ஆனால் கர்த்தராகிய இயேசு உங்கள் பிரச்சனை என்னவென்று எனக்குக் காட்டினால், உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா? நீங்கள் இருதய நோயால் அவதிப்படுகிறீர்கள். உங்களுக்கு இருதய நோய் உள்ளது. நீங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர் இல்லை. உங்களுக்குக் கருமையான முடி கொண்ட ஒரு கணவர் இருக்கிறார். அவர் முடியை வகுந்து... அதுபோலப் பின்னால் சீவுகிறார். அவர் ஒரு போதகர். அவருடைய பெயர் ஹாரி யங், வணக்கத்திற்குரிய ஹாரி யங். அவர் முதுகு வலியால் அவதிப்படுகிறார். நீங்கள்-நீங்கள் கனடாவில் இருந்து வந்திருக்கிறீர்கள். இப்போது கண்ணீர் விழுந்த அந்தக் கைக்குட்டையை எடுத்து, அவர் மேல் வையுங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நீங்கள் இருவரும் குணமடைந்துவிட்டீர்கள். வீட்டிற்குச் சென்று சொஸ்தமாகுங்கள். 104  தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் விசுவாசிக்கிறீர்களா? இப்போது விசுவாசம் மட்டும் வையுங்கள். சந்தேகப்பட வேண்டாம், ஆனால் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள்; விசுவாசிப் பதற்குரிய விசுவாசம் உங்களிடம் இருந்தால், நீங்கள் கேட்பதை நிச்சயமாக நீங்கள் பெற முடியும். உங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. அவருடைய பிரசன்னம் இங்கே இருக்கிறது. அங்கே ஒரு கறுப்பு ஆவி தொங்குவதை நான் பார்க்கிறேன். உங்களுக்கு வலிப்பு நோய் இருக்கிறது, அப்படித்தானே? சுற்றிலும் ஒரு சிவப்பு நிறத்துடன் அங்கே அமர்ந்திருக்கும் அந்த அம்மா... அவர் அதை இழுக்கிறார். நீங்கள் கீழே விழும் அளவுக்கு உங்களுக்கு அந்தத் தாக்குதல்கள் இருந்தன. நீங்கள் எனக்கு ஒரு அந்நியர், ஆனால் அது சரிதான். அங்கே அந்த இருண்ட பொல்லாத ஆவி இருக்கிறது. அனைவரும் உங்கள் தலைகளைத் தாழ்த்துங்கள். கர்த்தராகிய தேவனே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, அவனுக்குத் தன் நேரம் வந்துவிட்டது என்று தெரியும். பொல்லாத ஆவியே, அவளை விட்டு வெளியே வா. நீ இனி அவளை வதைக்கக் கூடாது என்று ஜீவனுள்ள தேவனுடைய பெயரால் உனக்கு ஆணையிடுகிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அவளை விட்டு விலகு. அவளை விட்டு வெளியே வா. சரி. அம்மா, நீங்கள் உங்கள் கால்களில் எழுந்து நிற்கலாம். உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இப்போது, மீதமுள்ள நீங்கள் விரும்பினால் உங்கள் தலைகளை உயர்த்தலாம். சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மா. வீட்டிற்குச் சென்று சந்தோஷமாக தேவனைத் துதியுங்கள். 105  இப்போது, பார்வையாளர்கள், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்ல விரும்பினால், ஏன் சற்று... தேவன் ஆராதனைக்குரிய ஆவியானவர். அவருக்குத் துதியைச் செலுத்துங்கள். அவர் பாத்திரர். அவர் துதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். இன்றிரவு இங்கிருந்து எந்த ஒரு நபரும் முழுமையாகச் சொஸ்தமாக்கப் படாமல் வெளியே செல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. அம்மா, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும்? நான் அவருடைய ஊழியக்காரன், அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு என்ன பிரச்சனை என்று நான் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், உங்களுக்காக ஜெபித்து, உங்கள் மீது கைகளை வைத்தால் கூட, எப்படியும் நீங்கள் அதை விசுவாசிப்பீர்கள், அப்படித்தானே? நீங்கள் எப்படியும் அதை விசுவாசிப்பீர்கள். ஆனால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதை நான் கண்டுபிடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், ஏனென்றால் அது உங்களுக்கே தெரியாது. அது சரிதான். அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. உங்கள் கல்லீரலில் ஏதோ பிரச்சனை இருக்கிறது, அது புற்றுநோயாக இருக்குமோ என்று நீங்கள் பயப்படுகிறீர்கள். அது நிச்சயமாக அதுதான். அது சரிதானே? அது நிச்சயமாக அதுதான்... அது சரிதான். சரி, இயேசுகிறிஸ்து உங்களை குணமாக்கிவிட்டார் என்று நான் உங்களிடம் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? 106  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, சாத்தானே, இந்தப் பெண்ணை அகால மரணத்திற்குள்ளாக்க வந்திருக்கிறாய், அவளை விட்டு வெளியே வா. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவளை விட்டுப் போ. இப்போது, சகோதரி, சந்தோஷமாக, மகிழ்ச்சியோடு திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் விரும்புவதைச் சாப்பிடுங்கள், மேலும்... செல்லுங்கள். கர்த்தராகிய இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக. ஓ, நான் அவரை எவ்வளவு நேசிக்கிறேன், அவருடைய பிரசன்னம், அவருடைய மகா பெரிய அபிஷேகம், ஆசீர்வாதங்கள் மற்றும் வல்லமை எப்படி மக்கள் மேல் இருக்கிறது. இப்போது, நீங்களெல்லாரும் எழுந்து நின்று இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது பார்வையாளர்கள் முழுவதும் பரவியிருக்கிறது. நிச்சயமாக நீங்கள் விசுவாசிக்கலாம். 107  ஆமென். ஓ, ஆச்சரியமே. இதை நினைவில் கொள்ளுங்கள், கர்த்தருடைய நாமத்தினாலே இதை நான் சொல்கிறேன், இன்று இரவு இங்கே வந்திருக்கும் போதகர்களே, இதற்குப் பிந்தைய நாட்களிலும், ஏன் வாரங்களிலும் கூட, உங்கள் சபையிலுள்ள சிலர் உங்களிடம் வந்து சொல்வார்கள்... பெண்கள் சொல்வார்கள், "பெண்களுக்குரிய அந்தப் பிரச்சனை என்னை விட்டு நீங்கிவிட்டது. எனக்குத் தெரியவில்லை. அது என்னை விட்டுப் போய்விட்டது." வயிற்றுப் பிரச்சனை மற்றும் பிற வியாதிகள் உள்ளவர்கள் வந்து, தாங்கள் குணமடைந்துவிட்டதாகக் கூறுவார்கள். அவர்கள் குணமடைந்து விட்டார்கள், ஆனால் அது அவர்கள் வழியே மிக வேகமாக நகர்வதனால், அது எங்கே போகிறது என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அவர்களின் விசுவாசம் அவர்களை—அவர்களைச் சொஸ்தமாக்குகிறது. நிச்சயமாக நீங்கள் என்னை விசுவா சிக்கலாம். நான் உண்மையைச் பேசுகிறேன், நான் உங்களுக்கு உண்மையைத்தான் சொல் கிறேன் என்று தேவன் சாட்சியளிக்கிறார். ஓ, ஒரு கூட்டுக்குள் முடங்கி உட்கார்ந்தி ருக்காதீர்கள். உங்கள் விசுவாசம் தேவனுக்குத் தெரியட்டும். அவரை விசுவாசியுங்கள். ஏன், நீங்கள் பயன்படுத்தினீர்கள்...?… நாம் அவருடைய பிரசன்னத்திற்கு முன்பாக, பரலோக ராஜாவாகிய, அவருடைய மகத்துவத்திற்கு முன்பாக இருக்கிறோம். நீங்கள் விசுவாசம் வைத்த பின்பு, அவருடைய ஆசீர்வாதங்கள் உங்கள் அனைவரின் மீதும் தங்குவதாக. 108  இதிலே... அல்லது இதுவா—இதுவா... ஐயா, நீங்கள் தான் நோயாளியா? சரி, என்னை மன்னியுங்கள். நான் சுயநினைவின்றி இல்லை. ஆனால் இது... நாம் ஒருவருக்கொருவர் முன்பின் தெரியாதவர்கள். ஆனால் நாம் இருவருமே தேவனுக்கு முன்பாக அந்நியர்கள் அல்ல. நாம் பிறந்ததிலிருந்தே தேவன் நம் இருவரையும் அறிந்திருக்கிறார். நாம் சாப்பிட்ட ஒவ்வொரு பருக்கை உணவையும் அவரே நமக்கு ஊட்டினார், நம் முதுகில் துணிகளை உடுத்தினார், நாம் குடிக்கும் தண்ணீரையும், நாம் சுவாசிக்கும் காற்றையும் நமக்குக் கொடுத்தார். இப்போது, நாம் அந்நியர்களாக இருந்து, பல மைல்களுக்கு அப்பால் பிறந்திருந்தாலும், ஒருவேளை... மேலும் ஓ, தேவன் விரும்பினால், சில காரியங்களை எனக்கு வெளிப்படுத்த முடியும்... இப்போது, அவர் எனக்குக் கொடுத்த இந்த உடையுடன் இங்கே நின்றிருந்தால், உங்களுக்கு சுகம் தேவைப் பட்டால் அவரால் உங்களைச் சுகப்படுத்த முடியாது. உங்களுக்கு என்ன தேவை என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒருவேளை... அவர் இங்கே நின்றிருந்தால் அவரால்—அவரால் உங்களைச் சுகப்படுத்த முடியாது, ஏனென்றால் அவர் உங்களிடம் சொல்வார், "நான் அதை கல்வாரியிலேயே செய்துவிட்டேன்." ஆனால், அது அவர்தான் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக அவர் செய்யக்கூடிய ஒரே காரியம்... நீங்கள் யார், அல்லது உங்களைப் பற்றிய காரியங்கள், அதுபோன்ற எல்லாவற்றையும் அவர் சொல்வார். அது சரிதானே? நீங்கள் யார் என்பதை அறிந்துகொள்வதைப் பொறுத்தவரை… இப்போது, அது சிலசமயம் மக்களைத் தாக்குகிறது. "அது வேதவசனம் அல்ல" என்று சொன்னார்கள். ஓ, ஆம் அது வேதம் தான். இயேசு சொல்லவில்லையா, "நீ சீமோன். இதுமுதல் நீ பேதுரு எனப்படுவாய்." என்று? அது சரிதானே? நிச்சயமாக, சரி, என்… காரியங்களைச் சந்தேகமாகப் பார்க்காதீர்கள். நீங்கள்—நீங்கள்—நீங்கள் ஆராதனைக்குத் தடையாக இருக்கிறீர்கள். 109  இப்போது, உங்கள் பிரச்சனை என்னவென்று தேவன் எனக்கு வெளிப் படுத்தினால், உங்களுக்குச் சுகம் தேவைப் பட்டால், அல்லது உங்களுக்கு என்ன தேவையோ அதை, அது குடும்பப் பிரச்சனையாகவோ, பணப் பிரச்சனையாகவோ, எதுவாக இருந்தாலும் நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் வேண்டும்… அதற்காக உங்களிடம் ஒரு சரியான காரணம் இருந்தால், தேவன் அந்தக் காரணத்தைக் கேட்பார். நீங்கள் ஒரு விசுவாசி. நீங்கள் குறை சொல்லுபவர் அல்ல. நீங்கள் ஒரு விசுவாசி. மேலும் நீங்கள் இருதயக் கோளாறு மற்றும் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். அது சரிதான். சொல்லப்போனால், சில தொடர்புகள் இருந்திருக்கிறது. உங்களுக்கு ஒரு மனைவி இருக்கிறார், அவள் மிகவும் பதட்டமாக இருக்கிறாள். அங்கே ஏதோ ஒரு வழி இருக்கிறது... நீங்கள் ஏதோ அனுப்புவதை நான் பார்க்கிறேன். அது ஒரு செய்தி. அது ஒரு தந்தி, அல்லது எனக்கு நீங்கள் அனுப்பிய ஏதோ ஒரு செய்தி. நான் உங்களுக்கு ஒன்றை அனுப்பியிருந்தேன்... உங்களுக்கு மிகவும் மோசமான ஒரு நிலைமை இருந்தது. நான் உங்களுக்கு ஒரு சிறிய துணியையோ அல்லது ஏதோ ஒன்றையோ அனுப்பினேன், அதை—அதை—அதை நீங்கள் அணிந்துகொண்டீர்கள். அது உண்மை. அது நானல்ல. அது அவர்தான். இப்போது இது நான். அப்போது அந்த சத்தம் கேட்டதா? அது நானல்ல. அது அவர்தான். அவர் சொன்னது எதுவானாலும் அது உண்மைதானே? அது உண்மை. உங்கள்—உங்கள் பெயர் ஆர்தர் என்று நான் பார்க்கிறேன். உங்கள் கடைசி பெயர்...?... அதுபோல ஏதோ ஒன்று. நீங்கள் 150 முல்லர் தெருவில் வசிக்கிறீர்கள். நீங்கள் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறீர்கள். உங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் எண் 9-B. அது சரிதானே? வீட்டிற்குச் செல்லுங்கள். உங்கள் மனைவியின் மீதும் கைகளை வையுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, இந்த மனிதர் சுகமடைவாராக. 110  தேவன்மேல் விசுவாசம் வையுங்கள். அவிசுவாசமாயிருக்க வேண்டாம். ஆனால் எல்லாம் கூடும் என்று விசுவாசியுங்கள். அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அங்கே கைகளைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் சிறு பெண்ணே? நீங்கள் குடல் பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்கள் அல்லவா? என்னவாக இருந்தாலும்... ஒருவேளை தேவன்... உங்கள் விசுவாசம் இங்கே மேலே வந்து என்னைத் தொட்டு, நீங்கள் யார் என்பதை அறியமுடிந்தால், அங்கே உட்கார்ந்திருக்கும் உங்களை நான் அறிந்துகொள்வது சாத்தியமற்றது... உங்களுக்குக் கண் பிரச்சனையும், குடல் பிரச்சனையும் இருக்கிறது. அது சரிதானே? இயேசு கிறிஸ்து அதிலிருந்து உங்களைச் சுகமாக்குகிறார். உங்கள் கால்களில் எழுந்து நின்று, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். 111  கர்த்தராகிய இயேசு ஸ்தோத்தரிக்கப் படுவாராக. அங்கே உட்கார்ந்திருக்கிறீர்களே ஐயா, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒரு—ஒரு மலக்குடல் பிரச்சனையோடு அமர்ந்திருக்கிறீர்கள். அது சரிதானே? ஒரு நிமிடம். அந்த மனிதனிடமிருந்து ஒரு இருண்ட கோடு ஓடுகிறது. இப்போது, காத்திருங்கள், இந்தக் கட்டடத்தின் அந்தப் பகுதியில் வேறெதோ தவறாக இருக்கிறது அது... ஏன், அது இங்கே கையைத் தூக்கிக்கொண்டிருக்கும் இந்த மனிதனிடம் வருகிறது. அங்கே அமர்ந்திருப்பது கணவனும் மனைவியும். உங்கள் இருவருக்கும் மலக்குடல் பிரச்சனை இருக்கிறது. உங்கள் இருவருக்கும் அப்படித்தானே? அது சரி என்றால் உங்கள் கைகளை உயர்த்துங்கள். இப்போது, நீங்கள் மூவரும் செல்லலாம். இயேசு கிறிஸ்து உங்கள் மூவரையும் சுகமாக்குகிறார். நீங்கள் நலமாக வீட்டிற்குச் செல்லலாம். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். அன்பான சகோதரியே, இங்கே வாருங்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? இந்தப் பிரச்சனை உங்களை விட்டு நீங்கும் என்று விசுவாசிக்கிறீர்களா? சர்வவல்லமையுள்ள தேவனே, ஜீவனின் அதிபதியே, நன்மையான எந்த ஈவையும் கொடுக்கிறவரே, சகோதரியின் மேல் உமது ஆசீர்வாதங்களை அனுப்பி அவளைச் சுகமாக்கும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் கேட்கிறேன். ஆமென். இப்போது, நீங்கள் என்னை அவருடைய ஊழியன் என்று விசுவாசித்தால், தேவனுக்கு நன்றி செலுத்திச் செல்லுங்கள். அது உங்களை விட்டுப் போய்விட்டது. "தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லிக்கொண்டே செல்லுங்கள். 112  சரி. நீங்கள் வருகிறீர்களா, அம்மா. என்னை அவருடைய ஊழியனாக, கர்த்தருடைய ஊழியனாக விசுவாசிக்கிறீர்களா? நாம் ஒருவருக்கொருவர் முன்பின் தெரியாதவர்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை என்று தேவன் எனக்குத் தெரியப்படுத்தினால், நீங்கள் உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்வீர்களா? அது உங்கள் முதுகு. அது சரிதானே? அப்படியானால் நீங்கள் சுகமடைந்துவிட்டீர்கள், அல்லவா? "கர்த்தராகிய இயேசுவே உமக்கு நன்றி. கர்த்தராகிய இயேசுவே உமக்கு நன்றி," என்று சொல்லிக்கொண்டே, மகிழ்ச்சியோடு உங்கள் வழியே செல்லுங்கள். 113  வாருங்கள் அம்மா. நீங்கள் இங்கே வருவதற்கு முன்னால் உங்கள் பிரச்சனை என்னவென்று தேவன் எனக்குச் சொன்னால், உங்கள் சுகத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா, அம்மா? ஏற்றுக்கொள்வீர்களா? இருதயக் கோளாறு தான் உங்களைத் தொந்தரவு செய்கிறது. அது சரிதானே? உங்களுக்கு மற்ற காரியங்களிலும் சிக்கல்கள் இருக்கின்றன. இயேசு கிறிஸ்து உங்களைச் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? பிதாவே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே, மனித வாழ்வின் இந்த முதல் தரமான எதிரி இந்தப் பெண்ணை விட்டு நீங்குவதாக. இயேசு கிறிஸ்துவினிமித்தம், அவருடைய நாமத்தில் இதைக் கேட்கிறேன். ஆமென். சந்தோஷமாக, மகிழ்ச்சியோடு செல்லுங்கள். தேவன் உங்களை எப்படிச் சுகமாக்கினார் என்று உங்கள் சுகத்தைப் பற்றி எனக்கு எழுதித் தெரிவியுங்கள். சரி. அம்மா, நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். ஒரு நிமிடம் அங்கேயே நில்லுங்கள். நான் அவளுக்கு இருதயக் கோளாறு என்று குறிப்பிட்டபோது, உங்களுக்கு ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது, இல்லையா? ஏனென்றால் நீங்களும் அதே காரியத்தால் தான் கஷ்டப்படுகிறீர்கள். இப்போது, மகிழ்ச்சியோடு உங்கள் வழியே செல்லுங்கள். நீங்கள் அங்கே உங்கள் இருக்கையில் அமர்ந்திருந்தபோதே சுகமடைந்து விட்டீர்கள். 114  விசுவாசம் வையுங்கள். இப்போது உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். சரி. அம்மா, இந்த வழியே வாருங்கள், நீங்கள்... சர்க்கரை வியாதியிலிருந்து தேவன் உங்களைச் சுகமாக்கி, நீங்கள் நலமாக வீட்டிற்குச் செல்ல அனுமதிப்பார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? அப்படி யானால் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, மகிழ்ச்சியோடு உங்கள் அறைக்குச் செல்லுங்கள். ஆமென். இப்போது உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். மூட்டுவலி ஒரு பயங்கரமான காரியம், இல்லையா? வயிற்றுப் பிரச்சனையும் அப்படித் தான், ஆனால் தேவன் இவையெல் லாவற்றையும் சுகமாக்குகிறவர், அல்லவா? அப்படியானால் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களைச் சுகமாக்கும்படி தேவனிடம் நான் கேட்கிறேன். ஆமென். "என் சுகத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லிக்கொண்டே மேடையைக் கடந்து நடந்து செல்லுங்கள். சரி. நான் அவருக்கு மூட்டுவலியைக் குறிப்பிட்ட போது, உங்களுக்கு ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது, இல்லையா? அந்தப் பிசாசுகள் ஒன்றுக்கொன்று பரிதாபப்படுகின்றன. நீங்களும் சுகமடைந்து விட்டீர்கள். மகிழ்ச்சியோடு உங்கள் வழியே செல்லுங்கள். நீங்கள் இங்கே வர வேண்டிய அவசியம்கூட இல்லை. உங்கள் விசுவாசம் உங்களைச் சொஸ்தமாக்கிற்று. 115  அம்மா, உங்கள் கண்களுக்காக நீங்கள் இங்கே வருகிறீர்கள். நீங்கள் குருடாகி வருகிறீர்கள். அது எப்போதுமே மோசமாகிக் கொண்டே இருக்கிறது. அது சரிதானே? நீங்கள் இப்போது சுகமடைந்துவிட்டீர்கள். தேவனைத் துதித்து, நன்றி சொல்லிக்கொண்டே, மகிழ்ச்சியோடு உங்கள் வழியே செல்லுங்கள். உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். என் சகோதரியே, நீங்கள் வரும்போது, விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு என்ன பிரச்சனை என்று தேவன் எனக்கு வெளிப்படுத்தினால், நீங்கள் உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்வீர்களா? உங்களைத் தொந்தரவு செய்யும் ஒரு காரியம் என்னவென்றால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது. அவர் அதிலிருந்து உங்களைச் சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். உங்களுக்கு உங்கள் இருதயத்திலும் ஒரு பிரச்சனை இருக்கிறது. உங்கள் இருதயத்தில் ஏதோ இருக்கிறது. அது அன்பான ஒருவரைப் பற்றியது, இல்லையா? அது ஒரு சகோதரி. அது சரிதானே? மேலும் அவள் மாரடைப்பினால் மருத்துவமனையில் ஆக்சிஜன் டென்டின் (oxygen tent) கீழ் இருக்கிறாள். வீட்டிற்குச் சென்று, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே அவள் மீது உங்கள் கைகளை வையுங்கள். உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் எப்போதுமே விசுவாசிக்கப் போவதில்லை. இந்தக் கட்டடத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரையும் சுகமாக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார். அதை நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? அவருடைய மகத்துவம் இப்போது இங்கே இருக்கிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 116  இது மணிக்கணக்காகத் தொடரலாம். உயர் இரத்த அழுத்தம் உள்ள ஒவ்வொருவரும், உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ள ஒவ்வொரு நபரும். நரம்புத் தளர்ச்சியால் தொந்தரவு செய்யப்படும் ஒவ்வொருவரும் உடனே உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். புற்றுநோய் உள்ள ஒவ்வொருவரும் உடனே உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். எந்த வகையான வியாதியும் உள்ள ஒவ்வொருவரும் உடனே உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா? தேவனால் முடியாதா... அவர் மேடையில் இங்கே நின்றுகொண்டிருக்கும்போதே பிசாசு களைத் துரத்த முடியும் என்றால், அங்கேயும் அவரால் அதைத் துரத்த முடியாதா? இங்கே அவர் அசைவாடிக்கொண்டிருக்கிறார். இந்தக் கட்டடத்தின் மேல் அந்த வெளிச்சம் அப்படி நகருவதை உங்களால் பார்க்க முடியவில் லையா? உங்கள் கைகளை உயர்த்தி அவருக்குத் துதிகளைச் செலுத்துங்கள். நீங்கள் முற்றிலும் சாதாரணமாகவும், நலமாகவும் வீட்டிற்குச் செல்லும்படி, இங்கே இருக்கும் எல்லாவற்றையும் சுத்திகரிக்க நான் தேவனிடம் கேட்கப் போகிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 117  சர்வவல்லமையுள்ள தேவனே, உமது குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தி னாலே, உமது வார்த்தையின் அதிகாரத்தின்படி, இங்குள்ள ஒவ்வொரு பொல்லாத ஆவியையும் நான் துரத்துகிறேன். சாத்தானே, நீ ஒரு தோற்றுப்போனவன். இனிமேலும் இந்த மக்களை உன்னால் பிடித்து வைத்திருக்க முடியாது. இன்று இரவு நீ இங்கேயே அம்பலப்படுத்தப்பட்டுவிட்டாய். மேலும் இனிமேலும் அவர்களை உன்னால் பிடித்து வைத்திருக்க முடியாது. அவர்களை விட்டு வெளியே வா. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அவர்கள் ஒவ்வொருவரையும் விட்டு விலகு. இங்குள்ள அனைவரும், உங்கள் கைகளை உயர்த்தி, தேவனைத் துதித்து அவருக்கு நன்றி செலுத்துங்கள். முடவர்களே, உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். எழுந்திருந்து நடங்கள், முடவர்களே. குருடர்களே, நிமிர்ந்து பாருங்கள்; உங்களால் பார்க்க முடியும். செவிடர்களால் கேட்க முடிகிறது. தேவனுக்கு ஸ்தோத்திரம். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே அவர் உங்கள் அனைவரையும் சுகமாக்கிவிட்டார்...